மேஷம்:
நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான நாளாகும். உங்கள் ஆவண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும். நீங்கள் ஒத்தி வைக்கின்ற சில விஷயங்கள் மீண்டும், மீண்டும் உங்களை நோக்கி திரும்பும். கடந்த கால தொடர்புகள் மூலமாக நன்மை விளையும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் குவார்ட்ஸ்
ரிஷபம்:
ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் இன்றைய தினம் உங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமையும். அவை உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கலாம். உங்கள் சீனியர்கள் சொல்லும் அறிவுரையை புறக்கணிக்க வேண்டாம். தனி நலன் குறித்து கவனம் செலுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி
மிதுனம்:
எவ்வளவு சிறியதாக நீங்கள் திட்டமிட்டாலும் அதற்கு வெற்றி கிடைக்கும். உங்களிடம் இருந்து நேரடியாக சில விஷயங்களை கேட்டு தெளிவு பெற உங்கள் வாழ்க்கை துணை விரும்புகிறார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கயிறு
கடகம்:
நம்பிக்கைக்கு உரிய ஒருவர் உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார். உங்களுக்கான பண வரவு உறுதி அளிக்கப்பட்டபடி இருக்கும். குறிப்பாக வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் சமீபத்திய முடிவுகளை மறு பரிசீலனை செய்வீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நோட்டு புத்தகம்
சிம்மம்:
பிறரது பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். ஏதோ ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதை நீங்கள் ஒத்திவைத்து வருகிறீர்கள். அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். தொலைந்து போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி தட்டு
கன்னி:
எதையும் அலசி ஆராயாமல், ஒரு முடிவுக்கு வந்துவிட நீங்கள் விரும்பினால் அது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துவதாக அமையும். உங்களின் வேலையை விரிவாக்கம் செய்யத் தகுந்த புதிய வாய்ப்பு தேடி வரும். மீண்டும் மகிழ்ச்சி திரும்ப இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெண்கல பாத்திரம்
துலாம்:
நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் வெகு முன்னதாகவே கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மனம் நிம்மதியாக இல்லை. முக்கிய முடிவுகளை எடுக்க அவசரம் காட்ட வேண்டாம். அது கவலையை ஏற்படுத்தும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கம்பளம்
விருச்சிகம்:
நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எதிர்மறையான உணர்வுகள் மேலோங்கும். அதில் இருந்து வெளிவர அவர்களுக்கு உதவி செய்யவும். உங்களுக்கு இன்று சற்று சோர்வாக இருக்கும். ஆனால், அது தற்காலிகமானது தான்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சர்க்கரை பானம்
தனுசு:
தேவையற்ற பதற்றத்தை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான வளர்ச்சி தென்பட இருக்கிறது. உங்களிடம் நடித்துக் கொண்டிருப்பவர்களை ஒதுக்கி, உங்கள் நலன் மீது அக்கறை கொண்டுள்ள உண்மையான நபரை நீங்கள் கண்டறிய வேண்டியிருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய மின் தகடு
மகரம்:
நீங்கள் நெருக்கம் மிகுந்தவராக நினைத்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவர் அதற்கு உகந்தவராக இல்லை. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வரும் செய்தி உங்களை கவலையில் ஆழ்த்தும். புதிய வணிகத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்டிக்கர்
கும்பம்:
உங்கள் முடிவுகளில் அசட்டையாக இருக்க வேண்டாம். பணியிடத்தில் உங்கள் திறமையை சீனியர்கள் பாராட்டுவார்கள். அதே சமயம், கூடுதல் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படும். குழப்பம் இன்றி தெளிவான சிந்தனையை வெளிப்படுத்தவும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமயமான கிளாஸ்
மீனம்:
எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி முடிக்க வேண்டிய நாள் இதுவாகும். உங்கள் கனவுகளை நீங்கள் நெருங்கி வருகிறீர்கள். மூத்தவர்களிடம் இருந்து அறிவுரை கேட்டுக் கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கிறிஸ்டல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News