ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணியிடத்தில் இன்று (டிசம்பர் 25, 2022) அங்கீகாரம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணியிடத்தில் இன்று (டிசம்பர் 25, 2022) அங்கீகாரம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  வழக்கத்திற்கு மாறான ஒன்றை பற்றி இன்று நீங்கள் உறுதியாக நம்பினால் அதை முன்னெடுத்துச் செல்லுங்கள். உங்களின் தனிப்பட்ட நலன்களுடன் இணைந்து இன்று உங்கள் வேலைத் திட்டங்களை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களை தங்கள் டீமில் சேர்த்து கொள்ள ஒருவர் ஆர்வம் காட்டலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாஸ்க்

  ரிஷபம்:

  உங்களது செயல்திறன் மீது நீங்கள் கொண்டிருக்கும் அதிக நம்பிக்கை காரணமாக குறிப்பிட்ட இலக்கை அடைய மிகவும் ஆவலாக இருப்பீர்கள். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதம் உங்கள் சாதனைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். உங்கள் கனவுகளை நனவாக்க உதவும் நபரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிணறு

  மிதுனம்:

  சொந்த தொழிலை தொடங்குவது பற்றி உங்களுக்கு இருக்கும் நீண்டநாள் கனவை நிறைவேற்ற நீங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள் என்றால், வணிகம் தொடர்பான உங்களின் அனைத்து எதிர்காலத் திட்டங்களையும் இன்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். உங்கள் இலக்கிற்கு இணையாக வேறு ஏதாவது வந்தால் அதை இன்று முழுமையாக நிராகரிக்காதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்போர்ட்ஸ் கார்

  கடகம்:

  இன்று உங்களது தெளிவான உள்ளுணர்வு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வீர்கள். கார்ப்பரேட் உலகில் இருந்தால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அடையாளத்தை இன்று நீங்கள் உருவாக்கலாம். பணியிடத்தில் இன்று உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இன்று நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வேடிக்கை அல்லது உல்லாசப் பயணம் செல்ல கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் பாத்திரம்

  சிம்மம்:

  உங்களை அறியாமல் சில விஷயங்களை உளறும் வாய்ப்பு இருப்பதால், பொதுவெளியில் பிறருடன் உங்களது தனிப்பட்ட உரையாடல்களை தவிர்க்கவும். இன்று உங்களது நாள் கலவையான உணர்வுகளை கொண்டிருக்கும். உங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் இன்று உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம். குழப்பமாக இருக்கும் போது முக்கிய வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற பொருட்கள்

  கன்னி:

  நீங்கள் இதுவரை எதிர்பார்க்காத அல்லது திட்டமிடாத சுவாரஸ்ய விஷயங்கள் உங்களது நாளின் முடிவிற்குள் உங்களது வழியில் வர கூடும். நீங்கள் வருவதை தீவிரமாக எடுத்து கொண்டால் உங்களது நாளை சிறப்பாக்கலாம். வழக்கறிஞர் பணியில் இருப்பவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்க கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்மார்ட் வாட்ச்

  துலாம்:

  இன்று நீங்கள் பரிவர்த்தனை விஷயங்களில் தெளிவாக மற்றும் வெளிப்படையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மன உளைச்சல் காரணமாக உங்களிடம் ஆலோசனைக்காக வரக்கூடும். அதே நேரம் உங்களது உடல்நலனிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். போட்டி நிறைந்த நாளாக இருந்தாலும் சவால்களை சமாளிப்பீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேட்டர்ன் குஷன்

  விருச்சிகம்:

  பணியிடத்தில் சீனியர்களாக இருப்பவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்று சில சவாலான சூழல்களை சந்திக்க நேரிடலாம். எப்படிப்பட்ட நிலையிலும் இன்று உங்கள் மனைவி உங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பார். சொத்தை விற்கும் திட்டம் இருந்தால் இன்று அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். உங்களது ஆட்டிட்டியூட் மூலம் இன்று உங்களுக்கு சாதகமான நேரங்கள் அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எம்பிராய்டரி ஒர்க்

  தனுசு:

  உங்களிடம் எந்த குறைபாடும், இயலாமையும் இல்லை என்பதை நீங்கள் முதலில் முழுமையாக புரிந்து கொண்டு இழந்த நம்பிக்கையை இன்று மீட்டெடுங்கள். உங்களுக்கு முன்னால் உள்ள கடமைகளை செய்ய தயாராகுங்கள். இன்று எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் நிராகரிக்காதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில்

  மகரம்:

  கடந்த கால கசப்பான அனுபவம் மீண்டும் மீண்டும் உங்களது நினைவுக்கு வந்து தொல்லை தரலாம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி யோசிக்காமல் உங்கள் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுக்கு நடக்கும் சில புதிய நிகழ்வுகள் சிறந்த அனுபவத்தை தரும். உங்களது வெளிப்படைத்தன்மை காரணமாக உங்களுக்கான ரசிகர் வட்டம் அதிகரிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செலிபிரிட்டி

  கும்பம்:

  நெருக்கடி நேரத்தில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்ற உங்களது உணர்வு உண்மை இல்லை. உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுடன் இருப்பார்கள். உங்களின் கடந்த கால தவறுகளை நீங்கள் திரும்பிப் பார்த்து இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் இழந்ததாகத் தோன்றும் ஆற்றலை உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதன் திரும்ப பெறுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் துணி

  மீனம்:

  நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை என்ற எண்ணம் உங்களக்கு தோன்றலாம். இன்று உங்களுக்கு தோன்றும் எதிர்மறை எண்ணம் உங்களை வாழ்க்கையில் சில அடிகள் பின்னோக்கிச் செல்ல வைக்கும். எனவே எப்போதும் நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடன் இருக்கும் சில நபர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படுவதை தெரிந்து கொள்வீர்கள். அவர்களிடம் எச்சரிக்கை தேவை.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ட்ரீ ஆஃப் லைஃப்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News