மேஷம்:
நிறுவனத்தில் வெகு காலமாக நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். வெளியூரில் தங்கி இருக்கும் நபர்களுக்கு வீட்டு நினைப்பு வந்தால், தற்போது ஊருக்கு சென்று வரலாம். வெளியிடங்களை சுற்றிப் பார்க்க நீண்ட காலமாக நீங்கள் திட்டமிட்ட பயணம் இப்போது நடக்க வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மைல்கல்
ரிஷபம்:
இன்றைய தினம் நீங்கள் மிகுந்த சௌகரியத்துடன் வலம் வருவீர்கள். உணர்வு ரீதியாக நீங்கள் கொண்டுள்ள அன்பு எத்தகையது என்பதை உங்கள் வாழ்க்கை துணை தெரிந்து கொள்ள விரும்புகிறார். உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் பல விஷயங்கள் நடக்கக்கூடும். ஆனால், அவற்றில் தலையிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ப்ளூ பாட்டில்
மிதுனம்:
அண்மையில் நீங்கள் மேற்கொண்ட பயணம் உங்கள் மனதை ஏற்கும். அதன் அடிப்படையில் புதிய பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். பழைய தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்க மிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். புதிய சவால் காரணமாக பிஸியாக இருப்பீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கலர் பேப்பர்.
கடகம்:
ஞாபக மறதி காரணமாக உங்கள் பணிகள் தடைபடும். உங்கள் பணிகளை கனகச்சிதமாக முடிக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக இப்போது மேற்கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிடித்தமான ஸ்னாக்ஸ்
சிம்மம்:
நன்கொடை வழங்க அல்லது தானம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும். உங்களுக்கான திட்டமிடல்களை உங்கள் குழந்தைகள் மேற்கொள்வார்கள். அவை பயனுள்ளதாக அமையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – உள் அரங்கு பொழுதுபோக்கு
கன்னி:
நீங்கள் எதார்த்தவாதியாக இருப்பதால் சில பாதகங்கள் ஏற்படலாம். உங்கள் நடவடிக்கைகளின் மூலமாக சிலரது மனம் புண்படக்கூடும். ஆகவே பிறருடன் பேசும்போது கவனமாக பேசவும். உங்களுக்கான புதிய பணித்திட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கான நேரம் இதுவாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பழக்கூடை
துலாம்:
நீண்ட காலமாக ஆழ்மனதில் குடி கொண்டிருந்த அச்சங்கள் விலகும். நீங்கள் தவிர்த்து வரும் நபரை இப்போது அவசரமாக சந்திக்க வேண்டிய தேவை ஏற்படலாம். லேசான காயம் அல்லது சர்மா அலர்ஜி காரணமாக உங்களுக்கு எரிச்சல் உணர்வு ஏற்படக்கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மென்மையான துணி
விருச்சிகம்:
உங்களை சுற்றி சில வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கும். நம்பிக்கை கூறிய நபர் மூலமாக இது உங்களுக்கு தெரிய வரும். சில முக்கிய முடிவுகளை அவசரகதியில் எடுக்க வேண்டியிருக்கலாம். புதிய மெலோடி செய்வதற்கு உகந்த நேரம் இதுவாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இரண்டு குருவிகள்
தனுசு:
பழைய நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை இப்போது செய்யவும். பழைய பழக்கம் ஒன்றை மீண்டும் தொடங்குவதற்கான புத்துணர்ச்சி உங்களுக்கு கிடைக்கும். உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புத்தகக் கடை
மகரம்:
ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி தரக்கூடிய அனுபவம் கிடைக்காது. முக்கியமான விஷயங்களை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கலாம். உங்கள் எண்ண ஓட்டங்களில் இன்று மாற்றம் ஏற்படக்கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இறகு
கும்பம்:
இன்றைய தினம் உங்களுக்கு மிகுந்த ரிலாக்ஸ் கிடைக்கும். உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம். பிறரிடம் கடன் கேட்பது நல்லதல்ல. அது மன கஷ்டத்தை உண்டாக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மூங்கில் செடி
மீனம்:
முக்கியமான முடிவுகளுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் திராட்சை பழங்கள் கூட உங்களுக்கு துவர்ப்பு சுவையை தரக்கூடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் என்ன தீர்வு பெற விரும்புகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு இன்றைய நாளை பிரகாசமானதாக மாற்றும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – போக்குவரத்து சிக்னல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News