முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 16, 2023) அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 16, 2023) அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்: 

    இறுதியாக நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கும், அவை பெரும்பாலும் பணம் சார்ந்தவையாக இருக்கலாம். உங்களைச் சுற்றி, சமீபத்தில் நடந்த ஆனால் ஒரு சில சீரற்ற நிகழ்வுகளால் நீங்கள் அதிகமாக அழுத்தத்தை உணரலாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் பிரச்சனையை எதிர்கொண்டால், அது உங்களையும் பாதிக்கலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிறிய பூந்தொட்டி

    ரிஷபம்: 

    ஒரு புதிய நபரால், கவனச்சிதறல் ஏற்படலாம். லேசான வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீங்கள் சரியான நேரத்தில் செய்ய முடியாது என்று நினைத்தால், அதிகமாக கமிட் செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரஃபிள்

    மிதுனம்: 

    நீங்கள் சமீபத்தில் நிறைவேற்றிய ஒரு சிக்கலான பணியின் காரணமாக நீங்கள் சோர்வாக உணரலாம். உங்கள் எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதற்கான அவசியத்தை நீங்கள் உணரலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி சரம்

    கடகம்:

    ஷாப்பிங் செல்ல வேண்டுமே என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தால், அதற்காக இன்று நேரம் செலவிடலாம். வேலையில் கடைபிடிக்க வேண்டிய சில டைம்லைன்கள் உள்ளன. வீட்டு உதவியாளர் வழக்கமான வேலைகளில் இடையூறுகளை உருவாக்கலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க ஸ்பூன்

    சிம்மம்: 

    நீங்கள் முன்பு தவறவிட்ட ஒரு நம்பிக்கைக்குரிய விருப்பம் மீண்டும் கிடைக்கலாம். எதையாவது மிகைப்படுத்தினால், எதிர்பார்த்த பலனைத் தராது. இந்த நாளில் சில தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைர மோதிரம்

    கன்னி: 

    ஒரு நிலையான ஆதரவு, சவாலான காலங்களில், உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையும். செல்வாக்கு மிக்க ஒருவருடன் ஏற்படும் தற்செயலான சந்திப்பு நல்ல பலனளிக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை

    துலாம்: 

    குடும்பமாக ஒன்று கூடுவது நீங்கள் ஓய்வெடுக்கவும், புதிய நினைவுகளை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும். உங்கள் மீது அபிமானம் வைத்துள்ளவர் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். ஒரு நீண்ட உரையாடல் நல்ல தொடக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மீன் வலை

    விருச்சிகம்: 

    நீங்கள் அதிகார நிலையில் இருப்பீர்கள். நீங்கள் எப்போது உறுதியான எண்ணத்தை முன்னிறுத்தினாலும், அது விரைவில் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - சேமிப்பு

    தனுசு: 

    உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பணியை நல்லபடியாக தள்ளிப்போடலாம். உங்கள் தந்தை உங்களுக்கு ஒரு வேலையை ஒப்படைத்திருந்தால், அதை முன்னுரிமை கொடுத்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். உங்கள் உடல் மற்றும் மனம் இணைந்து செயல்படுமாறு சீரமைக்கவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உப்பு நீர் ஏரி

    மகரம்: 

    உங்களுடைய அடுத்த பயணம் உங்கள் மனதில் நிறைய அமைதியைத் தரக்கூடும். சில பழைய நண்பர்கள் இந்த வாரம் உங்களை சந்திப்பதை எதிர்பார்க்கலாம். சிதறிய எண்ணங்களை சேகரிக்க முயற்சி செய்து வேண்டும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காகித தட்டு

    கும்பம்: 

    நீங்கள் அலுவலகத்தில் புதிய மற்றும் மூத்த நபரின் பாராட்டுகளைப் பெறலாம். உங்கள் உறவில் ஏதேனும் பிரச்சனைகளை உணர்ந்தால், அது சிறப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவரின் இழப்பு உங்களுக்கு ஆதாயமாக மாறலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளை ரோஜாக்கள்

    மீனம்: 

    வேலை தொடர்பான சில பிரச்சினைகளால் உங்கள் கவனம் திசை திரும்பாம். உங்களுடன் மிக நெருக்கமாக பணிபுரியும் ஒருவருக்கு நிதி ரீதியான அல்லது சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்த முக்கிய அத்தியாயம் விரைவில் தொடங்க உள்ளது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் துணி

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News