ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் உண்டாகும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒருவரின் கவனத்தை ஈர்க்க நீங்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். பொதுப்பரிவர்த்தனை துறையில் உள்ளவர்கள் தவறான விளக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தொழில்நுட்ப புகைப்படம்

ரிஷபம்:

இன்றைக்கு உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்ச்சி அடையும் நாளாக அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அட்டை

மிதுனம்:

இன்றைக்கு வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும் நாளாக அமையும். நீங்கள் புதிய விஷயங்களில் ஆர்வத்தைத் தொடர நீங்கள் திட்டமிட்டிருந்தால் முயற்சிகள் தேவை. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தனி செயல்திறன்

கடகம்:

இன்றைக்கு உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும் நாளாக அமையும். புதிய வேலைகளில் அலைச்சல் ஏற்படக்கூடும். தொழில் துறை மூத்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. காதல் உறவில் இருந்தால், நீங்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்கால கட்டுரை

சிம்மம்:

இன்றைக்கு உங்களது பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வழக்கமான செயல்பாடுகளில் இருந்து வந்த ஒரு விதமான சோர்வு நீங்கும். உங்களின் எண்ணம் நேர்மறையானதாக இருந்தாலும், தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றம் தேவை. அதிகாரப் பதவியில் இருந்தால் நீங்கள் எடுக்கும் முடிவில் கவனமுடன் இருக்கவும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோலர்

கன்னி:

இன்றைக்கு லாபம் மேம்படும் நாளாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படக்கூடும். கடந்த காலத்தின் சில வலுவான அபிப்பிராயங்கள் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நல்ல நிதி முன்னேற்றங்கள் உங்களை நல்வழிப்படுத்தும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

துலாம்:

இன்றைக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களது ஆர்வத்திற்கு ஏற்ற புதிய வாய்ப்பைப் பெறக்கூடும். ஆளுமையில் நேர்மறையான மாற்றம் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு மலர்

விருச்சிகம்:

இன்றைக்கு எண்ணங்களில் இருந்து வந்த குழப்பம் நீங்கள் தெளிவு பிறக்கும். உங்கள் விருப்பத்தில் எப்போதும் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு ஏதேனும் வாக்குறுதிகள் கொடுக்கும் போது, சூழ்நிலையை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வேலையில் அமைதியின்மை ஏற்படக்கூடும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்குப் பிடித்த இனிப்பு

தனுசு:

இன்றைக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும் நாளாக அமையும். உங்கள் உறவுக்காக கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த சிறிய நடவடிக்கைகள் உங்களைத் துன்பத்திலிருந்து மீள வழிவகுக்கும். வேலையை சமாளிக்கும் திறன் இருந்தாலும் பரப்பரப்பான மனநிலை ஏற்படும். நெருங்கிய நண்பர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறக்கூடும். கால்நடை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முனிவர் செடி

மகரம்:

முயற்சிகள் மேம்படும் நாளாக அமையும். நீங்கள் திட்டமிட்டிருந்த வெற்றியைப் பெறுவதற்கான நல்ல நேரமாக இன்று அமையக்கூடும். வணிக யோசனைகள் நல்ல ஆரம்ப முடிவுகளை உங்களுக்குத் தரும். முறையான திருமண திட்டம் வாழ்க்கையில் நல்ல முடிவைத் தரும். பிறருக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கொள்வீர்கள். உடனிருப்பவர்களைப் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அவுரி நெல்லிகள்

கும்பம்:

இன்றைக்கு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையும் நாளாக அமையக்கூடும். ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்புகளைத் திட்டமிடும் போது, சில யோசனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். இன்றைக்கு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் மண் பானை

மீனம்:

இன்றைக்கு பல மாற்றங்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புக்கான பரிந்துரைகள் குடும்ப நண்பர்களிடமிருந்து வரக்கூடும். நண்பர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்துவது உங்களுக்கு விரும்பிய பலனைத் தரும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டுத் துணி

First published:

Tags: Oracle Speaks, Tamil News