ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு பணியிடங்களில் இன்று (ஜனவரி 21, 2023) கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு பணியிடங்களில் இன்று (ஜனவரி 21, 2023) கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  நீங்கள் முடிக்காமல் வைத்துள்ள முக்கிய பணியை விரைவாக முடிக்கவும், கடந்த கால நிலுவை தொகையை செட்டில் செய்யவும் இன்று நல்ல நாள். லேசான தொற்று அல்லது வலிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக கவனியுங்கள். வாக்குவாதங்களின் போது அமைதியாக இருங்கள். உங்களது சமநிலை அணுகுமுறை எதிர்காலத்தில் உதவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏலக்காய்

  ரிஷபம்:

  இன்று உங்களிடம் யாராவது கடன் கேட்டால், அதற்கு நீங்கள் பணிவுடன் மறுக்கலாம். வழக்கமான அடிப்படையில் சுய பாதுகாப்பு பழங்கங்களை பின்பற்ற துவங்குங்கள். இன்றைய ஆற்றல்கள் சீரமைக்கப்பட்டதாக இருக்கும் என்பதால் சில புதிய பணிப் பட்டியலை தொடங்க உங்களுக்கு உத்வேகம் கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிரே கலர் இறகு

  மிதுனம்:

  முக்கிய வேலையை முடிக்க சில பேச்சுவார்த்தை யுக்திகள் உங்களுக்கு தேவைப்படும். ஒரு சக ஊழியர் உங்களிடம் கேட்கும் உதவி உண்மையானதாக இருக்கலாம். நீங்கள் மனதளவில் வலுவானவர் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் இன்று உங்களின் உணர்ச்சிவசப்பட்ட மறுபக்கத்தை காண கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆற்றங்கரை

  கடகம்:

  ஏற்கனவே நன்கு அறிமுகமானவரை சந்திப்பது அல்லது நீங்கள் அவருடன் மீண்டும் இணைவதற்கு இன்று சாத்தியம் இருக்கிறது. நீங்கள் ஈடுபட திட்டமிட்டுள்ள வெளிப்புற வேலைகள் வானிலை காரணமாக பாதிக்கப்படலாம். இன்று நீங்கள் சிறிய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய பேப்பர்

  சிம்மம்:

  இதுநாள் வரை கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்ட நிலுவையில் உள்ள பணம் இன்று மீண்டும் உங்களுக்கு கிடைக்கலாம். உங்களின் கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் ஒரு சிக்கலை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம், அதை முன்னுரிமையின் அடிப்படையில் தீர்க்கவும். நாளின் முடிவில் எதிர்பாரா விருந்தினர் வருகை மற்றும் உற்சாகம் இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துக்கள்

  கன்னி:

  பணியிடத்தில் நீடித்து வந்த குழப்பங்கள் நீங்கி சூழ்நிலை இப்போது உங்களுக்கு சாதகமானதாக மாறலாம். இது உங்களை நிம்மதியாக இருக்க செய்யலாம். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆவணங்களை ஒழுங்காக கையாளவும். தூக்கம் இல்லாமல்போனால் தேவையற்ற பாதிப்புகளை சந்திக்க கூடும் என்பதால் கொஞ்சம் தரமான தூக்கம் மற்றும் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டோர்ஸ்டெப்

  துலாம்:

  உணர்ச்சிவசப்படுவது என்பது பலவீனமாகாது என்பது புரிந்து கொள்ளுங்கள். புதிய திட்டங்களை முயற்சிக்கவும், சில புதிய உறவுகளை உருவாக்கவும் இன்று ஒரு சிறந்த நாள். உங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரெட் ஸ்டோன்

  விருச்சிகம்:

  இன்று உங்களுக்கு தோன்றும் கனவுகள் அல்லது எதிர்மறை எண்ணங்கள் ஆழ் மனதின் பயம் மட்டுமே, அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களது திட்டத்தில் இருந்து உங்களை திசைதிருப்பலாம். பழைய நண்பரை சந்திப்பதன் மூலம் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செங்கல் சுவர்

  தனுசு:

  நெருங்கிய ஒருவர் உங்களை மிகவும் மிஸ் செய்கிறார். அவர் யார் என்பதை கண்டறிந்து அந்த அன்புக்குரியவருக்காக உங்களது இன்றைய நேரத்தை ஒதுக்குங்கள். இன்று ஒரு சீரற்ற பயணம் மேற்கொள்ள கூடும். வழக்கமான மருத்துவ பரிசோதனை உதவியாக இருக்கும். மனதை அமைதியாக வைக்க தியானத்தில் ஈடுபடுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் சைன்

  மகரம்:

  பழைய நினைவுகள் உங்களது இன்றைய நாளை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. ஒரு ரியாலிட்டி செக் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்கவும், உங்களது உதவி இன்று அவர்களுக்கு தேவைப்படலாம். ஏற்கனவே ப்ராசஸில் உள்ள திட்டங்களை விரைவுப்படுத்த புதிய அனுகுமுறையை பின்பற்றுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாஸ் பாட்டில்

  கும்பம்:

  பணியிடங்களில் இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை உங்களுக்கு இருந்த பயம் இப்போது தேவையற்றது. காலங்கள் மாறிவிட்டதால் எதிர்மறை விஷயங்கள் குறையும். சமீபத்திய நாட்களில் உங்களுக்கு நடந்த சில விஷயங்களை எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலமரம்

  மீனம்:

  நீங்கள் தான் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு, இன்று அவர்களுக்கு உங்களிடமிருந்து அதிக அக்கறை மற்றும் நேரம் தேவைப்படுகிறது. பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சுமுக போக்கை கடைபிடிக்கவும். வியாபாரிகள் இன்று புதிய பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை கூட்டம்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News