முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 01, 2023) புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 01, 2023) புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவைப் பற்றி நீங்கள் மறுபரிசீலனை செய்து பாருங்கள். சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு திடீரென்று உள்ளுணர்வு தோன்றும். முன்பு நீங்கள் உதவி செய்த ஒருவர் உங்களுக்கு இப்போது உதவி செய்வார்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பாதாமி மரம்

ரிஷபம்: 

உங்கள் உள்ளார்ந்த உணர்வுகளை ஒப்புக்கொள்ள இது ஒரு பொருத்தமான நாள். இதற்கு முன்பு நீங்கள் வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உங்கள் இதயத்தை காலி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு ஆப்சிடியன்

மிதுனம்:

நீங்கள் முதிர்ச்சியாக பணியாற்றினால் கடினமான வேலையை எளிதாக சமாளிக்கலாம். உங்கள் வளர்ச்சியும் மற்றும் முன்னேற்றமும் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் கூடை

கடகம்: 

உங்கள் பார்வையில் ஒரு குறிப்பிட்ட பணியில் நீங்கள் சிறந்து விளங்கியிருக்கலாம். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எல்லாமே நேர்மறையாக இயங்குவதாகத் தெரிகிறது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பத்திரிகை

சிம்மம்: 

ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். அதைப் புரிந்துகொள்ள நீங்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒழுங்காக இருப்பது விரைவில் நல்ல பலன்கள் கிடைக்க உதவும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

கன்னி: 

மற்றவர்களின் தவறு உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் மன்னிக்கவும், மறக்கவும் வேண்டிய நேரம் இது. பழைய நண்பரிடமிருந்து உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. சமீபகாலமாக நீங்கள் குழம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கு இன்று தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் சபையர்

துலாம்: 

உங்கள் செய்திகள் உரியவரை சென்று சேர்ந்திருக்கும். இது வரை உங்களை சந்திக்காத உங்களை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். முக்கியமான நபர்களுக்கு நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் கருவிகள் அல்லது உதிரி பாகங்கள் வியாபாரத்தில் இருந்தால், பணியாளர் சம்மந்தப்பட்ட நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரமிடு

விருச்சிகம்: 

அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று ஒரு குறுகிய பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் காதலிக்கும் நபருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - நீல டார்மலைன்

தனுசு: 

நீங்கள் எந்த விஷயத்தையாவது தீர்க்கவோ அல்லது மறக்கவோ முடியாவிட்டால் அப்படியே விட்டுவிடுவது நல்லது. நீங்கள் காதல் வயப்படும் அளவுக்கு சுவாரஸ்யமான ஒருவரை சந்திக்கலாம். உங்கள் மனம் தற்போது புதுமையான எண்ணங்களால் நிரம்பி வழியும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தண்டு

மகரம்: 

நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் நிம்மதியாக உணரலாம் மற்றும் உங்களுக்காக நேரம் ஒதுக்குவது போல் உணரலாம். புதிய வேலை வாய்ப்புகள் விரைவில் தேடி வரும், கவனமாக வாய்ப்பைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய நண்பர் நிதி ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு நூல்

கும்பம்: 

ஒரு வழியாக புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள். நீங்கள் அதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். தேவையான விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு, நீங்கள் பெற்றோருக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இந்த வாரத்தில் விருந்தினர்கள் வரலாம். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டிசைனர் கடிகாரம்

மீனம்: 

எளிமையான மற்றும் சிக்கலற்ற அணுகுமுறை உங்கள் வேலையை எளிதாக்கலாம். பிறரிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பது சில நேரங்களில் கடினமான உணர்வுகளை உண்டாக்கும். நீங்கள் ஒரு சிறிய அளவிலான விருந்தில் கலந்து கொள்ளலாம், அங்கு நீங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புறா

First published:

Tags: Oracle Speaks, Tamil News