ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 30, 2022) பண லாபம் இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 30, 2022) பண லாபம் இருக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட காரியங்களுக்கு இப்போது நற்பலன் கிடைக்க தொடங்கும். உங்களின் முக்கியமான இலக்குகளை இன்று நிறைவு செய்வீர்கள். பயணங்களை ஒத்திவைக்க நேரிடும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு கிறிஸ்டல்

  ரிஷபம்:

  சிலருடைய புத்தாற்றல் உங்கள் மனதுக்கு ஊக்கம் தருவதாக அமையும். சில மாதங்களுக்கு முன்பாக நீங்கள் சந்தித்த நபர் மூலமாக இப்போது பலன் கிடைக்க இருக்கிறது. உங்களின் தொடர்புகள் மூலமாக பணியை விரிவாக்கம் செய்யவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பெட்டி

  மிதுனம்:

  உங்களுக்கான அதிர்ஷ்டம் தேடி வருகிறது. அது நல்லதொரு தொடக்கமாக அமையும். பிறரிடம் கொண்டுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். நீங்கள் கடன் பெற்றிருந்தால் அதனால் துன்பத்தை எதிர்கொள்வீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வளையம்

  கடகம்:

  பணியிடத்தில் பிறருடன் நீங்கள் மோதல் போக்கை கடைப்பிடித்திருந்தால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர் நம்பிக்கைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூடைப்பந்து மைதானம்

  சிம்மம்:

  நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருந்தால் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான தருணம் இது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அவற்றில் சாதகமான மாற்றம் தென்படும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அட்டைப்பெட்டி

  கன்னி:

  நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும். அதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு உங்கள் கடந்த கால செயல்பாடுகளுக்கு பலன் பெறுவதற்கான நேரம் இது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான குவார்ட்ஸ்

  துலாம்:

  நீண்ட கால குழப்பத்திற்கு பிறகு இப்போது அமைதி திரும்புகிறது. உறவினர்கள் உங்களை சந்திக்கக் கூடும். உங்கள் பணியை அங்கீகரிக்கும் வகையிலான புதிய செய்தி வர இருக்கிறது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஊசி

  விருச்சிகம்:

  உங்கள் வாழ்க்கையில் புதிதாக இணைந்துள்ள நபர் உங்களை தொடர்ந்து புன்னகைக்க வைப்பார். மனம் விட்டு பேசுவதற்கும், ஆசையை வெளிப்படுத்துவதற்கும் நீண்ட காலமாக காத்துக் கொண்டு உள்ளீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்

  தனுசு:

  நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் இலக்கு மற்றும் கவனம் சரியான திசையில் செல்ல இருக்கிறது. நீங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளுக்கு இப்போது உறுதியான முடிவுகள் கிடைக்கும். கல்வி சார்ந்த வளர்ச்சி கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தலையணை

  மகரம்:

  இன்றைய நாள் முழுவதும் துடிப்புமிக்க ஆற்றல் நிறைந்திருக்கும். உங்கள் பணிகளுக்கு புதிய அர்த்தம் கிடைக்க இருக்கிறது. நெருக்கமான சிலர் உங்கள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். பணத்தை திட்டமிட்டு செலவழிக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மருந்து விற்பனையகம்

  கும்பம்:

  நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மேம்படுத்த சுயமுயற்சி, உந்துதல் தேவை. நெருங்கிய நண்பர் அவரது பயணத்தில் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறர். இப்போதைக்கு பயணிக்க வேண்டாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி

  மீனம்:

  சில தடைகளை கடந்து பண லாபம் சார்ந்த விஷயங்கள் நடக்க இருக்கின்றன. ஆனால், இந்த தடைகள் தற்காலிகமானதுதான். விரைவில் சகஜ நிலை திரும்பும். சமூக ரீதியாக ஆக்டிவாக இருப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில் கிறிஸ்டல்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News