மேஷம்:
இன்றைக்கு உங்களுக்கான ஆற்றல் குழப்பம் உடையதாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்களை செய்து முடிக்க முடியாது. சிலரது கவனத்தை ஈர்க்க புதிய வழிகளை கண்டறிய வேண்டியிருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் தவறான புரிதலை தவிர்க்க கவனமாக பேசவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தந்தம்
ரிஷபம்:
இதுவரையில் உங்கள் மீது சிலர் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கலாம். ஆனால், அதை மாற்றியமைக்கும் நேரம் இது. உங்கள் உணர்வுகளை மிஞ்சியதாக உங்கள் நடத்தைகள் இருக்கலாம். ஆகவே, உங்கள் மனதில் என்ன உள்ளது என்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய சிக்னல்
மிதுனம்:
ஒரு நபரை புரிந்து கொள்ள அல்லது வளர்ச்சியை முன்னெடுக்க புதிய முயற்சி தேவைப்படும். இனி வரும் நாட்களில் உங்கள் பணிகளை ஆக்கப்பூர்வமாக நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கான நம்பிக்கை அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக இருந்த எரிச்சல் உணர்வு நீங்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கீ செயின்
கடகம்:
உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் ஏற்படுவதாக தோன்றும். ஆனால், அவை சரியான திசையற்று இருக்கின்றன. தொழில்துறை சார்ந்த சீனியரின் அறிவுரை உங்களுக்கு பலனுள்ளதாக அமையும். காதல் உறவுகளுக்காக நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். தேவையற்ற விவாதம் நடக்க வாய்ப்பு உண்டு.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கட்டுரை
சிம்மம்:
நெருக்கடி கொடுக்கும் உத்திகள் மூலம் இனி உங்களுக்கு பலன் கிடைக்காமல் போகலாம். உங்களை சுற்றியுள்ள சிலருக்கு நீங்கள் தொந்தரவாக அமைவீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் முறையில் மாற்றம் வேண்டும். தேக்கமடைந்த வணிகத்தில் இப்போது முன்னேற்றம் காணப்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி நாணயம்
கன்னி:
கடந்த கால நினைவுகள் உங்களின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும். செய்த தவறுகளை மீண்டும் செய்யாத வண்ணம் கவனமாக இருப்பீர்கள். சில விஷயங்களில் உடனடி தெளிவு கிடைக்காவிட்டால் அதில் இப்போது கவனம் செலுத்த வேண்டாம். நிதி சார்ந்த வளர்ச்சி மீண்டும் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் டாப் டேபிள்
துலாம்:
உங்கள் உடன் பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர் உங்கள் திறன்களை பயன்படுத்திக் கொள்வார்கள். மந்தமான பொழுதுகள் இனி விறுவிறுப்பாக மாற இருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற புதிய வாய்ப்பை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் அந்த வாய்ப்பை உங்களுக்கு தரக் கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு கார்
விருச்சிகம்:
அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் தவறான பலன் தான் கிடைத்தது என்பதை நீங்கள் வெகுவிரைவில் உணருவீர்கள். ஒரு சமயத்தில் ஒற்றை திசை நோக்கி பயணிப்பதே பலன் அளிக்கும். உங்கள் கவனத்தை திசை திருப்ப நினைப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்தமான இனிப்பு
தனுசு:
உங்கள் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட சின்னசின்ன முயற்சிகள் இந்த துயர்மிகு காலத்தில் பலன் அளிக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை நீங்கள் சமாளிப்பீர்கள். சட்ட வழக்குகளை சந்திப்பவர்கள் ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இன்டோர் பிளான்ட்
மகரம்:
வணிக நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த கடின உழைப்பு மிகுந்த காலத்தில் பார்ட்னர்கள் மூலமாக உங்கள் கவலைகள் நீங்கும். உங்களுக்கான திருமண ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெறும். உங்கள் மனம் தெளிவானதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெழுகுவர்த்தி ஸ்டாண்டு
கும்பம்:
உயர் கல்விக்காக திட்டமிடும்போது சில தடைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். ஆனால், அவற்றை கடந்து வருவீர்கள். உங்களுக்கான உதவி தேடி வரும். வெகு தொலைவில் இருப்பவர்களுக்கு வீட்டு நினைப்பு அதிகமாக இருக்கும். அது தற்காலிகமானது தான். தாயின் உடல்நலன் பாதிக்கப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் கல்
மீனம்:
நெருங்கிய நண்பரிடம் இருந்து புதிய இடத்தில் பணியாற்றுவதற்கான பரிந்துரை வரும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் மீது கவனம் செலுத்தி நினைத்த பலனை அடையவும். தற்சமயம் சில தடுமாற்றங்களை உணருவீர்கள். குறுகிய பயணம் மன நிம்மதியை தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாப்கின் ஹோல்டர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News