ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசினர் இன்று (ஜனவரி 23, 2023) எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினர் இன்று (ஜனவரி 23, 2023) எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  நிதானமாக இருக்க வேண்டிய நாள் இன்று. தேவையில்லாத கோபம் பிரச்சனைக்கு வழிவகுக்கும். வேலைப் பளுவினால் உடல் சோர்வை அடைவீர்கள். எதிலும் அவசரம் வேண்டாம். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ? அதை மட்டும் செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா

  ரிஷபம்:

  இன்றைக்கு தேவையில்லாத மன உளைச்சல், குழப்பம் போன்றவற்றால் வேலையை தாமதாக முடிப்பீர்கள். பதட்டத்தைத் தவிர்த்தாலே எப்போதும் போல திட்டமிட்டதை விட அதிகமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். யாரைப்பற்றி தெரியாமலும் எவ்வித கருத்துக்களையும் சொல்ல வேண்டாம். உண்மைகளை ஆராய்ந்த பின்னர் எந்த முடிவுகளையும் எடுக்கவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புஷ்பராகம்

  மிதுனம்:

  இன்றைக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் நாளாக அமையும். எந்த வேலையையும் நிதானமாக செய்யவும். உங்களின் இலக்கு எதோ? அதை நோக்கிப் பயணிக்கவும். உங்களது அனைத்து தகவல் தொடர்புகளையும் எளிமையாக மற்றும் சரியாக வைத்திருங்கள். சிறிய ஆபத்து ஏற்பட்டாலும் தயக்கம் வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு ஸ்படிகம்

  கடகம்:

  இன்றைக்கு நீங்கள் நம்பிக்கையுடனும், ஆற்றலுடன் இணைந்ததாக உணரலாம். கணவன் அல்லது மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பதோடு சில பயனுள்ள ஆலோசனைகளைக் கொண்டு வருவார்கள். வரவிருக்கும் நாட்களில் திட்டமிடக்கூடிய விடுமுறைக்காக குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஆர்வமாக இருக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல படிகம்

  சிம்மம்:

  இன்றைக்கு துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் மன தைரியம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் காண்பீர்கள். குடும்பத்திற்கு பெரிய அளவில் உங்களது ஆதரவு தேவைப்படும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீரும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த தண்ணீர்

  கன்னி:

  நீங்கள் நினைத்த காரியங்களை விரைந்து முடிக்கும் சூழல் ஏற்படும் நல்ல நாள் இன்று. பணியிடத்தில் புதிய பரிணாமத்தை அடைவீர்கள். அக்கம் பக்கத்து விஷயங்கள் தலையீடு இல்லாமல் விலகி இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் ஆதரவு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

  துலாம்:

  இன்றைக்கு உங்கள் பதவி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள யாராவது முயற்சி செய்யலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையில்லாத பேச்சுகளை கைவிடவும். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல நிற ஸ்படிகம்

  விருச்சிகம்:

  வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். பணம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றும் சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை அறிந்துக் கொள்வீர்கள். வருமானம் ஈட்டுவதற்கான இன்று நல்ல நாள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செவ்வந்தி

  தனுசு:

  உறவினர்களின் வழியில் அனுகூலம் வேண்டாம். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உங்களுடைய திறமையின் மூலம் வெற்றி பெறக்கூடிய நாள் இன்று. நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வேலைகள் இன்று நிறைவடையும். காதல் ஆர்வத்துடன் இருந்தால், விரைவில் பிடித்த நபரை நீங்கள் சந்திக்க நேரிடும். எதை நினைத்தும் தேவையில்லாத கவலை வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடற்சிப்பி

  மகரம்:

  முயற்சி நிறைந்த நாள் இன்று. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்கள் தோன்றி மறையும். கடன் கொடுப்பதை சில காலம் தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்துக்கொண்டால், தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படாது. எந்த வேலையை செய்தாலும் பொறுமை மற்றும் நிதானத்துடன் செய்யவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஜெட் ப்ளாண்ட்

  கும்பம்:

  தேவையற்ற ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையால் நீங்கள் சோர்வாகவும், சற்று எரிச்சலாகும் உணர்வை நீங்கள் அடைவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப வேலைகள் செய்யவும். சிறிது நேரம் ஓய்வு உடல் நலத்திற்கு நல்லது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

  மீனம்:

  இன்றைக்கு செல்வாக்கு மேம்படும் நாளாக உங்களுக்கு அமையும். வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், எவ்வித தயக்கமும் வேண்டாம். எந்த வேலைகளையும் சிறப்பாக முடியும் நல்ல நேரமாக இருக்கும். குழந்தைகளை புகழ்பெற்ற பள்ளியில் சேர்க்க முயற்சிக்க வேண்டாம். உங்களது தேவைகளை நிவர்த்திச் செய்யக்கூடிய நல்ல நாள் இன்று.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பளிங்கு

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News