முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 1, 2023) புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 1, 2023) புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    வேலை மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை உருவாக்குவது பற்றிய உங்கள் திட்டம் பெரும் முயற்சிக்கு பிறகு இன்று வெற்றி பெறலாம். மிகவும் தேவையான தலைமையை கொண்டு வர சீனியர் உங்களுடன் கூட்டணி சேரலாம். கடந்த காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்கள் காரணமாக பிறரை நம்புவதற்கு இன்று தயக்கம் கொள்வீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நல்ல நகைச்சுவை காட்சிகள்

    ரிஷபம்:

    உங்கள் வழக்கமான பணிகளை இன்று செய்து முடிப்பதில் தடை ஏதும் ஏற்படாது. எதிர்பாராத ஒரு செய்தி உங்களை ஆழமாக சிந்திக்க வைக்கும். ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி உங்கள் ஆர்வத்தை இன்று ஈர்க்க கூடும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிதாக பூத்த மலர்கள்

    மிதுனம்:

    உங்கள் உடன்பிறந்தவர் உங்களுடன் வாக்குவாதத்தில் இன்று ஈடுபட்டால், நீங்களும் பதிலுக்கு பதில் சண்டையிடாமல் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கும். நீண்ட நாள் நிலுவையிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்களை எளிதாக இன்று செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் பிளேட்

    கடகம்:

    நீங்கள் நீண்ட நாட்களாக கைகூடுமா என்று எதிர்பார்த்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நீடித்த சஸ்பென்ஸ் இறுதியாக இன்று முடிவுக்கு வரலாம். சிந்தனையில் தெளிவு இன்று உங்களுக்கு முதன்மை தேவையாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்த்தை உயர்த்தி கொள்வதில் நீங்கள் செயல்படலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கலர் ரிப்பன்

    சிம்மம்:

    இன்றைய நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடனும் முழு உற்சாகத்துடனும் இருப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ள கூடிய நேர்மறையான முயற்சிகளின் விளைவாக இது இருக்கலாம். ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் சில கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த இனிப்பு

    கன்னி:

    உங்கள் தினசரி பணிகளை சற்று ஒத்தி வைப்பது இன்று உங்களது டென்ஷனை குறைக்கும். ஏனென்றால் அவற்றை சரியான நேரத்தில் இன்று உங்களால் முடிக்க முடியாமல் போவதால் விரக்தியடையலாம். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவிகளை செய்வது நல்லது. மற்றவர்கள் உங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக சரியான முறையில் தகவல் தொடர்பு மேற்கொள்வதை உறுதி செய்யவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நினைவு பரிசு

    துலாம்:

    கடந்த காலத்தில் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த சில வாக்குறுதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நாளின்று. உங்கள் உடன்பிறந்தவர்கள் சில குடும்ப பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காப்பர் பாட்டில்

    விருச்சிகம்:

    உங்களது சமீபத்திய கனவுகள் அல்லது ஆசைகளை நிறைவேற்றி கொள்ள முயற்சிகளை துவக்க இன்று அதிர்ஷ்டமான நாள். பல நபர்களுடன் உங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வதை இன்று கட்டுப்படுத்துங்கள். இல்லையென்றால் பெரும் இடையூறுகள் ஏற்பட கூடும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டெரகோட்டா பவுல்

    தனுசு:

    உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் சிலர் உங்களை எதிர்மறையாக பயன்படுத்த நினைக்கலாம் நீங்கள் அவர்களின் சொல்லை கேட்டு நடப்பதை தவிர்க்க முடியாமல் போகலாம். எனினும் சற்று சிந்தித்து லாவகமாக உத்தியை கையாளுவது அவர்களிடமிருந்து நீங்கள் எஸ்கேப்பாக உதவி செய்யும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாஸ் டாப் டேபிள்

    மகரம்:

    இன்று நீங்கள் அவசரமாக செய்யும் எதுவும் சரியாக இருக்காது. கடைசி நிமிட கவலை உங்களது தினசரி செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டுமே சிந்திப்பது அல்லது செயல்படுவது நல்லது. மன அமைதிக்கு தியானம் உதவலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபிக் க்யூப்

    கும்பம்:

    நீங்கள் நிறைவேற்ற துடித்த பழைய கனவு ஒன்று நாள் முழுவதும் உங்களை தொந்தரவு செய்யலாம். புதிய திசையை நோக்கி இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் பலனளிக்கும். ஒரு புதிய வேலை வாய்ப்புக்கான சிறந்த வழிகளை உங்கள் நண்பர் உங்களுக்கு வழங்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்ஸ்

    மீனம்:

    இன்று எதையும் எதிர்கொள்ளும் வகையில் உங்கள் மனநிலையை தயார் செய்து வைத்து உறுதியாக இருங்கள். ஏனென்றால் சவால்கள் நிறைந்த நாள். நாளின் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் பிரச்சனைகள் மற்றும் சவால்களை கண்டு பதற்றம் கொள்ளாதீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய வாகனம்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News