முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு அதிர்ஷடம் நிறைந்த நாளாக இன்று (பிப்ரவரி 05, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு அதிர்ஷடம் நிறைந்த நாளாக இன்று (பிப்ரவரி 05, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு செலவுகள் நிறைந்த நாளாக அமையும். குழப்பமான நேரங்களில் பயணத்திட்டத்தை மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். பண விஷயங்களை நிதானத்துடன் கையாளவும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நுழைவுவாயில்

  ரிஷபம்:

  இன்றைக்கு லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும் என்பதால் எந்த வாய்ப்புகளையும் தவறவிடாதீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள் தற்போது பணிபுரியும் வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தினர் உங்களிடமிருந்து கூடுதல் நேரத்தை எதிர்பார்க்கலாம். ஒரு புதிய ஆரோக்கிய வழக்கத்தைப் பின்பற்றுவது உங்களை மனரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எண்ணிய சில பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா இதழ்.

  மிதுனம்:

  உங்கள் வீட்டைப் புதுப்பிக்கும் எண்ணம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கலாம். புதிய வருமானம் உங்கள் வழியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நல்ல நேரத்தை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவும். உங்கள் மீது ஒரு புதிய நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது. ஆற்றல்கள் நேர்மறையானவை மற்றும் கடந்த காலத்தில் தொந்தரவாகவும், எதிர்மறையாகவும் இருந்த அனைத்தும் விலகும் சூழல் நிறைந்த நாளாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தர் சிலை

  கடகம் :

  வாழ்க்கையில் எதையும் காத்திருந்து பெறக்கூடிய நாள் இன்று. உங்களின் திட்டங்களில் கவனம் சிதறினாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள். எதிலும் நிதானம் தேவை. வேலையில் இருக்கும் ஒருவர் உங்களின் திறமையை வியந்துப்பார்ப்பார்கள். இருந்தப்போதும் பணியிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வீடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் தேவையில்லாத சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உருவப்படம்

  சிம்மம் :

  உங்களுக்கான புதிய பயணம் தொடங்கும் நாளாக உங்களுக்கு அமையும். உங்களின் நேர்த்தியான அணுகுமுறை உங்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். வேலையில் நெட்வொர்க்கை அதிகரிக்க உங்கள் ஆளுமைத்திறன் உதவியாக இருக்கும். நேர்மையான கருத்துக்களால் பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். திட்டமிடப்படாத சில நிகழ்வுகளில் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இனிப்பு பெட்டி

  கன்னி:

  யாரையும் எளிதில் நம்பி விடவேண்டாம். பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதால் நிதானம் தேவை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி நல்ல பலன் அளிக்கும். காலையில் செய்ய முடியவில்லை என்றாலும் மாலை நேரங்களில் முயற்சிக்கவும். நெருங்கிய உறவுகளுடன் வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அம்புக்குறி

  துலாம்:

  பிரச்சனைகளை எளிதில் கையாளும் திறன் உங்களுக்கு இருக்கும். முன்னேற்றத்திற்கான நேரம் இது இல்லை. இருந்தப்போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள். புதிதாக வரக்கூடிய பிரச்சனைகளை நேர்த்தியுடன் கையாளும் திறன் உங்களுக்கு உள்ளது. பதவி உயர்வு பற்றிய பேச்சுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கலாம். நிறைவேற வேண்டும் என்றால் முயற்சியைக் கைவிடாதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாக்கிங் ஸ்டிக்

  விருச்சிகம் :

  நல்ல உள்ளம் உள்ளவர்களுக்கு அழகான விஷயங்கள் நடக்கும் நாள் இன்று. இதுவரை உங்கள் அணுகுமுறையில் நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்றால் வேகமாக முன்னேறும் சூழல் ஏற்படும். உங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். முடிந்தால் உதவி செய்யுங்கள். எலக்ட்ரானிக் கேஜெட்கள் மற்றும் அவற்றின் ஷாப்பிங் உங்களைப் பிஸியாக வைத்திருக்கலாம். நீங்கள் ஒரு புதிய சொத்தை வாங்க நினைத்திருந்தால் இது சரியான நேரமாக உங்களுக்கு அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பெட்டி

  தனுசு:

  அதிர்ஷடம் நிறைந்த நாளாக உங்களுக்கு இன்று அமையும். நண்பர்களுடன் ஷாப்பிங் செல்வதற்கு திட்டமிட்டிருந்தால், அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தோட்டக்கலையில் ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும் அதே சமயத்தில் இதன் மூலம் வணிக யோசனைகளும் வர வாய்ப்புள்ளது. வேலையில் சிக்கல்கள் இருந்தாலும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். சிறந்த முடிவுகளைப் பெற நீங்கள் சில வழிமுறைகளை மாற்ற வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்காக வேறொரு நகரத்திற்கு பயணிக்கும் நிலை ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இளஞ்சிவப்பு பூக்கள்

  மகரம்:

  குடும்பத்துடன் விழாக்களில் கலந்து கொள்ள நேரிடும் சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது உங்கள் எண்ணம் தோன்றும். இதற்கான முயற்சியை மேற்கொண்டாலே இந்த மாத இறுதியில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் யாரையும் பொது வெளியில் விமர்சனம் செய்யாதீர்கள். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆற்றலை அதிக அளவில் மாற்றும் வல்லமை உங்களிடம் உள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய நாணயம்

  கும்பம்:

  இன்பம் நிறைந்த நாளாக அமையும். பழைய நண்பர்களிடமிருந்து சில உதவிகளை நீங்கள் பெறுவீர்கள். எந்த வேலையிலும் அவசரம் இல்லாமல் இருந்தாலே நிச்சயம் வெற்றிக் கிடைக்கும். பெண்கள் அல்லது ஆண்களுக்கு திருமணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. நீங்கள் உண்மையிலேயே சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் பிறரின் உதவியை நாடலாம். கூட்டாண்மையில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மீன்

  மீனம்:

  உங்கள் பணிக்கு எதிராக வழங்கப்படும் வருவாயை உங்களால் அளவிட முடியாமல் போகலாம். வெறுப்பான சூழலை அனுபவிப்பீர்கள். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும் நாளாக அமையும். தனிப்பட்ட மற்றும் தொழிலில் சில விஷயங்களைச் செய்ய நீங்கள் ஆசைப்படுவீர்கள்.வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியில் செல்லும் நிலை ஏற்பட்டாலும், வானிலை உங்கள் பயணத் திட்டங்களை சீர்குலைக்கலாம். எந்த ஆன்லைன் மோசடிகளிலும் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்கவும். மனைவியிடமிருந்து உங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தட்டுகள்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News