முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினர் இன்று (ஜனவரி 28, 2023) பணவரவு இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினர் இன்று (ஜனவரி 28, 2023) பணவரவு இருக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீங்கள் புதிதாக ஒன்றை தொடங்க முயற்சித்தால், அதற்கு இன்று நல்ல நாள். ஆனால் கார்கள் முன்னேற்பாடுகளை நன்றாக செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சுய மதிப்பீடு செய்வதை விட உங்கள் திறன் சற்று அதிகமாக இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மிரர் இமேஜ்

ரிஷபம்:

ஒரு நல்ல வாய்ப்பு உங்களது இன்றைய நாளை மாற்றும். நீங்கள் பயிற்சி செய்து வரும் அடிப்படைகளை இன்று நீங்கள் முயற்சித்து பார்க்க வேண்டும். அப்போது தான் நீங்கள் முன்னேற்றம் அடையவும், மனதில் தெளிவு பெறவும் முடியும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று நீங்கள் ஒத்தி வைக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு மெழுகுவர்த்தி

மிதுனம்:

நீங்கள் பிற நபர்களுடன் ஒத்துழைத்து முன்னேற்றம் பெற நினைத்தால் அதற்கு இன்று சரியான நாள். உங்கள் எல்லா திட்டங்களையும் ஒரே நேரத்தில் பலரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்றைய நாளின் ஆற்றல் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜெம் ஸ்டோன்

கடகம்:

நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உணர்ச்சிகள் உங்களது நெருங்கியவர்களுக்கு இன்று தெரிய கூடும். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வேறொருவரைச் சார்ந்து இருக்க நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் இன்று உணர்வு ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் கல்

சிம்மம்:

நீண்ட நாட்கள் கழித்து இன்று உங்களது அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள். அவர்களிடம் நீங்கள் அன்பான வரவேற்பைப் பெறுவீர்கள். நீங்கள் ஆடம்பர மற்றும் கேளிக்கை விஷயங்களில் இன்று ஈடுபடலாம். இன்று ஸ்போர்ட்டிவான எண்ணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி

கன்னி:

உங்களிடமிருந்து விலகி செல்லும் ஒருவருடன் நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால், உங்கள் மனதில் அவரை பற்றிய உணர்ச்சிகளை அகற்றுவதற்கான போராட்டம் இருக்கலாம். பணத்தை கையாளும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தர் சிலை

துலாம்:

உங்களின் தலைமை பண்பு இன்று மேம்பட்டு காணப்படும். தொலைதூரத்திலிருந்து வரும் ஒரு நல்ல செய்தி உங்களை உற்சாகப்படுத்தும். உங்களின் செயல்திட்டம் இன்று மதிப்பையும், பாராட்டுகளையும் பெறும். தொலைவில் உள்ள நபர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்

விருச்சிகம்:

உங்களின் ஒர்கிங் ஸ்டைலை எதிர்த்த் சிலர், இப்போது அதனால் கிடைக்கும் நன்மைகளை கருதி அமைதியாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு பணவரவு இருக்கும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சொத்தை பதிவு செய்வதற்கான முயற்சியில் இன்று ஈடுபடுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சேம்பர்

தனுசு:

இன்று வீட்டில் அமைதி என்பது ஒரு சவாலாக இருக்கலாம். எனவே இன்று குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களுக்கு தோன்றும் ஒரு புதிய வணிக யோசனை உங்களுக்கு சாதகமாக விரைவில் செயல்படும். ஒரு பார்ட்னர்ஷிப் பரிந்துரைக்கப்படுகிறது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளிம்பர்

மகரம்:

இன்று உங்களுக்கு மிகவும் கலவையான நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் நெருக்கமாக நம்பும் ஒருவரை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சி செய்யலாம். எந்தவொரு உடல் உபாதையிலிருந்தும் விலகி இருக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விரைவில் செல்லவிருக்கும் சாலை பயணத்திற்கு இன்று திட்டமிடுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

கும்பம்:

இன்று நீங்கள் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க விரிவான திட்டங்களை நீங்கள் செய்யலாம், ஆனால் அது தள்ளிப் போகலாம். முயற்சி பலனளிக்கவில்லை என்றால் நன்கு ஓய்வெடுக்கவும், சரியான நேரத்திற்கு காத்திருக்கவும். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் இன்று உங்களுக்கு பொருத்தமானதாக தெரியவில்லை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கேன்வாஸ்

மீனம்:

உங்கள் கடந்தகால செயல்கள் குறித்து தற்போது உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படலாம். உங்களுடைய கூட்டாளியாக இருந்த ஒருவர் இன்று உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களிடமிருந்து பதிலுக்காக காத்திருப்பவர்களுக்கு பதிலளிப்பது இன்று உங்களுக்கு கடினமாக தோன்றலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரண்டு இறகுகள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News