முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) தேவைப்பட்ட உதவிகள் வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) தேவைப்பட்ட உதவிகள் வந்து சேரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    மனக்கவலைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. செய்ய வேண்டிய வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. தேவைப்பட்ட உதவிகள் உங்களை வந்து சேரும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கிளி

    ரிஷபம்:

    உங்கள் எதிர்கால வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்கு இன்று ஏற்ற நாள். உள்ளுணர்வுகளை மதித்து செயல்படுவது நல்லது. உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ரோஜா செடி

    மிதுனம்:

    விடுமுறை எடுத்துக் கொண்டு பயணங்கள் செல்வதற்கு ஏற்ற நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உங்களுக்கு விருப்பமான ஒருவர் உங்களை சந்திக்கலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சூரிய உதயம்

    கடகம்:

    உங்களைப் பற்றிய மதிப்பு சிலருக்கு இன்று புரியாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் அதனை நினைத்து வருத்தப்படுவார்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சை குறைக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பால் பக்கெட்

    சிம்மம்:

    இன்றைய நாள் மிகவும் பிசியாக இருப்பீர்கள். வேலைபளு அதிகரிக்கும். ஒப்பந்த பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் திறமையை காண்பிக்க சரியான நேரம் ஆகும். முதலீடுகள் செய்வதில் அதிக கவனம் தேவை.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கூர்மையான பொருள்

    கன்னி:

    இன்றைய நாளில் கலவையான உணர்வுகளை தரும் நிகழ்சிகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம்.குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வைரம்

    துலாம்:

    போதிக்கும் பணியை செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் விரும்பிய செயல்களை செய்வீர்கள். கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய குறிக்கோளை அடைய வாய்ப்புகள் உண்டு.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - குதிரையின் படம்

    விருச்சிகம்:

    வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடம் சற்று குழப்பமான சூழ்நிலை நிலவ வாய்ப்புகள் உண்டு. உங்களது புத்திகூர்மையை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் உண்டு.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சுவரொட்டி

    தனுசு:

    இன்றைய நாள் முழுவதும் பலருடைய ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். சற்று எரிச்சல் அடைந்து காணப்படுவீர்கள். மாலையில் எங்கேயும் பயணங்கள் செய்வது நன்மை கொடுக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பிரகாசமான வெளிச்சம்

    மகரம்:

    பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கென தனி நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்த செயல்களை செய்ய முயற்சி செய்ய வேண்டும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மின்மினி பூச்சி

    கும்பம்:

    உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு ஏற்ற நாள். படம் பார்ப்பது, நண்பருடன் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம். உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கேன்வாஸ்

    மீனம்:

    உங்களுக்கு மிகவும் பிடித்த பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். ஷாப்பிங் செய்யும்போது கவனம் தேவை. கணவர் அல்லது மனைவிக்காக சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - நியான் செருப்பு

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News