முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 07, 2023) ஆசிரமத்திற்கு அரிசி தானமளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 07, 2023) ஆசிரமத்திற்கு அரிசி தானமளிக்க வேண்டும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 7ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 1: (1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்களுக்கான என் கணித பலன்கள்)

வீட்டின் சமையல் அறையின் கிழக்கு பக்கம் சூரிய பகவானின் படத்தை மாட்டி வைப்பது நன்மை கொடுக்கும். நேர்காணல்கள் செல்வதற்கும், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்ற நாள். மற்றவர்களுக்கு உதவி செய்ய அதிக ஆர்வம் கொள்வீர்கள் ஆனால் முடிந்த அளவு அரசாங்கம் சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையொப்பம் இடுவதை தவிர்ப்பது நல்லது. சட்டரீதியான விஷயங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை விட விலகி இருப்பதே சிறந்தது. தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம்–கோவிலுக்கு குங்குமம் தானமளிக்க வேண்டும்

எண் 2: (2, 11, 20, 29 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

இன்றைய தினத்தில் உங்களது உறவுகளில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். முக்கியமாக காதல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகம் கவனம் தேவை. உங்களது நல்ல குணத்தை பயன்படுத்தி சிலர் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். முடிந்த அளவு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்து வளர்ச்சி பாதையில் கவனத்தை செலுத்துவது நல்லது. உங்களது எதிர்கால திட்டங்களை பற்றி மற்றவருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் கோப்புகளில் கையொப்பம் இடும் போது அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட தினம் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் – ஆசிரமத்திற்கு அரிசி தானமளிக்க வேண்டும்.

எண் 3: (3, 12, 22, 30 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

இன்றைய தினத்தில் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி செயல்படுவது மிகவும் நல்லது. தியானம் மற்றும் ஆன்மீகத்தின் மூலம் உங்களது ஆறாம் அறிவை செயல்படுத்துவதன் மூலம் அதிக நன்மைகளை பெற முடியும். உங்கள் வாழ்வின் வளர்ச்சி பாதைக்கு இது உதவும். புதிய உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் இருக்கும். இசைக் கலைஞர்கள்,, ஆடை வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி வாசிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்களுக்கு தங்களது வேலை சம்பந்தமாக புதிய வளர்ச்சிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்ட தினம் – வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - மஞ்சள் நிற பூக்களை குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும்.

எண் 4: (4, 13, 22, 31 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

இன்றைய தினத்தை ராகு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே துவங்குவது நல்லது. உடல் நலம் மற்றும் மன நிலையில் அதிக அக்கறை தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் உண்டாக்கலாம். உங்களுக்கு வர வேண்டிய பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். பச்சை காய்கறிகளை உட்கொள்வதும் சிட்ரஸ் பழ வகைகளை உட்கொள்வதும் உடல் நலம் மற்றும் மன நலனில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் கட்டுமானத் தொழில், இயந்திர தொழில், மென்பொருள் மற்றும் தரகு தொழிலில் இருப்பவர்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதை இன்று தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை பார்த்து அதிக பெருமை கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சை பழத்தை தானம் அளிக்க வேண்டும்

எண் 5: (5, 14, 23 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

அலுவலகத்தில் ஆந்தையின் படத்தை வைத்திருப்பது அதிக நன்மைகளை கொடுக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளி உங்களின் வார்த்தைகளினால் அதிகம் கவரப்படுவார்கள். ஆனாலும் வேலைகளில் முன்னேற்றத்தில் சில தடங்கல்கள் இருக்கும். மற்றவர்களின் குறைகளில் கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு உங்களது வளர்ச்சி பாதையில் கவனத்தை செலுத்துவது நல்லது. சொத்துக்கள் வாங்குவதற்கும், பங்குச்சந்தை முதலீடு செய்வதற்கும் இன்று மிகவும் ஏற்ற நாள். விளையாட்டு வீரர்கள் பயணம் செய்பவர்களுக்கு இன்று நாள் மிகவும் நன்றாக இருக்கும். பச்சை நிற உடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். உங்கள் அன்பிற்குரிய ஒருவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்தி பரிசு பொருட்களை அளிப்பதற்கு இன்று மிகவும் ஏற்ற நாள். அழகுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்ட தினம் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - வெள்ளை மாவை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

எண் 6: (6,15,25 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

தோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரத்திற்கு பதிலாக சில்வர் உலோகத்தினால் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்துவது நல்லது. உங்களது உடல் நலனில் அதிக அக்கறை தேவை. இன்று உங்களது காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அதே சமயத்தில் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வது நன்மை அளிக்கும். தொழில் மற்றும் வேலை சம்பந்தமாக அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம் இருக்கும். அதே சமயத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் கவனம் தேவை. முடிந்த அளவு தேவையற்ற வாக்குவாதங்களில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. அதிக பொறுப்புகளை வலிந்து சென்று நீங்களே ஏற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் தங்களது பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் அதிக நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் – தோழிக்கோ அல்லது முதிய பெண்மணிகளுக்கோ வளையல்களை தானம் அளிக்க வேண்டும்.

