ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகளின் மூலம் இன்று (டிசம்பர் 16, 2022) லாபம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு முதலீடுகளின் மூலம் இன்று (டிசம்பர் 16, 2022) லாபம் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்: 

  புதியதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டு அதில் வல்லவராக மாறுவீர்கள். அதிகப்படியான வேலை பளுவால் சிறிது மன அழுத்தம் உண்டாகலாம். புதிய சவால்களுக்கு தயாராக இருப்பது நல்லது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – இறகு

  ரிஷபம்: 

  புதிய பொறுப்புக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். இதனால் வேலைப்பளு சற்று அதிகரிக்கும். பழைய நண்பர் ஒருவரின் தொடர்பின் மூலம் சற்று நிம்மதி அடைவீர்கள். பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பறவை

  மிதுனம்: 

  இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக அமையும். புதிய திட்டங்களை தீட்டி செயல்களை செய்து முடிப்பீர்கள். நடக்கவே நடக்காது என்று நினைத்த சில காரியங்கள் நடந்தேறும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சிலந்தி

  கடகம்: 

  பல புதிய உண்மைகளை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் மேலும் உங்களுக்கு பிடிக்காத யாரேனும் இருந்தால் கூட அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தருவது மிகவும் நல்லது.

  உங்களது திட்டத்துக்கான குறியீடு – இரண்டு சிட்டுக்குருவிகள்

  சிம்மம்: 

  தற்செயல் என்ற ஒன்று இல்லை என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய நாள். கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. சில தடைகள் இருந்தாலும் அவை தானாகவே விலகிவிடும். இன்றைய நாள் உங்களுக்கேற்ற நாளாக அமையும்.

  அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பீங்கான் குவளை

  கன்னி: 

  இன்றைய நாள் அதிக மன அழுத்தம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுவது நல்லது. நிலைமை சற்று சீரானதும் உங்கள் உள்ளுணர்வின்படி செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.

  அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - நீல நிற மட்பாண்டங்கள்

  துலாம்: 

  அலுவலகத்தில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. நீங்கள் செய்யும் சிறு தவறால் வீட்டில் நிம்மதி குறையலாம். எனவே கவனமுடன் செயல்படுவது நல்லது.

  உங்கள அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - கழுகு

  விருச்சிகம்

  தொடர்ச்சியான கடினமான நாட்களுக்குப் பின்னர் இன்று சற்று நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பழைய முதலீடுகளின் மூலம் இன்று லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

  உங்களது அதிர்ஷ்டதுக்கான குறியீடு – அணில்

  தனுசு: 

  வாய்ப்புகள் உங்களை விட்டு நழுவினால் அவற்றைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. உங்கள் குழந்தைகள் அவர்களுடன் நீங்கள் நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யாரேனும் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

  உங்களது அதிர்ஷ்டதுக்கான குறியீடு - தோட்டம்

  மகரம்: 

  நீங்கள் நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தை இன்று செயல்படுத்தலாம். உங்கள் வாழ்க்கை துணை மூலம் மனஉறுதி அதிகரிக்கும். மதியத்திற்கு மேல் விருந்தாளிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

  உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கிளி

  கும்பம்: 

  நீண்ட நாட்களாக சுமையாக இருந்த ஒன்று உங்களை விட்டு நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு: தேவையற்ற விஷயங்களை பற்றி கவலை கொள்ளாமல் செய்யும் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் அன்பிற்குரிய ஒருவர் உங்களை நினைத்துக் கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

  அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பறவைக்கூடு

  மீனம்: 

  பரபரப்பாக இருந்த சூழல் மாறி சற்று அமைதி அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். குழப்பத்துடன் எந்தவித வேலையிலும் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவிலான பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே கவனம் தேவை.

  உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - ஆமை

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News