Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று யோகம்தான்...

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று யோகம்தான்...

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்று நீங்கள் மிகுந்த பிஸியாக இருக்கக் கூடும். ஆகவே பொறுப்புணர்வோடு செயல்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் விசுவாசமாக இருப்பதால் தலைமைத்துவத்தை நீங்கள் கொண்டாடலாம்.

ஏப்ரல் 26ம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிகாரத்தை கைப்பற்றவும், பணம் ஈட்டவும் நீங்கள் திட்டமிட்ட இலக்கு இன்று நிறைவேறக் கூடும். ஆனால், அதற்கு கடின உழைப்பு தேவைப்படும். நீங்கள் புதிய இடத்தில் பணி செய்ய விரும்புகிறீர்கள் அல்லது புதிய பணியை தேர்வு செய்கிறீர்கள் அல்லது புதிதாக ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லது வணிகத்தில் புதிய முதலீடு செய்கிறீர்கள் அல்லது புதிய வீடு வாங்குகிறீர்கள் என்றால் கோபத்தை கட்டாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். குடும்பம் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவை பயன்படுத்திக் கொள்ளவும். பண வரவு சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகள் மத்தியில் நீங்கள் இன்றைக்கு மிகுந்த அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கடின உழைப்பும், உங்கள் நேர்மையும் தான் வெற்றிக்கு காரணமாக இருக்கும். உங்கள் வெகுளித்தனத்தை பிறர் தவறாக பயன்படுத்திக் கொள்ள கூடும் என்பதால் புத்திக்கூர்மையுடன் செயல்படவும். உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது நெருங்கிய உறவினர்களால் உங்கள் மனது புண்படக் கூடும். ஆனால், அது தற்காலிகமானது.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சிந்தனைத் திறன் மூலமாக பல பிரச்சனைகளுக்கு எளிமையாக தீர்வு காண முடியும். உங்களுக்கு என்று தனி பெர்சானிலிட்டியை நீங்கள் கடைபிடிப்பீர்கள். உங்கள் சிந்தனைகள் மற்றும் கவர்ச்சிகரமான பேச்சு ஆகியவை பணியிடத்தில் உங்கள் பாஸ் அல்லது மேலதிகாரியை ஈர்க்கக் கூடும். உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப உறவுகளிடம் எச்சரிக்கையுடன் பேசுங்கள். முதலீடு செய்ய சரியான தருணம் வந்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு இன்று பணவரவு ஏராளமாக இருக்கும். ஆனால், உங்கள் உடல் நலன் அல்லது குடும்பத்தினரின் உடல் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். இன்றைக்கு அசைவம் மற்றும் மது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சூழ்நிலை சாதகமாக இருப்பதால் அரசு வேலைக்கு திட்டமிடும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். உங்கள் திறமைக்காக இன்று நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம் கை கூடி வருவதால், அதன் மூலமாக வாழ்வில் எதிர்கொண்ட தடைகள் நீங்கும். உங்கள் பார்ட்னரிடம் காதலை வெளிப்படுத்துவதற்கு சரியான நாள் இதுவாகும். பங்குகளை வாங்குவதற்கு, இடம் வாங்குவதற்கு, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு, சொத்துகளை விற்பதற்கு, அலுவலக ஆவணங்களை கையெழுத்திடுவதற்கு சரியான நாள் ஆகும். உங்கள் பேச்சு என்பது உங்கள் மீதான நல்லெண்ணத்தை கெடுப்பதற்கு காரணமாக அமையும் என்பதால் எச்சரிக்கையுடன் பேசவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வேலை அல்லது தொழில் சார்ந்து மாபெரும் வாய்ப்புகள் கிடைப்பதற்கான நல்ல நாள் இதுவாகும். குழுவாக இணைந்து செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். நேரம் சரியாக இருப்பதால் உங்கள் கனவுகளை இன்றே நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பத்தினரின் மரியாதை மற்றும் ஆதரவு காரணமாக நல்ல விஷயங்கள் நடக்கும். இல்லத்தரசிகள், டிசைனர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு சிறப்பான பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு தயிர் சாதம் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் எந்தவொரு விறுவிறுப்பும் இல்லாமல் காணப்படும் என்றாலும் மதியத்திற்குப் பிறகு ஏதேனும் சில நல்ல விஷயம் நடக்கக் கூடும். உறவுகளை தக்க வைத்துக் கொள்ளவும், பணம் ஈட்டவும் சரியான நேரம் கைகூடி வருகிறது. ஆரோக்கியமற்ற உணவு குறித்து கவனமாக இருங்கள். இரவு நேர பார்டிகளை தவிர்க்கவும். வணிகத்தில் குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் ஆதரவு மிகவும் உதவிகரமாக இருக்கும். எதிர் பாலினத்தவர் மற்றும் மூத்தவர்களின் உதவி நல்ல பலனை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - வெண்கலம் மற்றும் காப்பர் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் மிகுந்த பிஸியாக இருக்கக் கூடும். ஆகவே பொறுப்புணர்வோடு செயல்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் விசுவாசமாக இருப்பதால் தலைமைத்துவத்தை நீங்கள் கொண்டாடலாம். ஆரோக்கியமான வாழ்வியல் குறித்து கவனமாக இருங்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்யுங்கள். அமைதியாக பேசவும். பசுமை கார்டனில் பொழுது போக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு போர்வை தானம் செய்யுங்கள்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிகர்கள், பயிற்சியாளர்கள், நகை விற்பனையாளர்கள், ஆலோசகர்கள், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல் கட்சியினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் மற்றும் பரிசு காத்திருக்கிறது. இன்றைய நாள் முழுவதும் பலன் கிடைக்கும். புகழ் வாய்ப்பு, பொழுதுபோக்கு மற்றும் புத்துணர்ச்சி ஆகிய அனைத்தும் உண்டு. நிதி சார்ந்த லாபங்கள் கிடைக்கும் மற்றும் சொத்து சார்ந்த பத்திரப்பதிவுகள் இன்று நடக்கும். உறவுகள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற கர்ச்சீப் தானம் செய்யவும்.

ஏப்ரல் 26 அன்று பிறந்த பிரபலங்கள்: மௌஷ்மி சாட்டர்ஜி, மரியம் த்ரீசியா சிராமெல், சர்வேஷ் குமார், சங்கர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி