Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11-09-2022) ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கவும்.

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11-09-2022) ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கவும்.

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் மிகுந்த குழப்பத்துடன் தொடங்கும். ஆனால், பிறகு தெளிவு கிடைக்கும். ஒப்பந்தங்களை பெறுவது, உத்திகளை வகுப்பது, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் தாமதம் ஆகும். அதே சமயம், இன்று அறிவுப்பூர்வமான விஷயங்களை திரட்டுவீர்கள். உங்கள் அறிவை பயன்படுத்தி புதிய முதலீடு செய்வீர்கள். சூரிய பகவானை வழிபடவும்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம் மற்றும் வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - மஞ்சள் நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் உத்தேசித்துள்ள திட்டங்களுக்கு சாதகமானதாக உங்கள் வாழ்க்கை மாறுகிறது. இன்றைய நாளை இசையுடன் தொடங்கி, மாலையில் பார்ட்னருடன் சென்று ஷாப்பிங் செய்யலாம். ஒப்பந்தங்களை செய்து கொள்ள மிக சிறப்பான நாளாகும். பணியிடத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்கு ராஜீய பேச்சுவார்த்தை முக்கியம். அன்புக்குரியவர்களுடன் குதூகலமான நேரத்தை செலவிடுவீர்கள். சிவனை வழிபடவும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உடமைகள் மீது கவனமாக இருங்கள். சொத்து தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும். வாய்மொழியாக அல்லது எழுத்துப்பூர்வமாக திறன்களை இன்றைக்கு வளர்த்துக் கொள்வீர்கள். கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டு, மனம் விட்டு பேசுவது நல்லது. மற்றவர்களுடன் கலந்து பழகவும், நண்பர்களை ஈர்க்கவும் சிறப்பான நாளாகும். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான மதிப்பெண்கள் கிடைக்க இருக்கின்றன.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்ய வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிறைய கடின உழைப்பு மற்றும் தியாகங்களை செய்துள்ள உங்களுக்கு பணம் ஈட்டும் நாளாக இது அமையும். வணிகத் திட்டங்கள் சார்ந்த உத்திகளை இன்று செயல்படுத்துவீர்கள். மார்க்கெட்டிங் செய்வதில் நிறைய நேரம் செலவிடுவீர்கள். இயந்திரங்களை கையாளுகையில் மிகுந்த கவனம் தேவை. காவி நிற இனிப்புகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. பசுமையான சூழலில் நேரம் செலவிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - வீட்டு பணியாளருக்கு துடைப்பம் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும். சக பணியாளர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் பேச்சு பிறரை காயப்படுத்தக் கூடும் என்பதால் நிதானத்துடன் பேசவும். நீங்கள் எடுத்த முடிவுகளை உங்கள் அதிரடியான குணத்தால் மீறிச் செல்லாதீர்கள். அது மிகவும் ஆபத்தானது. சொத்து ரீதியான முடிவுகள் இன்றைக்கு சரியானதாக அமையும். பயணக் காதலர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் துடிப்பு மற்றும் ஆற்றல் எல்லையில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, அவற்றை சரியான திசையில் பயன்படுத்திக் கொள்ளவும். பழைய பொறுப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யும் நாளாகும். வாகனங்கள், வீடு, இயந்திரம், நகை போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிறப்பான நாளாகும். மாலையில் நடைபெறும் காதல் சந்திப்பு என்பது மிகுந்த மகிழ்ச்சியை தரும். பங்குச் சந்தை முதலீடு பலனை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் இனிப்புகள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய பழைய தொடர்புகள் மற்றும் புத்திகூர்மையை பயன்படுத்திக் கொள்ளும் நேரம் இது. தோராயமாக எடுக்கப்படும் முடிவுகள், வணிகத்தில் உங்களுடைய பொறுப்புகளை குறைப்பதாக அமையும். வழக்கறிஞர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருக்கின்றன. வாடிக்கையாளர்களுடன் சமரசம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு இனிப்பு வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பொறுப்புகளை முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. ஆகவே, வெற்றி வெகு தொலைவில் இல்லை. அரசாங்க ரீதியில் உள்ள தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். சட்ட ரீதியான வழக்குகளுக்கு பண செட்டில்மண்ட் மூலமாக தீர்வு கிடைக்கும். உங்கள் எளிமையான நடவடிக்கையை பார்த்து உங்கள் பார்ட்னர் ஆச்சரியம் அடைவார். பண பரிவர்த்தனைகளை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெயர், புகழ் சம்பாதிப்பதில் எந்த தடையும் இருக்காது. ஆழ்மனது சொல்வதைக் கேட்டு நடக்கவும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண பரஸ்பர நம்பிக்கை அவசியம். காதலில் உள்ள நபர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அரசியல், மீடியா, மருந்து விற்பனை, டிசைன் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பெரும் வளர்ச்சி காத்திருக்கிறது. காதலர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு பேசி தீர்வு காணலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் சிவப்பு துணி கொடுக்கவும்.

செப்டம்பர் 11 அன்று பிறந்த பிரபலங்கள் :

மோகன் பகவத், வினோபா பாவே, முரளி கார்த்திக், லாலா அமர்நாத்
Published by:Ramprasath H
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி