முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (பிப்ரவரி 19, 2023) புதிய வாகனம் வாங்குவீர்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (பிப்ரவரி 19, 2023) புதிய வாகனம் வாங்குவீர்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதாக உங்கள் மனதுக்கு தோன்றினாலும், வெகுவிரைவில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். பணம் தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். மன அமைதி வேண்டி சிலர் வீட்டில் செல்லப்பிராணியை கொண்டு வந்து வளர்க்க விரும்பலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாயில்கதவு

    ரிஷபம்:

    உங்கள் மனதுக்கு கவலை தரக் கூடிய விஷயங்களுக்கு இப்போது தீர்வு கிடைக்கும். பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு இழுக்க வேண்டாம். தனித்துவம் நிறைந்த புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். உங்களுக்கு திடீர் கோபம் அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படலாம். பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய பாத்திரம்

    மிதுனம்:

    விவாதங்கள் நடக்கும் போது முதலில் பொறுமையாக கவனித்து, அதன் பின்னர் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த விரும்பினாலும் நேரம் அதற்கு ஒத்துழைக்காது. இன்னும் சில நாட்களுக்கு இதேபோன்ற இழுபறி நிலை நீடிக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செவ்வந்திக்கல்

    கடகம்:

    நீங்கள் முயற்சிக்கும் விஷயங்களுக்கு இப்போது சிறகுகள் கிடைக்க இருக்கின்றன. உங்களுக்கு சௌகரியமான நேரத்தின் அடிப்படையில் திட்டமிடல்களை மேற்கொள்ளவும். உங்கள் குடும்பத்தில் இருந்து நீங்கள் விலகி இருக்க நேரிடும். வீட்டில் புதிய வளர்ப்பு பிராணியை வளர்க்க ஆசைப்படுவீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஓவியம்

    சிம்மம்:

    சக ஊழியர் ஒருவர் உங்கள் வாழ்வின் அங்கமாக மாற இருக்கிறார். உங்கள் இருவருக்கு இடையே பந்தம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் நீங்கள் மனம் உடைந்து காணப்பட்டிருப்பீர்கள். இப்போது தைரியம் அதிகரிக்கும். உங்கள் உடல்நலனை பாதிக்கக் கூடிய எந்தவொரு விஷயத்திற்கும் நீங்கள் அடிமையாக இருக்கக் கூடாது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உள் அரங்கு பனை செடி

    கன்னி:

    கடந்த சில மாதங்களாக நீங்கள் பகல்கனவு கண்டு வந்துள்ளீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பரிந்துரைகள் உங்களிடம் முன்வைக்கப்படும். நண்பர்கள் மற்றும் உங்கள் வேலை, இரண்டுக்கும் இடையே நேர மேலாண்மை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். பணிசார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய கடிகாரம்

    துலாம்:

    வாழ்க்கையில் பழைய உத்திகளை காட்டிலும் சாதுர்யமான முடிவுகளுக்கு மதிப்பு அதிகம். உங்கள் வாழ்க்கையை சுற்றி புதிய விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளவும். அடுத்த சில நாட்களுக்கு உங்கள் வாழ்க்கை மந்தமானதாக தோன்றும். இளம் நபர் ஒருவர் உங்கள் மனதை கவருவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் டம்ளர்

    விருச்சிகம்:

    உங்கள் நோக்கத்தில் உள்ள புதிய விஷயங்கள் நடந்தேறும். உறவுகள் பலப்படும். நிதி முதலீடுகள் குறித்து சிந்திப்பதற்கு சிறப்பான நேரம் இது. உங்களுக்கான வாய்ப்புகளை ஒருங்கிணைக்கவும். பயணம் செய்யும் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உடைந்த கிளாஸ்

    தனுசு:

    குடும்பம் மற்றும் பணி சார்ந்து பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளுவதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இது சாத்தியம் என்று நீங்கள் நினைத்தாலும், வீட்டில் சில குறைபாடுகள் இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தெளிவான தகவல் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காகம்

    மகரம்:

    புதிய கடன் உங்களுக்கு சிரமம் தருவதாக அமையும். அதை சமாளிப்பதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். புதிய வாகனம் ஒன்றை வாங்க உள்ளீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது ஒருங்கிணைப்பீர்கள். எலெக்ட்ரானிக் ஸ்கிரீன் பயன்பாட்டை குறைக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - திரைச்சீலை

    கும்பம்:

    உங்களுடன் நெருங்கி வருகின்ற புதிய தொடர்புகள் மூலமாக புதிய பலன்கள் கிடைக்கும். இன்றைய தினம் புதிய பணிகளை தொடங்கலாம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதிகாரம் நிறைந்த ஒருவரை நீங்கள் சந்திக்க உள்ளீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காலிங்பெல்

    மீனம்:

    உடல் ரீதியாக நீங்கள் அதிகம் இயக்கமின்றி இருந்தாலும், ஆற்றல் அனைத்தும் உங்கள் மனதில் நிரம்பி இருக்கும். குழந்தைகளுடன் நல்லதொரு பொழுதை நீங்கள் கழிக்க வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை தேடி வரக் கூடிய பழைய நண்பர் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தருவார்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் இலைகள்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News