ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 31, 2022) வியாபாராம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 31, 2022) வியாபாராம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு தனம் நிறைந்த நாளாக அமையும் என்றாலும் மற்றவர்கள் மீதான கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உங்களது நிறுவனத்தில் தொழில் ரீதியாக அங்கீகாரம் பெறுவார்கள். குடும்பத்தின் மீதான பாசம் அதிகரிக்கும். சகோதரர் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். நீங்கள் எதிர்ப்பார்த்திருந்த ஒரு சுற்றுலா இன்று நடைபெற வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல்

  ரிஷபம்:

  உங்களது வாழ்க்கையில் பணவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும் நாளாக அமையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். கவனச்சிதறல்கள் ஏற்படும் நாளாக அமையக்கூடும். தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காமல் உங்களது மனதைக் கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ளவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல பாட்டில்

  மிதுனம்:

  இன்றைக்குத் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். சமீபத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் உங்களது வாழ்வில் பல திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும். உங்களின் பழைய நெட்வொர்க்கின் உதவியோடு வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். வாழ்வில் ஏற்படும் புதிய சவால்கள் உங்களை எப்போதும் பிஸியாக வைத்திருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ண காகிதம்

  கடகம்:

  ஆன்மீக பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கடந்த கால செயல்களால் வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வங்கித் தொடர்பான சில பணிகளில் உதவிகள் கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்குப் பிடித்த சிற்றுண்டி.

  சிம்மம்:

  இன்றைக்கு குழந்தைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ததும்பும் நாளாக அமையும். பெரியவர்களைப் பொறுத்தவரை சில தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வீட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதைவிட்டு மற்றவற்றில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் நல்லது நடைபெறும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு

  கன்னி:

  இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் திறன் உள்ளது. உங்களின் அணுகுமுறையால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் பாதிக்கப்படலாம். வேலைத் தொடர்பாக புதிய அட்டவணையை உருவாக்க சிறந்த நாள் தான் இன்று.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழ கூடை

  துலாம்:

  உங்களின் உள்மனதில் ஏற்படும் அச்சத்திலிருந்து விடுபட்டாலே இந்த நாள் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் தவிர்க்க நினைக்கும் ஒருவரை மீண்டும் சந்திக்க நேரிடும். உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக சொறி அல்லது தோலில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மென்மையானத் துணி

  விருச்சிகம்:

  இன்றைக்கு உங்களைப் பற்றி தேவையில்லாத வதந்திகள் ஏற்படும் சூழல் அமையும். வாழ்க்கையில் நம்பிக்கையான பல முடிவுகளை எடுப்பீர்கள். பரபரப்பான சூழலில் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு சிட்டுக்குருவிகள்

  தனுசு:

  இன்றைக்கு ஏதாவது ஒரு பணியை செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தால் அதை இன்றே செய்து முடிக்கவும். வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனமும், முன்னுரிமையும் அளிக்கும் நாள் இன்று. உங்களது வாழ்வில் புதிய ஆரோக்கிய வழக்கத்தைத் திட்டமிடுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தகக் கடை

  மகரம்:

  இன்றைக்கு வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும். முக்கியமான ஒன்றை மறுபரிசீலனை செய்யும் மனநிலை உங்களுக்கு ஏற்படும். கண்ணோட்டங்களை மாற்றும் நாளாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

  கும்பம்:

  வியாபாராம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாளாக அமையும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இன்றைக்கு ஒருவரிடம் கடன் கேட்பது நல்லதல்ல. அதிகமாக சாப்பிடுவது உங்களது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மூங்கில் செடி

  மீனம்:

  இன்றைக்கு நிம்மதி நிறைந்த நாளாக அமையும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு உங்கள் நாளை பிரகாசமாக்கக்கூடும். கடன் பிரச்சனைகள் குறையும் நாளாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒளிரும் மின்விளக்கு

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News