எண் 7: (7, 16, 24 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

வீட்டு வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும். வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு இன்றைய தினம் மிகவும் நன்றாக இருக்கும். தலைமை பண்பு அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களது அறிவாற்றலை பயன்படுத்தி முடிவுகளை எடுப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். தேவையற்ற சலுகைகளை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உங்களது துணையிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் கவனம் தேவை. ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து கையொப்பம் இடுவது மிகவும் நல்லது. நீதிமன்றங்களில் பணிபுரிவோர், திரையரங்கில் பணிபுரிவோர், தொழில்நுட்பம், அரசாங்க ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், கட்டுமான தொழில் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்து இருக்கும். முடிந்த அளவு மற்றவர்களுடன் கைகோர்த்து செயல்படுவதை இன்று தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை

அதிர்ஷ்ட தினம் - திங்கள்

அதிர்ஷ்ட எண் 7

தானம் - ஏழைகளுக்கு நாணயத்தை தானம் அளிக்க வேண்டும்.

எண் 8: (8, 17, 25 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

இன்றைய தினம் சனி பகவானின் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். செய்யும் செயல்களில் நேர்மையாக இருப்பது சனி பகவானின் ஆசியை பெற்றுத்தரும். இன்றைய தினம் முழுவதுமே சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிக பிசியாக இருப்பீர்கள். உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டிய வேலைகளில் மிக எளிதாக செய்து விடுவீர்கள். ஆனால் நீண்ட கால செயல் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல் நலலில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. தற்போது ஏற்பட்டுள்ள வேலை பளுவால் எதிர்காலத்தில் சில பிரச்சனைகள் உண்டாகலாம். அரசாங்க ஒப்பந்தங்கள், தொழில் சம்பந்தப்பட்ட சந்திப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றை கண்டிப்பாக இன்று செய்து முடித்தே ஆக வேண்டும். முடிந்த அளவு குடும்பத்தோடு நேரம் செலவிடுவது மிகவும் நல்லது. நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தியானம் செய்வதன் மூலம் அதிக நன்மைகளை இன்று பெற முடியும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் பழுப்பு

அதிர்ஷ்ட தினம் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் – ஏழைகளுக்கு அல்லது கோவில்களுக்கும் எள் தானம் அளிக்க வேண்டும்.

எண் 9: (9, 18, 27 தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்)

சிவப்பு தானியங்களை சிறிய பையில் போட்டு வைத்து இன்றைய தினம் முழுவதும் உங்களுடன் வைத்திருப்பது அதிக நன்மைகளை தரும். இதனால் உங்களது சக்தி மற்றும் உங்கள் மீது உள்ள மற்றவரின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது வேலையை பொறுத்தவரை புகழ் என்பது உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே முடிந்தவரை பொதுவெளியில் இருப்பதன் மூலம் உங்களது புகழை அதிகரிக்க செய்ய முடியும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் அரசியல்வாதிகள், மருத்துவத் துறையில் இருப்பவர்கள், கட்டுமானத்துறை, விளையாட்டு வீரர்கள், அழகுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வளர்ச்சி பாதை உண்டாகும். குடும்பத்தில் உள்ள தொடர்புகளை சரியாக பயன்படுத்தி உங்களது தொழிலை விருத்தி செய்வதற்கு இன்று மிகவும் ஏற்ற நாள். குடும்பத்தினரிடமிருந்தும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு இன்று கிடைக்கும்.. இன்றைய தினத்தின் ஆரம்பத்திலிருந்து சிவப்பு நிற உடைகளை அணிவது அதிக அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட தினம் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6

தானம் - ஆசிரமத்திற்கு கோதுமையை தானம் அளிக்க வேண்டும்

மார்ச் ஏழாம் தேதி பிறந்த நட்சத்திரங்கள்: அனுபம் கேர், ராதிகா பண்டிட், அர்நாப் கோஸ்வாமி, சாதனா சர்கம், அசஃப் ஜாஹ், குலாம் நபி ஆசாத்.

First published:

Tags: Numerology, Tamil News