வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். இன்று ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், இன்று முதலீடுகளில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
நீங்கள் இன்று நீண்ட கால முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பப்படலாம். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். கூட்டு வணிகம் மற்றும் பார்ட்னர்சிப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினசரி வருமானம் அதிகரிக்கக் கூடும்.
மிதுனம்:
இன்று வியாபாரம் மிகவும் லாபகரமாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிப்பது இன்று மன உளைச்சலை ஏற்படுத்தலாம். அதே போல, வாகனங்களுக்கும் பணம் செலவழிக்க வேண்டும். தந்தை வழியில் வரும் செல்வம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
கடகம்:
பங்குதாரர்கள் வியாபாரத்தில், நிதி ரீதியான நிலைத்தன்மை பாதிக்கப்படும். இன்று உங்கள் பணத்தை தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். ரியல் எஸ்டேட் சம்மந்தப்பட்ட அல்லது உங்களுக்குச் சொந்தமான வேறு சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும்.
சிம்மம்:
இன்று உங்கள் நிதியை நீண்ட கால முதலீடுகளில் முதலீடு செய்யலாம். மளிகைக் கடை வைத்திருப்பவர்கள் லாபம் பெறுவார்கள். இருப்பினும் அதிகரிக்கும் பிற வீட்டு செலவுகள் கொஞ்சம் இக்கட்டான சூழலை ஏற்படுத்தும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேலும், பழைய கடன்களை நீங்கள் அடைக்க வாய்ப்பு உருவாகும்.
கன்னி:
நிலம் மற்றும் சொத்து தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு பெரிய லாபத்தை ஈட்ட உதவும். உங்களுடைய இளைய சகோதரருக்கு பணம் செலவழிக்க சூழல் ஏற்படும். சொத்து பிரச்சனைகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிதி நிலைமை நன்றாக இருப்பதால், பயணம் செய்ய திட்டமிடலாம்.
துலாம்:
இன்று உங்கள் பிசினஸ் பார்ட்னர்களுக்கு அவர்களுக்கான தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும். ரியல் எஸ்டேட் தொடர்பானவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தினசரி வருமானம் திருப்தியாக இருக்கும். நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் இன்று உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
விருச்சிகம்:
தொழில், வியாபாரம் சார்ந்த நிதியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். இன்று நண்பருக்கு பண உதவி செய்ய வேண்டிய நிலை வரலாம். குடும்பத்தினரின் உடல்நலம் மற்றும் குழந்தைகளின் கல்விக்காகவும் நீங்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.
தனுசு:
தனியார் தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. குடும்பத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் காதலிப்பவர்களுக்கு நிறைய செலவிடுவீர்கள். நிலம் வாங்குவது சாதகமாக இருக்கும். நண்பரிடம் இருந்து பண உதவி கிடைக்கும்.
மகரம்:
நீங்கள் நல்ல மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்து வாங்க விருப்பம் காட்டலாம். பெற்றோரிடம் இருந்து பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கும். இன்று வியாபாரத்தில் சிறிய நஷ்டம் ஏற்படலாம். தினசரி வருமானம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
நிலம் சம்மந்தப்பட்ட வேலைகள் லாபகரமாக இருக்கும். அதே சமயம் நிலம் தொடர்பான ஆவணங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். தினசரி வருமானம் அதிகரிக்கும். அம்மாவிடம் இருந்து நிதி உதவி பெறலாம்.
மீனம்:
கடன் வாங்குவதற்கு இன்று சாதகமான சூழல் இல்லை. இன்று முதலீடுகளில் உங்கள் நிதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பங்குச்சந்தை தொடர்பான நடவடிக்கைகள் நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.