ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 24, 2022) செல்வாக்கு மிகுந்த நாளாக அமையக்கூடும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 24, 2022) செல்வாக்கு மிகுந்த நாளாக அமையக்கூடும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம் :

  இன்றைக்கு வணிகம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக அமையும். எந்தவொரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தால் அதற்குத் தீர்வு காண்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வண்ண மலர்கள் கொண்ட மலர் செடி

  ரிஷபம்:

  இன்றைக்கு சட்ட விஷயங்களில் ஏதேனும் சிக்கியிருந்தால் நிதானம் தேவை. எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த வேலையையும் கவனமுடன் கையாள வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீலநிற கல்

  மிதுனம்:

  இன்றைக்கு முக்கியமான ஆவணங்களைக் கையாளும் போது கவனமுடன் இருக்க வேண்டும். உங்களின் நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். இருவரிடம் நிலவும் கெமிஸ்ட்ரி மற்றவர்களை பொறாமை அடையச்செய்யும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கண்ணாடியினால் ஆன கிண்ணம்.

  கடகம்:

  இன்றைக்கு உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சில விருந்தினரை மகிழ்விக்க பல முயற்சிகளை கையில் எடுப்பீர்கள். பணியில் கவனமுடன் இருக்க வேண்டும். இன்று செல்வாக்கு மிக்க ஒருவரை சந்திக்க முயற்சி செய்தால், நிச்சயம் நிறைவேறும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பல்பு

  சிம்மம்:

  இன்றைக்கு வெற்றி கிடைக்கும் நாளாக உங்களுக்கு அமையும். உங்களின் சொந்த நலன்களுக்காக நீங்கள் செய்யும் வேலையில் அதிக கவனத்தைச் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நினைத்தக் காரியங்கள் நிறைவேறக்கூடும். நெருங்கிய நண்பர்களிடமிருந்து உணர்ச்சி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜாடி

  கன்னி:

  இன்றைக்கு செல்வாக்கு மிகுந்த நாளாக அமையக்கூடும். அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் தங்கள் ஆணவத்தை வெளிப்படுத்துவதால் மற்றவர்கள் எரிச்சல் அடைவார்கள். வாழ்க்கையில் முடியாது என்று நினைக்கும் காரியத்தை எளிதில் முடிக்கும் மனநிலை உங்களுக்கு ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

  துலாம்:

  இன்றைக்கு நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். வேலை சம்பந்தமாக தொலைத்தூரத்தில் உள்ள நபர்களிடமிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். சிறிது கவனம் சிதறினாலும் பிரச்சனையை சந்திக்க வழிவகுக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கையொப்பம்.

  விருச்சிகம்:

  இன்றைக்கு அலுவலக பணிகளில் கவனமுடன் இல்லாவிடில், பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைத் தவறாக புரிந்துக் கொள்ள நேரிடும் சூழல் உருவாகும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த செயல்கள் உங்களை சில சிக்கல்களுக்கு ஆளாக்க நேரிடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேரை

  தனுசு:

  இன்றைக்கு நீங்கள் எடுக்கும் சுய முடிவுகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். இந்த நாளில் என்ன வேலைகள் செய்தாலும் இடையூறுகள் எதுவும் இருக்காது. உங்களின் ஆற்றல் மற்றும் செயல்திறன் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். உங்களின் நண்பர்களின் யோசனைகள் உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சதுர வடிவிலான பொருள்

  மகரம்:

  இன்றைக்கு உங்களது பார்ட்னருடன் சேர்ந்து செய்யும் வேலைகளில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ? அதை மட்டும் செய்யுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் பெறுவதற்கு பெரும் முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நாற்காலி

  கும்பம்:

  குடும்ப உறுப்பினர்களிடம் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் வேலையில் வெற்றிப் பெறக்கூடிய சூழல் அமையும். வேலைத் தொடர்பான சில ஆவணங்கள் மற்றும் விபரங்கள் இல்லாமல் இருக்கும் சூழல் ஏற்படும். இருந்தப் போதும் சக ஊழியர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா மலர்

  மீனம்:

  இன்று நீங்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் முடிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளால் மகிழ்ச்சியான உணர்வைப் பெறுவீர்கள்.எந்த விதமான புதிய உறுதிமொழிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வழக்கமான சூழ்நிலையை வேறு விதமாகப் பார்க்கும் மனநிலை ஏற்படுவதால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்களின் குவியல்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News