மேஷம்:
நெருங்கிய உறவுகளிடம் அதிக கவனம் தேவை. உங்களது துணையிடம் புதிய மாற்றங்களை காண்பீர்கள் சூழ்நிலை உங்களுக்கு எதிராக இருந்தால் சிறிது தள்ளிப் போடுவது நல்லது. செய்ய வேண்டிய வேலைகளை நேரத்திற்கு செய்து முடிப்பது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – முப்பட்டகம்
ரிஷபம்:
வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஷாப்பிங் செல்வது போன்ற செயல்களின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்வீர்கள். வழக்கத்தை விட இன்று சற்று சோர்வாக காணப்படுவீர்கள்..
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கண்ணாடி ஜாடி
மிதுனம்:
வேலைப்பளு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களோடு தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீக வளர்ச்சி நன்றாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - நீரூற்று
கடகம்:
தொழிலில் ஏற்படும் அதிகப்படியான வேலை சுமையை புதிய நபர் மூலம் நீக்குவீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். நேரத்திற்கு செயல்களை செய்து முடிப்பது நல்லது. விளையாட்டுகளில் ஈடுபடுவது உற்சாகத்தை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கடிகாரம்
சிம்மம்:
சமூகத்தில் செல்வாக்குடைய ஒருவருடைய தொடர்பு கிடைக்கும். உங்கள் வேலையின் மீது சந்தேகம் உண்டாகலாம். உள்ளுணர்வை கேட்டு அதன் வழி நடப்பது நல்லது.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - தெளிவான வானம்
கன்னி:
நீங்கள் காயப்படுத்திய ஒருவர் இன்னமும் உங்கள் மீது கோபமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அவர்களை சமாதானப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பட்டு துணி
துலாம்:
அலுவலகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையில் ஆர்வமுடன் செயல்படுவதின் மூலம் வருங்காலத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும். அண்டை வீடுகளில் வசிப்பவரிடம் சிறிய பிரச்சனைகள் உண்டாகலாம். காதல் விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டு.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வரிசையான எண்கள்
விருச்சிகம்:
நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வரும் .ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் நாள் மதியத்திற்குப் பிறகு வேகமாக நகரும். கலப்பின் காரணமாக விரைவிலேயே உறங்கச் சென்று விடுவீர்கள். நீண்ட பேச்சுக்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வலை
தனுசு:
அலுவலகத்தில் அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். ஆனால் மேலாண்மையில் ஏற்படும் தவறுகளினால் அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கூடுதல் வேலைகள் உங்களுக்கு வழங்கப்படலாம். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மலர் வளையம்
மகரம்:
நல்ல நாளாக அமையும். களைப்பாக உணரும் சமயங்களில் ஓய்வெடுத்து கொள்வது நல்லது. புதிய வேளைகளில் ஈடுபடும் முன்பு உங்கள் நிலையினை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏற்கனவே இருந்த பழைய வழக்கங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டத்திர்கான குறியீடு – கேன்வாஸ் ஷூ:
கும்பம்:
புதிய பங்குதாரர் அல்லது தொழில் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பாதை தெளிவாக இருந்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது. உடன் பணி புரியும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கழுகு.
மீனம்:
குடும்ப விஷயங்களில் நண்பர்களின் உதவியுடன் நல்லது நடக்கும். புதிய நபர்களுடன் அதிகம் கவனம் தேவை. சேமிப்பு மேற்கொள்வது நல்லது. பண வரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - குவளை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News