ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 09, 2023) ஒரு சுவாரஸ்ய வாய்ப்பு வர கூடும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 09, 2023) ஒரு சுவாரஸ்ய வாய்ப்பு வர கூடும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று நீங்கள் சர்ப்ரைஸ் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். புதிய பார்ட்னர்ஷிப் மற்றும் முதலீடுகள் இன்றைய நாளில் திட்டமிடலாம். பேச்சுவார்த்தை அல்லது வாக்குவாதங்களின் போது அமைதியாக இருங்கள். உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை பகுப்பாய்வு செய்வதில் நேரம் செலவிடுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெழுகு சிலை

ரிஷபம்:

கடந்த சில நாட்களாக நீங்கள் நிறைய உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எதிர் கொண்திருந்தால், இன்று நீங்கள் அந்த விஷயங்கள் சமநிலையை உணர துவங்குவீர்கள். கடந்த காலத்தில் இருந்து வந்த சில மரபுகள் இன்று உங்களுக்கு சில தடைகளை ஏற்படுத்தலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய மாடல்

மிதுனம்:

நீங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் உங்கள் நாளை முழுவதுமாக மாற்ற கூடும். இன்று நீங்கள் ஒரு முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்கான அழைப்பை பெறுவீர்கள். அங்கு உங்களுக்கு அறிமுகமாகும் புதிய நட்பு, உங்களோடு நீண்ட காலத்திற்கு வரலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி மோதிரம்

கடகம்:

புதிதாக இன்று நீங்கள் ஏதேனும் செய்ய தொடங்கும் முன் கொஞ்சம் பதட்டமாக உணரலாம், ஆனால் பாசிட்டிவ் எனர்ஜி உங்களுடன் இருக்கும். இன்று ஒரு குறிப்பிட்ட முடிவை எடுப்பதில் உங்களுக்கு கடும் குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்திலிருந்து தெளிவு பெற உங்களுக்கு அதிக நேரம் ஆக கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா செடி

சிம்மம்:

இன்று நீங்கள் பிரபலமடைய மற்றும் உங்கள் சொந்த முயற்சிகளின் மூலம் சில விஷயங்களை சாதிக்க ஏற்ற நாள். பெரிதாக கஷ்டப்படாமல் நீங்கள் அசாத்தியமாக இன்று பிறரை தாண்டி முன்னேறி செல்வீர்கள். பாராட்டுக்கள் மற்றும் வெகுமதிகள் இன்று உங்களை தேடி வரும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய உதயம்

கன்னி:

இன்றைய நாளின் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி வேகமாக செல்லும். வழக்கமான சில வேலைப்பளு மற்றும் அழுத்தத்திலிருந்து உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்க சிறிது நேரம் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். மாலை நேரம் வேடிக்கை மற்றும் விளையாட்டு என செல்லும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு உயரமான கட்டிடம்

துலாம்:

நீங்கள் பல ஆண்டு அனுபவங்களை பெற்று மெச்சூரிட்டியாக இருப்பவர் மற்றும் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யும் திறனை பெற்றிருப்பவர என்றால், உங்களிடமிருந்து சிறப்பான் விஷயங்களை சுற்றத்தார் எதிர்பார்ப்பார்கள். எனவே நன்கு நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். துன்பத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு உதவும் வாய்ப்பு ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழுப்பு கலர் வாலட்

விருச்சிகம்:

நீங்கள் கமிட்மென்ட் கொடுத்திருக்கும் நபருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் இன்று உங்களின் முழு கவனமும் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் இருவருக்குமான உறவில் நிரந்தர சிக்கல் ஏற்படும். நீங்கள் சொத்து சார்ந்த பரிவர்த்தனையில் ஈடுபட திட்டமிட்டிருந்தால் இன்று அவசரம் காட்டாதீர்கள். நல்ல நேரத்திற்காக காத்திருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எமரால்ட்

தனுசு:

இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கொண்ட ஒரு நாளாக இருக்கும். சிறிய வாய்ப்பாக இருந்தாலும் சிறப்பான பலன்களை தரும் என்பதால் தவற விடாதீர்கள். உங்களுக்கு வரும் கால்ஸ் அல்லது மெசேஜ்களுக்கு உரிய பதில் அளிக்க தவறாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்டன் எம்பிராய்டரி

மகரம்:

இன்று சிறப்பு கவனம் செலுத்தாமல் இயல்பாக நீங்கள் இருக்க கூடிய ஒரு நாளாக உங்களுக்கு அமையும்.  எதிர்காலத்திற்கு வேண்டியதை இன்று நீங்கள் திட்டமிட நேரம் கிடைக்கும். எதிர்பார்க்காத நண்பர் ஒருவர் முன்னறிவிப்பின்றி சர்ப்ரைஸாக உங்களை வந்து சந்திக்கலாம். வாழ்க்கை துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

கும்பம்:

இன்று நீங்கள் எதை பற்றியாவது தீவிரமாக சிந்தித்து கொண்டே கனவில் மூழ்கி போவீர்கள் மற்றும் குறிப்பிட்ட நபரை மிஸ் செய்வதை போல உணர்வீர்கள். ஆனால் இன்று நீங்கள் இந்த சிந்தனையிலிருந்து விடுபட்டு எதிர்காலத்திற்காக திட்டமிட வேண்டும். உங்கள் வாழ்க்கையை புதிய ரூட்டில் அழைத்து செல்லும் ஒரு சுவாரஸ்ய வாய்ப்பு உங்களுக்கு வர கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் பை

மீனம்:

உள்ளுக்குள் நீங்கள் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தினால், உங்களை யாரேனும் காயப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் உங்களுக்கு உள்ளது. ஆனால் நீங்கள் வெளிப்படுத்தா விட்டால் அது கவலையை அதிகரிக்க கூடும். எனவே உங்களது நெருங்கிய நண்பரிடம் இன்று மனம் விட்டு பேசுங்கள். நாள் இயல்பாக செல்லும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

First published:

Tags: Oracle Speaks, Tamil News