மேஷம்:
இன்றைய நாள் சவால்கள் நிறைந்து காணப்படும். தொழிலில் புதிய பார்ட்னாக்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஏரி
ரிஷபம்:
உங்களுடைய கடின உழைப்பை பார்த்து உங்கள் உயர் அதிகாரிகளே பொறாமை கொள்ள வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்.. உடல் ஆரோக்கியம் இன்று அதிகரிககும்..
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – தேனீ
மிதுனம்:
உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பதை விட வெளியே கொட்டி விடுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. உங்களுக்கு நெருங்கிய ஒருவர் உங்களை பற்றி அவதூறுகளை பரப்ப வாய்ப்புகள் உண்டு..
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வெண்கல பணப்பை
கடகம்:
நேர்மறையான எண்ணம் கொண்ட புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும்.. உங்கள நம்பிக்கைக்குள்ளான சிலரை பற்றி மறுபரிசீலனை செய்ய நேரம் வந்துவிட்டது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஒரு டம்ளர்
சிம்மம்:
மிகவும் பிடித்த ஒருவரை சந்திக்க இன்று வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பாராத வகையில் மதிப்பிற்குரிய ஒரு நபரை சந்திப்பீர்கள். குறுகிய பயணங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு..
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கருப்பு படிகம்
கன்னி:
ஒரு குழுவாக சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நாள். புதிய விஷயங்களை கற்று கொள்வீர்கள். பணம் தொடர்புடைய விஷயங்களில் அதிக கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஊன்று கோல்
துலாம்:
சந்தேகத்திற்குரிய சில விஷயங்களை பற்றி தற்போது உடனடியாக முடிவு எடுக்காமல் தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது நல்லது. புதிய வேலைகள் துவங்க வாய்ப்புகள் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - தேக்கு மரச்சாமான்கள்
விருச்சிகம்:
உங்களது வாழ்வில் முக்கியமான முன்னேற்றங்களை சந்திக்கும் காலகட்டம் நெருங்கிவிட்டது. குழுவாக சேர்ந்து வேலை செய்வதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும். பணத்தை சேமிப்பது நன்மை தரும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மூங்கில் தாவரம்
தனுசு:
முடிந்த அளவு கோபப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். சூதாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - தெளிவான குவார்ட்ஸ்
மகரம்:
குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு உடல் நலனில் குறைபாடு ஏற்படலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறிய அளவில் மற்றவரிடம் கடன் வாங்குவது நிலைமையை சமாளிக்க உதவும். பொருளாதார ரீதியாகவும் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்மையை தரும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மரம் ஏறுபவர்
கும்பம்:
நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வதைப் போலவே மற்றவரும் உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. குறுகிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. வெளி உலகத்தில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - நீல மாணிக்கம்
மீனம்:
நீங்கள் திட்டம் தீட்டியதை போலவே அனைத்து செயல்களும் சரியாக நடைபெறும். சிறிதளவு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தேவையான உதவிகள் உங்களை வந்து சேரும். முதலீடுகள் செய்ய மிகவும் ஏற்ற நாள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மயிலிறகு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News