மேஷம்:
பெரும்பாலான நாட்களைப் போலல்லாமல், இன்று சற்று மந்தமான நாளாக இருக்கலாம். நீங்கள் இன்று சோம்பலாக உணரலாம், ஆனால் பிற்பகலுக்கு மேல் உங்களுக்கு ஆற்றல் வேறு வழியில் கிடைக்க கூடும். எதிர்பாராத குழப்பம் உங்களை நோக்கி வர வாய்ப்புள்ளது
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நீல கல்
ரிஷபம்:
உங்கள் தனிப்பட்ட திறன்களுக்கு இது ஒரு ஆளுமை திறன் மிக்க நாள். புதிய உறுதிமொழிகளை எடுப்பது உங்களுக்கு நன்மை தரும். நெருங்கிய நண்பருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். இன்று நெருக்கமான ஒருவருக்கு உதவி செய்ய வேண்டிய நாள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தலைப்பாகை
மிதுனம்:
உங்களைச் சுற்றியுள்ள அதிகப்படியான நாடக மனிதர்கள் உங்களை விட்டு விலகி போவார்கள். உங்களுக்கான வாய்ப்புகள் பறிக்க வாய்ப்புகள் உள்ளது. உண்மையான உள்ளம் கொண்ட ஒருவர் உங்களுடன் நட்பு பாராட்டுவார். எந்தவொரு கையாளுதலிலும் விளையாடாமல் கவனமாக இருங்கள். இல்லையெனில், உங்களுக்கு இன்றைய நாள் மோசமானதாக மாறலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பாசி குச்சி
கடகம்:
உங்கள் கவலைகள் இன்று தீர்க்கப்படும். நீண்ட நாட்களாக உங்கள் மனதை நோகடித்து கொண்டிருந்த பிரச்சனைகள், இன்று சரியாகி விடும். உங்களுக்கு உள்ள தடைகள் அனைத்தும் நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. உங்களின் பழைய முறைகள் இப்போது எந்த மதிப்பையும் கொண்டிருக்காது என்பதால், நீங்கள் ஒவ்வொரு விஷயங்களையும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தேவதை அடையாளம்
சிம்மம்:
நீங்கள் உங்கள் ஆக்கிரமிப்பை விட்டுவிட்டால், உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் குறைந்தபட்ச கவலைகள் இருக்கலாம். உங்கள் கட்டுப்பாட்டை இழப்பதன் மூலம் பல பாதிப்புகள் வர கூடும். உடற்பயிற்சி அல்லது தியானம் செய்து வருவது உங்கள் உடலுக்கு நல்லது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டு பெல்ட்
கன்னி:
அடுத்த கட்டத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை நகரும். இது ஆபத்தில்லாத மதிப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சூழலுக்கு உங்களைப் பழக்கப்படுத்த வேண்டியிருக்கும். வீடு அல்லது அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டால், அதை சிறப்பான முறையில் செய்யுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மைல்கல்
துலாம்:
நீங்கள் உங்களது பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எனவே, அவ்வப்போது ஓய்வு எடுத்து முன்னோக்கி திட்டமிட வேண்டிய நேரம் இது. பல யோசனைகள் உங்கள் மனதைக் கவரும். உங்கள் திட்டங்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வழக்கமான நாளாக இருக்க வாய்ப்புள்ளது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ட்யூன்
விருச்சிகம்:
உங்கள் பிள்ளைகள் இன்று நல்ல பெருமைகளை பெற்று கொள்ளலாம். அவர்களுக்கு உங்கள் நேரமும் கவனமும் தேவை. கடந்த காலத்தில் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட முதலீடு கைக்கு வரக்கூடும். நீங்கள் மிக விரைவில் ஒரு நண்பரின் சந்திப்பை பெறுவீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு ரிப்பன்
தனுசு:
உங்களிடமிருந்து நீண்ட காலத்திற்கு முன்பு கடன் வாங்கிய ஒருவர் இப்போது அதைத் திருப்பித் தரலாம் அல்லது குறைந்த பட்சம் தங்கள் மனதைச் சரிசெய்யலாம். நீங்கள் யாரையாவது நெருக்கமாகப் பின்தொடர்ந்திருக்கலாம், இப்போது வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. உங்களுக்கு சில நிபுணர் வழிகாட்டுதல் தேவைப்படலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தொப்பி
மகரம்:
இன்று நீங்கள் கடந்த காலத்தில் செய்த நல்ல உதவி உங்களுக்கு திரும்பி நன்மைகளை பெற்று தரும். உங்கள் சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள். இன்றைய நாள் மெதுவாக தொடங்கலாம் ஆனால் உங்கள் ஆற்றல் நாள் முழுவதும் சிறப்பான அளவில் இருக்கும். அதிக பாதிப்புகள் இன்று வராது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தள்ளுவண்டி
கும்பம்:
சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் நினைத்த வைத்திருந்த வாழ்க்கையை தற்போது நீங்கள் அடைவீர்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர் உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொண்டு வருவார். நீங்கள் நீண்ட கால முதலீடுகளைச் செய்திருந்தால், அவற்றை இப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு நட்சத்திரம்
மீனம்:
உள்ளிருந்து உங்களின் முன்னேற்றத்தை உணரும் நாள். உங்களுக்காக எல்லா சந்தர்பங்களும் ஒன்றாக வருவதை நீங்கள் கவனிக்கலாம். மற்றும் இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த காத்திருக்கிறது. உங்களுக்கான கால அளவை நீங்களே வரையறுத்து வைத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு வாசனை திரவிய பாட்டில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News