ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 23, 2022) கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 23, 2022) கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நிலுவையில் உள்ள மற்றும் தடைபட்ட வேலைகளை தொடர இன்று ஒரு நல்ல நாள். லேசான தொற்று அல்லது தலைவலி இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாக்குவாதம் ஏற்பட்டால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்திற்கான விஷயங்களில் இன்று அதிகம் கவனம் செலுத்தாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

ரிஷபம்:

இன்று உங்களுக்கு ஆற்றல் மற்றும் சக்திவாய்ந்த சாதகமான நாளாக அமையும். சில புதிய வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருந்தால் தயங்காமல் செய்யலாம். உங்களிடம் இன்று யாராவது கடன் கேட்டால் பணிவுடன் மறுக்கலாம். இன்று நாளை துவக்கும் போது சுறுசுறுப்பாக இருக்க கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

மிதுனம்:

நீங்கள் எப்போதும் மனதளவில் வலுவானவர் என்ற பிம்பம் இன்று சிலர் முன் உடையலாம், உங்களின் உணர்ச்சிபூர்வமான மறுபக்கத்தை இன்று சிலர் தெரிந்து கொள்வார்கள். உங்கள் மனம் சமநிலையை அடைய சில உத்திகள் தேவைப்படலாம். உங்களோடு பணியாற்றும் சக ஊழியர் உதவி கேட்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கற்கள்

கடகம்:

ஏற்கனவே அறிமுகமானவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பது அல்லது மீண்டும் இணைவது இன்று நடக்கலாம். அவுட்டோர் மீட்டிங் இருந்தால் கிளைமேட் காரணமாக இன்று ரத்தாகும். இன்று சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காகிதம்

சிம்மம்:

இன்று உங்களுக்கு மிக இனிமையான நாளாக அமையும். எதிர்பாராவிதமாக இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். நிலுவையில் உள்ள சில பணிகள் இன்று தடையின்றி நடக்கலாம். உங்கள் சப்போர்ட் ஊழியர்கள் உங்களிடம் கொண்டு வரும் குறையை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்து சரம்

கன்னி:

பணியிடத்தில் இன்று உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். அலுவலகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சிக்கல்கள் இன்று தீர்க்கப்படும். வீட்டிற்கு வந்த பிறகும் அலுவலக வேலைகளை பார்க்க நேரிடும். வேலைப்பளு காரணமாக இந்து உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் போகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த நறுமணம்

துலாம்:

அக்கறையுடன் இருப்பது உங்களை எப்போதும் பலவீனமாக்காது என்பதை இன்று உணர்வீர்கள். புதிய செய்முறையை திட்டமிட்டிருந்தல் இன்று அதனை முயற்சிக்க சிறந்த நாள். உங்கள் தற்போதைய உடல் நிலையில் இன்று கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற தண்டு

விருச்சிகம்:

பயங்கரமான அல்லது கெட்ட கனவுகள் ஆழ் மனதின் பயம் மட்டுமே, எனவே அவற்றை இன்று பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் கவனத்தை இன்று ஈர்க்கலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம் உங்கள் நாளை இனிமையாக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு செங்கல் சுவர்

தனுசு:

உங்களது அன்புக்குரியவர்களுடன் இன்று நேரம் செலவிட வேண்டும். மாலை நேரத்தில் வெளியூர் பயணம் திட்டமிடப்படலாம். உங்களை பற்றி சிந்திக்கும் ஒரு நெருங்கிய நபர் இன்று உங்களை மிகவும் மிஸ் செய்வார். இன்று ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் ஹைலைட்டர்

மகரம்:

பழைய நினைவுகள் இன்று உங்கள் நாள் முழுவதையும் ஆட்சி செய்யலாம். இன்று உங்கள் பெற்றோரை கவனித்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்பலாம் என்பதால் அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். பழைய அணுகுமுறையை முன்னெடுத்து செல்ல அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளாஸ் பாட்டில்

கும்பம்:

பயம் மற்றும் அச்சங்களில் இருந்து இன்று நீங்கள் விடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கும், நாள் உங்களுக்கு சிறந்ததாக அமையும். சமீபத்திய மாதங்களில் நீங்கள் பெற்ற விஷயங்களுக்கு இன்று நன்றியுள்ளவர்களாக உணர்கிறீர்கள். இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழைய ஆலமரம்

மீனம்:

வணிகத்தில் இருப்பவர்கள் இன்று புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ நிபுணர்களுக்கு இன்று வழக்கத்தை விட அதிக வேலையாக நாளாக இருக்கும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு இன்று இடையூறுகள் ஏற்படும். உங்கள் ஆதரவு குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று தேவைப்படுகிறது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒன்றாக இருக்கும் 3 பறவைகள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News