முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் இன்று (பிப்ரவரி 07, 2023) லாபம் கிடைக்க கூடும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் இன்று (பிப்ரவரி 07, 2023) லாபம் கிடைக்க கூடும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களது கடந்த கால உழைபின் அனைத்து பலன்களையும் இன்று அறுவடை செய்வீர்கள். உங்களது முக்கியமான பணிகளை இன்றே முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்று திட்டமிட்டிருந்த பயண திட்டம் இன்னும் சில நாட்களுக்கு தள்ளி போகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் கிரிஸ்டல்

ரிஷபம்:

நெருங்கி பழகும் நபர் ஒருவரின் புதிய ஆற்றல் உங்கள் மனநிலையையும் உயர்த்தி, இன்று உங்களுக்கு இணக்கமான சூழலை உருவாக்கும். சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சந்தித்த ஒரு நபரை சில பயனுள்ள விஷயங்களுக்காக மீண்டும் சந்திக்கலாம். உங்களிடம் நல்லா இருக்கும் நல்ல தொடர்புகளை வைத்து உங்கள் வேலை அல்லது தொழிலை விரிவுபடுத்த இன்று நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - களிமண்ணால் செய்த பெட்டி

மிதுனம்:

நீங்கள் இன்று சில அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம், அது ஒரு நல்ல தொடக்கத்திற்கு வழிவகுக்கும். நெருங்கியவர்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பது இன்று ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தாலோ அல்லது கொடுத்திருந்தாலோ இன்று சிறிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்பிரிங்

கடகம்:

வேறொருவரின் வேலையை நீங்கள் குழப்பியிருந்தால், அதற்கான விளைவுகளை இன்று நீங்கள் சந்திக்க நேரிடும். உங்களின் நெருங்கிய நண்பரிடம் இன்று நீங்கள் சில ரகசிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பலாம். மாலை விழா அல்லது பார்ட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூடைப்பந்து மைதானம்

சிம்மம்:

நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால் இன்று லாபம் கிடைக்க கூடும். உங்களது இன்றைய நாள் குறிப்பாக உங்கள் நண்பர்களுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடவும் நீங்கள் அர்ப்பணிப்பீர்கள். நிலுவையில் இருக்கும் வழக்குகள் சில சாதக நகர்வை காட்ட கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்ட்போர்ட் பாக்ஸ்

கன்னி:

சில நல்ல விஷயங்கள் கை கூட நேரம் எடுக்கும், இன்று நீங்கள் அதை உணர்வீர்கள். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, உங்கள் கடந்த கால செயல்களின் பலன்களை இன்று பெறுவீர்கள். சிக்கலில் இருக்கும் உங்களது நெருங்கிய நண்பருக்கு உங்களின் சரியான ஆலோசனை தேவைப்படலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளியர் குவார்ட்ஸ்

துலாம்:

நீண்ட நாட்களாக குழப்பத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களது இன்றைய நாள் கொஞ்சம் சீராகவும், அமைதியாகவும் செல்லலாம். எதிர்பாராத உறவினர் வருகை இருக்கலாம். வேலைப்பளு காரணமாக நீங்கள் சோர்வடையலாம். ஆனால் உங்கள் வேலை சார்ந்த நற்செய்தி ஒன்று உங்களை உற்சாகப்படுத்த கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிரிஞ்ச்

விருச்சிகம்:

நீங்கள் இதுநாள் வரை பேச அல்லது வெளிப்படுத்த நினைத்த விஷயங்களை இன்று செய்வதற்கு சிறந்த நாள். அதற்கான தைரியத்தையும் உங்களுக்குள் இப்போது நீங்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் நுழைந்த புதிய நபர் உங்களது மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டம்

தனுசு:

உங்கள் கவனம் மற்றும் அறிவாற்றல் நீண்ட நாட்களுக்கு பின் இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இன்று நீங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி சில உறுதியான முடிவுகளை தர கூடும். இன்று நீங்கள் ஒரு முற்போக்கான கல்வி பயணத்தை மேற்கொள்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தலையணை

மகரம்:

இன்று உங்களுக்கு துடிப்பான ஆற்றல் நிரம்பிய நாளாக அமையும்,. சமீபத்தில் செய்த வேலைகளுக்காக பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று நீங்கள் செய்யும் பணி புதிய அர்த்தம் பெறும். உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நம்பிக்கை சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் பணத்தை இன்று புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஃபார்மசி

கும்பம்:

உங்களது ஒரு நெருங்கிய நண்பர் ஒரு பயணத்திற்கு உங்களது துணையை விரும்பலாம். ஆனால் இப்போதைக்கு அவருடன் செல்லாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. தேவைப்படும் அதிக நிதியை ஏற்பாடு செய்ய பெரிய முதலீடு தேவைப்படலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பலகை

மீனம்:

பண விவகாரங்களில் இன்று நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த தடைகள் தற்காலிகமானவை மற்றும் பொருளாதார விஷயம் விரைவில் மீண்டும் சீராகும். நீங்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட விரும்புவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரெயின்போ கிரிஸ்டல்

First published:

Tags: Oracle Speaks, Tamil News