முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை இன்று (பிப்ரவரி 12, 2023) பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை இன்று (பிப்ரவரி 12, 2023) பெறுவீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று உங்களது எளிமையான அணுகுமுறை முக்கிய திட்டத்தை முடிக்க உதவும். இன்று நீங்கள் சில முக்கிய செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்களது உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை இன்று பெறுவீர்கள். தைரியமாக செயல்படும் சில விஷயங்களை உங்களுக்கு பயனுள்ளதாக முடியும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செவ்வந்தி செடி

  ரிஷபம்:

  உங்களை சுற்றி இருக்கும் பிறரின் நோக்கத்தை அளவிடுவது எளிதான விஷயமாக இருக்காது. ஆனால் இதை நீங்கள் சரியாக செய்யாவிட்டால் ஆபத்தை சந்திக்க நேரிடலாம். உங்களது புதிய திட்டங்களுக்கு தேவையான பேக்கப் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இன்று ட்ரிப்ஸ் மற்றும் ட்ராவல்களுக்கு திட்டமிடலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஸ் குவார்ட்ஸ்

  மிதுனம்:

  உங்களது நலம் விரும்பி ஒருவர் உங்கள் வாழ்வில் உங்களுக்கு சாதகமான மாற்றத்தை கொண்டு வர இன்று முயற்சி எடுக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை மீண்டும் இன்று நிலைநாட்டப்படும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அவை இன்று மெதுவான வளர்ச்சியை காட்ட ஆரம்பிக்கலாம். உங்களது தற்போதைய உறவில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை தீர்க்க முயற்சிக்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளியர் குவார்ட்ஸ்

  கடகம்:

  உங்கள் மனம் இப்போது புத்துணர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் உங்களை நீங்களே மகிழ்வித்து கொள்ளும் முயற்சிகளில் இறங்குங்கள். உங்கள் நண்பர்களுடன் குறைந்த நேரத்தையும் தனிமையில் அதிக நேரத்தையும் செலவிட இன்று நீங்கள் விரும்பலாம். உங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட குடும்ப அழுத்தம் இன்று தீர்க்கப்படலாம். பிறரிடம் தேவையற்ற உதவிகளை கேட்பதை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பவளம்

  சிம்மம்:

  பொது இடங்களில் குறிப்பாக அது உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் சமயத்தில் தனிப்பட்ட உரையாடல்களை தவிர்க்கவும். சில விஷயங்களில் தேவை இன்றி உணர்ச்சிவசப்படுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு வேண்டியவர் இன்று உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படலாம். குழப்பமான விஷயங்களில் உடனடியாக முடிவெடுக்காதீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - பசும்புற்கள் அடங்கிய மைதானம்

  கன்னி:

  நீங்கள் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டத்தை அவசரமாக இன்று செயல்படுத்த நினைக்காதீர்கள், இன்னும் கொஞ்சம் காலம் பொறுமையாக இருங்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின முயற்சிகளின் பலன்களை இன்று பெறலாம். பல விஷயங்களைப் பற்றி யோசிப்பது குழப்பம் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இன்று ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - பசும்புற்கள் அடங்கிய மைதானம்

  துலாம்:

  சில வீண் விவாதங்களில் பங்கேற்பதை விட ஒதுங்கி செல்வது நல்லது. மற்றவர்கள் உங்கள் வேலைகளை அதிகம் கொடுப்பது அல்லது மன அழுத்தம் கொடுத்து கஷ்டப்படுத்த முயற்சி செய்யலாம். உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக பேசுவது அவசியமல்ல. கடந்த கால பிரச்சினையை தீர்க்க இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - டூர்மலைன்

  விருச்சிகம்:

  முக்கியமான ஒருவருடனான சந்திப்பில் நீங்கள் சரியான நேரத்திற்கு செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் செயல்படுத்த முடியாத யோசனைகளை பற்றி நீங்கள் பேசுவதை தவிர்க்கலாம். இன்று நிலவி வரும் நிதி நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும். உங்களது பெற்றோர்கள் முக்கியமான ஒன்றை திட்டமிடலாம் மற்றும் அதைப் பற்றி உங்கள் கருத்து அவர்களுக்கு தேவைப்படலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - விளக்குகள்

  தனுசு:

  நீங்கள் எதிர்மறையான ஒரு விஷயத்தை பலமுறை சிந்திப்பது அப்படியே நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். நீங்கள் கோபம் கொண்டுள்ள சில நண்பர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம். உங்களிடம் புதிய பார்ட்னர்ஷிப் ஐடியா இருந்தால் அதற்கான சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - முத்து

  மகரம்:

  இன்று உங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்சினை அல்லது சிறிய சண்டை காரணமாக பெரும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் துணைக்குக்கும் உங்களுக்கும் சில விஷயங்களில் இன்று அடிப்படை புரிதல் இல்லாமல் சண்டை உருவாகலாம். இன்று சிறிது நேர தியானம் உங்களை அமைதியாக வைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல சஃபையர்

  கும்பம்:

  சில தனிப்பட்ட நெருக்கடிகளுக்காக ஒரு முன்னாள் சக ஊழியர் உங்களை இன்று தொடர்பு கொள்ளலாம். சில நாட்களாக உங்களது பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்க கூடிய நிதி முன்னேற்றம் இன்றும் நிலையாக இருக்கலாம். மாலை நேரத்தில் சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களை உற்சாகமாக வைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் கிரிஸ்டல்

  மீனம்:

  நீங்கள் இன்று எவ்வளவு அடக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்று ஏற்கனவ திட்டமிட்டிருந்த பணிக்கான பயணம் தள்ளி போக கூடும். இன்று உங்கள் இயல்பான வழக்கத்திற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு வேறு சில முக்கிய பொறுப்புகளில் ஈடுபடலாம். இன்று பணப்புழக்கம் நன்றாக இருக்கும் மற்றும் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News