முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 06, 2023) உத்தியோகத்தில் மிகப் பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 06, 2023) உத்தியோகத்தில் மிகப் பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  புதிய வாய்ப்பு தேடி வரும்போது உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளை தூண்டக் கூடிய அனுபவத்தை கைவிடுவது நல்லது. இன்றைய நாள் கொண்டாட்டம் மிகுந்ததாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாவல்

  ரிஷபம்:

  உங்கள் வெற்றியை குறிக்கும் நட்சத்திரங்கள் தென்படுகின்றன. உங்களை சுற்றியுள்ள குழப்பங்கள் அனைத்திற்கும் தெளிவு கிடைக்கும். உங்களின் அன்றாடப் பணிகளை எளிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள். எதையும் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் அணுகவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பை

  மிதுனம்:

  இதற்கு முன் உங்கள் தகவல் தொடர்பு தெளிவானதாக இருந்தது குறித்து நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள். ஏனெனில் இது மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையை பெற்றுத் தரும் மற்றும் நம்பிக்கை கொள்ள வைக்கும். பொது சேவையில் உள்ளவர்கள் பணியில் பிஸியாக இருப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள் அரங்கு செடி

  கடகம்:

  கடந்த சில நாட்கள் உங்களுக்கு மந்தமானதாக இருந்தாலும், இன்றைய நாள் சற்று புத்துணர்ச்சி தருவதாகவும், சமூகத்துடன் இணைந்து கொள்வதாகவும் அமையும். வரையறுக்கப்பட்ட பணிகளை செய்து முடிப்பதால் குதூகலம் ஏற்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டேபிள்

  சிம்மம்:

  இன்றைய தினம் உங்களுக்கான உதவிகள் வந்து சேரும். உங்கள் கருத்திற்கு இதற்கு முன்பு ஆட்சேபனை தெரிவித்திருந்த உங்கள் பெற்றோர் இப்போது அந்தக் கருத்திற்கு ஒப்புதல் தெரிவிப்பார்கள். படிப்படியான வளர்ச்சி நல்ல அறிகுறியாகும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூஃப்டாப்

  கன்னி:

  அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து நீங்கள் அமைதியாக இருப்பது, பிறருக்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். புதிய நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான நாள் இதுவாகும். நீங்கள் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வளர்ப்பு பிராணி விற்பனை கடை

  துலாம்:

  இன்றைய ஆற்றல் முழுவதும் கொண்டாட்டங்களை நோக்கியதாக இருக்கும். எதிர்பாராத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் ஒன்றுகூடி சந்திப்பதற்கான நேரம் இது. உடல்நலனில் சிறிய பிரச்சினை ஏற்படக் கூடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் பாத்திரம்

  விருச்சிகம்:

  ஏதேனும் ஏமாற்றம் உங்கள் மனதை பாதிக்கக் கூடும். இருப்பினும், அதிலிருந்து விரைவாக கடந்து செல்ல வேண்டும். உங்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கும்போது குறிப்பிட்ட ஒற்றை விஷயத்தை விரும்ப வேண்டாம். புதிய விளையாட்டு உங்களை ஈர்க்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர் கொத்து

  தனுசு:

  நிலுவையில் உள்ள பணிகள் வேகமெடுக்கும் நிலையில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. பழைய நண்பரிடம் இருந்து நல்லதொரு அறிவுரை கிடைக்கும். தினசரி வாழ்க்கை மற்றும் பணிகள் இடையே சீரான நிலையை கடைப்பிடிக்க வேண்டும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செய்தித்தாள்

  மகரம்:

  குறுகிய தொலைவுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உண்டு. உங்கள் மேல் அதிகாரி உங்கள் தோள் மீது மிகப் பெரிய பொறுப்புகளை வைக்க உள்ளார். அதை நீங்கள் மறுக்கலாம். உங்களிடம் இருந்து கொஞ்சம் விலகியிருக்க வாழ்க்கை துணை விரும்புகிறார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்க கல்

  கும்பம்:

  புதிதாக ஏற்று கொண்ட பொறுப்புக்கு கொஞ்சம் முயற்சி மற்றும் பொறுமை தேவை. உங்கள் வாழ்வியல் நடவடிக்கையை எளிமையாக மாற்றும் யோசனைகளை குழந்தைகள் தெரிவிக்கக் கூடும். சிலருடைய ரகசியத்தை பாதுகாப்பது சவால் நிறைந்ததாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாதாம் கேக்

  மீனம்:

  அவசரமான ஆவண நடவடிக்கைகள் உங்கள் நேரத்தை ஆக்கிரமித்து கொள்ளும். எதிர்பாராத நபரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு கிடைக்கும். மாலையில் நெருங்கிய நண்பர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நிதி சார்ந்த நடவடிக்கைகள் இயல்பானதாக இருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பால் பொருள்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News