முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 29, 2023) புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 29, 2023) புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

கடந்த காலத்தில் நீங்கள் விரும்பி செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை நோக்கி மீண்டும் திசை திரும்ப வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் விரும்பத் தகுந்த சில மாற்றங்கள் ஏற்படும். அனைத்தையும் கடந்து போக கற்றுக் கொள்வது நல்லது. உங்களுக்கு நெருங்கிய ஒருவரால் துரோகத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். புதிய தொடர்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு..

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - திறந்த கதவு

ரிஷபம்: 

நீண்ட நாட்களாக உங்கள் மனதில் குடைந்து கொண்டிருந்த பிரச்சனை ஒன்று சரியாகும். பழைய பிரச்சினைகளை மீண்டும் துவங்க வேண்டாம். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு மற்றவர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது.

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - போர்சலின் செட்

மிதுனம்: 

முதலிடம் அமைதியாக இருந்து யோசிப்பதும், பிறகு நீங்கள் யோசித்ததை வெளிப்படுத்துவதும் உங்களது தன்மையாகும். ஆனால் இந்த முறை முதலிலேயே உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய நான் உங்களுக்கு நல்ல விதமாக அமையும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - அமெதிஸ்ட்

கடகம்: 

இன்று நீண்ட பயணங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்த விஷயம் ஒன்று இன்று கைகூடும். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தாருடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் வடக்கு திசை சாதகமாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - ஓவியம்

சிம்மம்: 

புதிய விஷயங்களை செயல்படுத்த வாய்ப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பழைய நண்பர் ஒருவரின் உதவிகள் கிடைக்கும்.. உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வீட்டில் வளரும் தாவரம்

கன்னி: 

புதிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய விஷயங்களை கவனம் செலுத்த நேரம் வந்துவிட்டது. தொழில் துவங்க நினைத்திருந்தால் இது சரியான நேரம் ஆகும். வேலைக்கும் குடும்பத்திற்கும் இடைப்பட்ட சமநிலையை சமாளிக்க சிறிது கஷ்டப்படுவீர்கள். வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - உங்களுக்கு பிடித்த பழைய திரைப்படம்

துலாம்: 

வாழ்வில் உண்டாக்கும் சிறிய சிறிய வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுடன் வாழ வேண்டும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பழைய விஷயங்களை மீண்டும் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்..

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - தாமிர டம்ளர்

விருச்சிகம்: 

நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடந்தேற நேரம் வந்துவிட்டது. புதிய மாற்றங்கள் உண்டாவதை காண்பீர்கள். உறவுகளில் அதிர்ஷ்டம் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயணம் செய்யும்போது கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - விரிசல் விட்ட கண்ணாடி

தனுசு:

பல்வேறு விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முற்படுவீர்கள். குடும்பம் மற்றும் வேலைக்கு இடைப்பட்ட சமநிலையை சமாளித்து சிறிது கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தாரிடம் அதிக நேரம் செலவிட வேண்டும். உங்களது பணியாளர்களுடன் சரியான முறையில் தொடர்பு கொள்வது அவசியம். உயரதிகாரிகளின் அறிவுரை படி செயல்படுவது நல்லது. உங்களது தனிப்பட்ட ஈடுபாடுகளுக்கு சற்று முன்னுரிமை கொடுப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - இரண்டு சிட்டுக்குருவிகள்

மகரம்: 

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. கோப்புகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் உள்ள உறவும் மேம்படும். சில புதிய பிரச்சனைகள் உருவாகி தானாகவே சரியாகும்..

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - வெளிர் நிற திரை

கும்பம்: 

உங்களை சுற்றி உள்ள விஷயங்களில் கவனம் தேவை. உங்களது தொடர்புகளின் மூலம் நல்ல விஷயங்கள் வந்து சேரும். ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு வாய்ந்த நபருடைய தொடர்புகள் கிடைக்கும். சமையல் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - சத்தமான அழைப்பு மணி

மீனம்: 

உங்களது உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். புதிய நண்பர்களுடன் எங்கேயும் வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஆழ்மனதில் பதிந்துள்ள சில விஷயங்கள் கனவுகளாக தோன்றும். அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். புதிய பழக்கங்களை உண்டாக்கி கொள்ள வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மஞ்சள் இலைகள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News