Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகள் மூலம் இன்று (டிசம்பர் 01, 2022) பலன்களை பெறலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகள் மூலம் இன்று (டிசம்பர் 01, 2022) பலன்களை பெறலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று உங்களிடம் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள சொல்லி யாராவது உதவி கேட்கலாம். நீங்கள் அவர் கேட்கும் உதவியை செய்ய மறுப்பு தெரிவிக்க கூடும். சமீப காலமாக உங்கள் வாழ்வில் நடக்கும் தொடர்ச்சியான சம்பவங்கள் உங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல் இருந்திருக்க கூடும். ஆனால் இப்போது சூழல் மாறி வருவதாக தெரிகிறது. நீங்கள் இன்று மிகவும் கட்டுப்பாடாக இருப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெருவிளக்கு

ரிஷபம்:

இன்று உங்களுக்கு ஒரு லாபகரமான சலுகை கிடைக்க கூடும். அந்த வாய்ப்பை தவறவிடாமல் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவைப்படும் போது உங்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே உங்கள் சொந்த திறனை நீங்கள் மதிப்பீடு செய்து நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் சைன்

மிதுனம்:

உங்களுடன் பணிபுரிந்த சில முன்னாள் ஊழியர்கள் உங்களது செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் ஏற்பட கூடும் என்பதால் வார்த்தைகளை கட்டுப்படுத்துங்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் இன்று பலன்களை பெறலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேரை

கடகம்:

இன்று நீங்கள் எளிமையாக இருப்பது உண்மையில் உங்களுக்கு உதவ கூடும். தேடி வரும் தேவையற்ற சிக்கல்களை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கவும். நீண்ட நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பழைய நண்பரை இன்று நீங்கள் சந்தித்து மகிழ்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்

சிம்மம்:

நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவளிக்காததால் இன்று நீங்கள் உணர்ச்சிவசத்திற்கு ஆளாகலாம். எனவே உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ அவசரப்பட்டு முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சால்ட் லேம்ப்

கன்னி:

குறிப்பாக இன்று பத்திரிகை துறையில் உள்ள நபர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் செல்லும் போது உங்கள் உடமைகளை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதிற்குள் எழும் எதிர்மறை எண்ணங்களை போக்க உள்ளே சமநிலை ஏற்பட்டது போல உணர்வீர்கள். ஆனாலும் இன்னும் சில கவலை நீடிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வேப்ப மரம்

துலாம்:

இன்று அதிகமாக சாதிக்க நினைப்பீர்கள், உங்களது இந்த விருப்பம் சோர்வை ஏற்படுத்த கூடும். சோர்வு காரணமாக செய்ய நினைத்த விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட முடியாமல் போகலாம். எனவே தேவைப்படும் நேரம் வரை ஓய்வு எடுத்து கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் பணிகளை உற்சாகமாக தொடருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் மோல்ட்

விருச்சிகம்:

பணம் மற்றும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற உங்களது பேரார்வம் இன்று வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களுக்கு போதுமான ஆதரவை பெறுவீர்கள். பொதுவில் பேசும் உங்களது பேச்சுத் திறன் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்

தனுசு:

முக்கியமான விஷயங்களில் நீங்கள் கூறும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படலாம். பணியிடத்தில் உங்கள் நிலை மற்றும் அதிகாரம் அங்கீகரிக்கப்படும். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவரிடமிருந்து நீங்கள் ஆச்சரிய பரிசை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

மகரம்:

இன்று சின்ன சின்ன விஷயங்கள் கூட முடிவில் தீவிர விவாதமாக மாறி மோதல்கள் ஏற்பட கூடும். எனவே இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். எந்தவொரு தனிப்பட்ட முயற்சியையும் விட குழுவாக செய்யும் முயற்சிகள் அதிகம் பயனளிக்கும். உங்களுக்கு கிடைக்கும் எழுத்து வடிவிலான தகவல் தொடர்புகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா பூக்கள்

கும்பம்:

உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சரியாக நீறைவேற்றி மனநிம்மதியை பெறுவீர்கள். பண விஷயங்களில் இன்று நீங்கள் விரைவான இயக்கத்தை காண்பீர்கள். உங்கள் திறன்களை மேம்படுத்த இன்று நீங்கள் திட்டமிடுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடிகாரம்

மீனம்:

நீங்கள் ரொமாண்டிசைஸிங் செய்வதை விரும்புவீர்கள். இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் செயலில் மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும். உங்களுக்கு யாரேனும் கடைசி நிமிட அறிவுரை கொடுத்தால் அது சரியானதாக இருக்க கூடும் என்பதால் பரிசீலிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்டன் செயின்

First published:

Tags: Oracle Speaks, Tamil News