முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 12, 2023) நல்ல திருமண வரன்கள் அமையப் பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 12, 2023) நல்ல திருமண வரன்கள் அமையப் பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களுக்கு அருகாமையில் உள்ள ஒரு நபர் காரணமாக, மற்றவர்கள் உங்கள் மீது தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர். நிதி சார்ந்த நல்ல செய்தி உங்களுக்கு ஊக்கம் தரும். ஏற்கனவே வந்த திருமண வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கலாம். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படகு

ரிஷபம்:

பணியிடத்தில் சீனியர் ஒருவரின் வழிகாட்டுதல் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். நல்ல ஒத்துழைப்பு தரக் கூடிய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது உங்களின் அதிர்ஷ்டம். உங்கள் உறவுகளில் சிறிது காலம் பிரச்சினை நிலவக் கூடும். புதிய முதலீடுகளை செய்யும் முன்பாக முறையாக ஆலோசிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மழைத்துளி

மிதுனம்:

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒரு விஷயம், நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. புதிய தொழில் ஆர்வலர் உங்களிடம் வாய்ப்பு ஒன்றை முன்வைப்பார். பணியிடத்தில் உங்களுக்கு சந்தேகம் நிலவும். தனித்து பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓவியம்

கடகம்:

இதற்கு முன்பு நீங்கள் பணி செய்த அதே ஆர்வத்தை இப்போது தொடர முடியாது. வீட்டில் நடக்கின்ற சில பிரச்சினைகள் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு இப்போது அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல்

சிம்மம்:

வெற்றிகரமான வணிகம் தொடங்குவது குறித்து நீங்கள் பரிசீலித்து வரும் பட்சத்தில், அதற்கு இப்போது அடித்தளமிடலாம். நல்லெண்ணம் கொண்ட பல நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் நிலவும் பிரச்சினையால் அனைவரது மனமும் புண்படும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்காம்

கன்னி:

நிலையான முயற்சியை காட்டிலும் அதிரடியான செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும். புதிய ஒன்றை அடைவது என்று தீர்மானித்து விட்டால், அதற்கான வேட்டையை தொடங்கி அடைந்துவிட வேண்டும். பழைய நண்பருடனான தொடர்பு பயனுள்ளதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம்

துலாம்:

பணிகளில் உணர்ச்சிக் குவியல்களை கலக்க வேண்டாம். ஏனென்றால் உங்கள் திறன் என்பதை சிலர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நண்பர்களை தேர்வு செய்யும்போது மிகக் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தொடர்புடையவரை நீங்கள் புறக்கணிப்பதாக நினைக்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்பூன்

விருச்சிகம்:

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவை செயல்படுத்துவது குறித்து நீங்கள் சிந்தித்து வருகிறீர்கள். ஆனால், சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. நீங்கள் தொடர்புகொள்ள நினைக்கும் விஷயத்தை இப்போது ஒத்திவைப்பது நல்லது. மற்றவர்களின் முடிவுகளில் தேவையின்றி தலையிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாட்டில் ஓப்பனர்

தனுசு:

அனைத்து பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக உணருவீர்கள். திருமண வாய்ப்புகள் வர தொடங்கும். உடைந்து போன உறவுகளிலும் கூட இப்போது நல்ல முன்னேற்றம் காணப்படும். இனி வரும் காலத்தில் பயன் தரக் கூடிய செல்வாக்கு மிகுந்த நபரை சந்திப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாம்பூச்சி

மகரம்:

உங்களை சுற்றியுள்ள அனைவரின் மனதையும் நேர்மையான குணத்தால் ஈர்ப்பீர்கள். நட்பு ரீதியாக பழகும் உங்கள் குணத்தால் சிகரத்தை அடைவீர்கள். அதே சமயம், அதிகப்படியான பொறுப்புகளை ஏற்க வேண்டாம். நீங்கள் சமையல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்டு

கும்பம்:

பணியிடத்தில் தற்போதைய பொறுப்பு உங்களுக்கு போதுமானதாக இருந்தாலும் கூட, வேலைகள் பாதிக்கப்படுகின்றன. உங்கள் திறன், அறிவு போன்றவற்றை கொண்டு முதலீடு செய்ய சிறப்பான நேரம் இதுவாகும். எழுத்து மீது ஆர்வம் கொண்டவர்கள் அப்பணிகளை முன்னெடுக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அமைதியான இசை

மீனம்:

பல உத்திகளை செயல்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு இருக்கலாம். சிலரது மனதை நீங்கள் புண்படுத்துவீர்கள். உங்களுக்கான வளங்களை திரட்டுவது மற்றும் வாழ்வியல் பழக்கங்களை மாற்றுவதன் மூலமாக அனைத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்வில் நல்லிணக்கம் ஏற்பட இன்னும் முயற்சிகள் தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிம்போனி

First published:

Tags: Oracle Speaks, Tamil News