மேஷம்:
இப்போது ஒவ்வொரு உணர்வுகளையும் முந்தும் வகையில் புதிய விஷயம் மீதான ஆர்வம் பிறக்கும். சரியான தருணத்தில் புதிய விஷயத்தை தொடங்குவது குறித்து நீங்கள் அவசரம் காட்டுவீர்கள். நல்லெண்ணம் கொண்ட ஒருவர் உங்கள் நேரத்தை நிறைவு செய்வார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரியகாந்தி மலர்
ரிஷபம்:
உங்கள் கண்களுக்கு புதிய வாய்ப்பு ஒன்று தென்படலாம். நீங்கள் தேடிச் செல்லாமல் இருக்கும்போதே உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். அமைதியான சூழலில் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். புதிய நிதித் திட்டம் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் மெழுகுவர்த்தி
மிதுனம்:
ஒரு நண்பர் அல்லது பழைய அலுவலகத்தின் சக ஊழியர் ஒருவர் தகவல் தெரிவிக்காமல் உங்களை சந்திக்க வரக் கூடும். ஒரே சமயத்தில் பல பொறுப்புகளில் கவனம் செலுத்துவதால் உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை
கடகம்:
உங்கள் தன்னம்பிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்க உள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளில் நீங்கள் இன்று கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பு நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வீணை
சிம்மம்:
கடினமான இலக்கு நோக்கிய உங்கள் பார்வையில் ஒரு மாற்றம் தென்படுவதை நீங்கள் உணர முடியும். நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு உங்களை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும். நிலுவையில் உள்ள விஷயங்கள் மீது கவனம் செலுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - க்ரீப்பர்
கன்னி:
சுய மேம்பாட்டு பழக்கங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத சூழலில் நீங்கள் சில கவலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பயண திட்டங்கள் தற்போது தெளிவாக இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கீசெயின்
துலாம்:
சில விஷயங்களை இப்போதே விவாதிப்பது முதிர்ச்சியற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வரும் அறிவுரைகள் மீது கவனம் செலுத்தவும். புதிய வாகனம் வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சுவர் ஓவியம்
விருச்சிகம்:
நிரந்தர தீர்வு என்ற சிறப்பான விஷயம் போல வேறொன்றும் இல்லை. பிறரை கேள்வி கேட்கும் முன்பாக உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்தவும். தேவையற்ற பதற்றம் உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு டயரி
தனுசு:
சொத்துக்களை தக்க வைப்பது மிகக் கடினமான காரியம் ஆகும். நிதி சார்ந்த விஷயங்களில் தடுமாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். உங்கள் குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கிறிஸ்டல்
மகரம்:
உங்களுக்கான தனி நேரம் இல்லாமல் போகலாம். ஆனாலும், பொழுதுபோக்கு அம்சங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். கூட்டத்தில் தொலைந்து போன உணர்வு உங்கள் மனதில் தென்படும். இலகுவான இசையை ரசிக்கும் உத்திகளை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டீ கப்
கும்பம்:
இன்றைய நாளின் தொடக்கமாக உங்கள் மனதில் நல்லதொரு சிந்தனை உதிக்கும். உங்கள் கவனத்தை ஈர்க்கின்ற விஷயம் ஒன்று நடந்தேறும். உங்களுக்கான ஷாப்பிங் செய்து கொள்ள நீங்கள் ஆசையாக இருப்பீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செஸ் போர்டு
மீனம்:
பெற்றோருக்கும், உங்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படலாம். நீங்கள் நெருக்கமானவராக நினைக்கும் ஒருவர், உங்களை இப்போது புறக்கணிக்க கூடும். கடைசி நேரத்தில் உங்கள் மனதில் தோன்றும் புத்தாக்க சிந்தனை, ப்ராஜக்டை காப்பாற்றுவதற்கு உதவியாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கட்டுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News