ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 21, 2022) எதிர்பாராத தனவரவின் மூலம் திருப்தி ஏற்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 21, 2022) எதிர்பாராத தனவரவின் மூலம் திருப்தி ஏற்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உங்களின் முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். நீங்கள் புதிதாக எதையும் தொடங்க முயற்சிக்கிறீர்கள் என்றால் எவ்வித தயக்கமும் இன்றி ஆரம்பிக்கலாம். நல்ல நாளாகவே அமையக்கூடும். நீங்கள் சுய மதிப்பீடு செய்து உங்களின் திறனை அதிகரிப்பீர்கள். உங்களது வீட்டில் புனிதமான இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்படவும். மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி படம்

  ரிஷபம்:

  சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எந்த வேலையையும் முயற்சி செய்து மேற்கொண்டீர்கள் என்றால் முன்னேற்றத்தை அடைவீர்கள். மனதில் தெளிவு ஏற்படும் நாளாக அமையும். ஆனால் எந்தவொரு முடிவுகளை எடுப்பதற்கும் காலதாமதம் ஏற்படலாம். வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் விரைவில் கைகூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு மெழுகுவர்த்தி

  மிதுனம்:

  இன்றைக்கு நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத தனவரவின் மூலம் திருப்தி ஏற்படும். உங்களது எல்லா திட்டங்களையும் ஒரே நேரத்தில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த வேலை செய்தாலும் தேவையில்லாத மன அழுத்தம் வேண்டாம். ஆன்மீகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாக வெளிவட்டாரங்களில் நட்பு வட்டம் அதிகரிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரத்தினம்

  கடகம்:

  பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பணி தொடர்பான கோப்புகளைக் கையாளும் போது கவனம் வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சுதந்திரமாக செயல்படக்கூடிய நாளாக இன்று அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் ஸ்படிகம்

  சிம்மம்:

  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். ஆடம்பரமான பொருள்களில் அதீத ஈடுபாடு ஏற்படும். உங்களின் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்படவும். விளையாட்டில் மேன்மை அடையும் நாளாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

  கன்னி:

  உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இன்று அதிகரிக்கும். மனதில் புதுவிதமான மகிழ்ச்சி ஏற்படக்கூடும். நீங்கள் பணத்தைக் கையாள்வீர்கள் என்றால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். கற்பனை தொடர்பான துறைகளில் ஆதாயம் ஏற்படும். தொலைபேசி வாயிலான செய்திகள் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தர் சிலை

  துலாம்:

  இன்றைக்கு மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தலைமைப்பண்பு மேம்படும் நாளாக இன்று அமையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளில் மகிழ்ச்சி அடைவீர்கள். மனை சார்ந்த விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். வீட்டிலிருந்து வரும் ஒரு நல்ல செய்திகள் உங்களை உற்சாகப்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உட்புற ஆலை

  விருச்சிகம்:

  இன்றைக்கு வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் யாருக்கும் எதிரிகள் உங்களுக்கு இருக்க மாட்டார்கள். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். தேவையற்ற பயணங்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படக்கூடும். பண ஆதாயங்கள் ஏற்படக்கூடும். விரைவில் புதிய சொத்துக்களை நீங்கள் வாங்க நேரிடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அறை

  தனுசு:

  இன்றைக்கு பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் நண்பர்களிடமிருந்து சில உதவிகள் ஏற்படக்கூடும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை விரைந்து மேற்கொள்வீர்கள். புதிய வணிக யோசனை எதுவும் இருந்தால் விரைந்து முடிக்கக்கூடிய சூழல் ஏற்படும். வீட்டில் அமைதியான சூழல் ஏற்படாது. இப்போதைக்கு எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருக்கவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏணி.

  மகரம்:

  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். எதிர்பாராத சாலைப்பயணம் மேற்கொள்ளும் சூழல் இன்று அமையக்கூடும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். சாதுர்யமான பேச்சுகளால் நன்மை உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

  கும்பம்:

  இன்றைக்கு வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பல நாள்களாக நிலுவையில் உள்ள வேலையை விரைந்து முடிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். உங்களது பணியில் காலதாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டாலும் முயற்சிகளை கைவிடாதீர்கள். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேன்வாஸ்

  மீனம்:

  இன்றைக்கு சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த செயல்களால் குறித்து யோசிக்கும் சூழல் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குல தெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். எந்த வேலை செய்தாலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News