ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 11, 2023) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 11, 2023) புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீண்ட நாட்களுக்கு முன் உங்களிடம் ஒருவர் வைத்த கோரிக்கையை நீங்கள் இன்று தீவிரமாக மறுபரிசீலனை செய்யலாம். தன்னலமின்றி மற்றவர்களுக்கு உதவுவதற்கான திடீர் உள்ளுணர்வு இன்று உங்களுக்கு ஏற்படும். முன்பு உங்களிடம் உதவி பெற்ற ஒருவர் இன்று உங்களுக்கு தேவையான உதவி செய்யலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேரிக்காய் மரம்

ரிஷபம்:

இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம். அதே நேரம் நீங்கள் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகளை நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்த இன்று ஒரு நல்ல நாள். எனவே மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்து விடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலினைட்

மிதுனம்:

உங்களது மெச்சூரிட்டி இன்று குழப்பங்களுக்கு இடையே சரியான முடிவு எடுக்க மற்றும் கடினமான வேலையை சமாளிக்க உதவும். உங்களது வேலை அல்லது தொழிலில் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் கூடை

கடகம்:

பணியிடத்தில் இன்று ஒரு நேர்மறை இயக்கம் உங்களை சுற்றி இருக்கும் என்றாலும் அது வழக்கத்தை விட மெதுவாக இருக்கும். இதன் காரணமாக இன்று நீங்கள் சிறப்பாக வேலை செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். உங்களது வருகையை எதிர்நோக்கி உங்களுக்கு வேண்டிய ஒருவர் காத்திருக்க கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியூஸ்பேப்பர் ஸ்டாண்ட்

சிம்மம்:

பணியிடம் மற்றும் குடும்பம் என எங்கும் இன்று ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் நிறைந்த ஒரு இனிமையான நாளாக உங்களுக்கு இருக்கும். கலந்துரையாடல்களில் நீங்கள் சமமாக பங்கேற்க வேண்டியிருக்கும். ஒரு புதிய மற்றும் பயனுள்ள வழக்கம் உங்களது நாளை சுவாரஸ்யமாக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

கன்னி:

மற்றவர்களின் தவறு உங்கள் மனதில் சில ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் அதை மன்னிக்கவும், மறக்கவும் வேண்டிய நேரம் இன்று. நெருங்கிய ஒருவருக்கு நீங்கள் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிடலாம். குழப்பங்கள் நீங்கி உங்கள் மனம் தெளிவாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் சஃபையர்

துலாம்:

நீங்கள் இதுவரை சந்திக்காத ஒருவர் உங்களை இன்று தொடர்பு கொள்ள விரும்பலாம். அதே நேரம் முக்கிய நபர்களுக்கு நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் டூல்ஸ் அல்லது ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் இன்று நீங்கள் சில நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரமிடு

விருச்சிகம்:

இன்று உங்கள் கடின உழைப்பு மற்றும் நியாயமான பணிக்கான பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது. நீங்கள் காதல் உறவில் உள்ள நபருடன் மேற்கொள்ளும் சிறிய பயணம் உங்களை உற்சாகமாக்கும். இன்று உங்களது வாழ்க்கையில் புதிய முறைகள் உள்நுழையலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற டூர்மலைன்

தனுசு:

உங்களால் ஒரு விஷயத்தை தீர்க்கவோ அல்லது மறக்கவோ முடியாவிட்டால் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. இன்று உங்கள் மனம் முழுவதும் புதுமையான எண்ணங்களால் நிரம்பி வழிய கூடும். காதலில் ஆர்வம் கொண்ட ஒரு நபரை நீங்கள் இன்று சந்திக்க கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டேபிள்டாப்

மகரம்;

நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் இன்று நிம்மதியாக உணர்வீர்கள் மற்றும் உங்களுக்காக நீங்களே நேரம் ஒதுக்கி கொள்வீர்கள். இன்று புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். எதிலும் கவனமாக இருங்கள். உங்கள் நெருங்கிய நண்பர் சில நிதி அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதை அறிந்து உதவி செய்ய நினைப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு நூல்

கும்பம்:

நீண்ட நாட்களாக நீங்கள் தேடி கொண்டிருந்த புதிய வேலைவாய்ப்பு இறுதியாக இன்று கிடைக்கலாம். நீங்கள் இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் பெற்றோர் இன்று உங்களிடம் சில முக்கிய விஷயங்களை பேச நினைக்கலாம். எனவே அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய வாட்ச்

மீனம்:

உங்கள் வேலையை விரைவுபடுத்த எளிமையான அணுகுமுறை உதவலாம். நெருக்கமானவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது சில நேரங்களில் கடினமான உணர்வுகளுக்கு காரணமாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறிய அளவிலான பார்ட்டியில் நீங்கள் பங்கேற்று அங்கு பலரின் கவனத்தை ஈர்க்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புறா

First published:

Tags: Oracle Speaks, Tamil News