மேஷம்:
பணம் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளும் போது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். நீண்ட காலம் நிலுவையில் உள்ள பணம் கையில் கிடைக்கும். உடல் நலத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். திருமண உறவு சுமுகமாக இருக்கும்.
ராசியான எண்: 2
ராசியான நிறம்: காவி
பரிகாரம்: சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
ரிஷபம்:
பணம் சம்பாதிக்க கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி வரும். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த தடைகள் நீங்கும். கல்வித் துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு துணையின் அன்பும் ஆதரவு கிடைக்கும்.
ராசியான எண் : 1
ராசியான நிறம் - இளஞ்சிவப்பு
பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்
மிதுனம்:
குடும்பம் சம்பந்தப்பட்ட வேலைகள் நிறைய இருக்கும். யாராக இருந்தாலும், உரையாடலில் ஈகோ வெளிப்படுவதைத் தவிர்க்கவும். ஆன்மீக ரீதியான வேளைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது உங்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மை அளிக்கலாம்.
ராசியான எண்: 1
ராசியான நிறம்: ஆக்கர்
பரிகாரம் - சிவபெருமானுக்கு நீர் வழங்குங்கள்
கடகம்:
தடைபட்ட வேலைகள் நிறைவேறும். பணம் சம்பாதிக்க, கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். நீண்ட தூர பயணங்களை தற்சயம் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும்.
ராசியான எண்: 5
ராசியான நிறம்: ஆரஞ்சு
பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு ஆரத்தி செய்து பூஜிக்கவும்
சிம்மம்:
திடீர் செலவுகள் காணப்படும், இதனால் நிதி நிலை பாதிக்கலாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: சிவப்பு
பரிகாரம் - அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்
கன்னி:
நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கிவிடும். முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். சொத்து தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். இல்லையெனில் நீங்கள் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் கிடைக்கும்.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: பாதாமி (பாதாம் நிறம்)
பரிகாரம் - பசுவிற்கு சப்பாத்தி அல்லது பிரெட் கொடுக்கவும்
துலாம்:
சுபச் செலவுகள் அதிகரிக்கும், இதனால் கடன் வாங்க வேண்டி வரும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். நிறைவேறாமல் இருக்கும் வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தில் உங்கள் உயரதிகாரிகளால் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். காதல் உறவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ராசியான எண்: 4
ராசியான நிறம்: வெள்ளை
பரிகாரம் - ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள்
விருச்சிகம்:
பண ஆதாயம் பெறும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அதில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் கோபமாக நடந்து கொண்டால், நஷ்டம் உங்களுக்குத்தான். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரும்.
ராசியான எண்: 10
ராசியான நிறம்: வெளிர் சிவப்பு
பரிகாரம் - சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
தனுசு:
அலுவலகத்தில் முன்னேறி செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது, தவற விடாதீர்கள். மத ரீதியான, ஆன்மீக ரீதியான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். காதலர் தொடர்பாக மனக்குழப்பம் ஏற்படலாம்.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: ஆரஞ்சு
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்
மகரம்:
அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், பணம் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் இடமாற்றம் விரும்பினால், அது சாதகமாக அமையும். உறவினர்களுடன் உறவு வலுப்படும்.
ராசியான எண்: 7
ராசியான நிறம்: காவி
பரிகாரம் - சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
கும்பம்
கல்வி சம்மந்தப்பட்ட வேலைகள் இழுத்தடிக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். யாரிடம் பேசினாலும், பேச்சில் கண்ணியமாக இருப்பது அவசியம். அவசரமாக முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ராசியான எண்: 1,
ராசியான நிறம்: சிந்தூரி (குங்குமச் சிவப்பு)
பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு ஆரத்தி எடுக்கவும்
மீனம்:
அலுவலகத்தில் முழு ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள். இதனால், பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செல்வதைத் தவிர்க்கவும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதானாலும், தாமதம் செய்யாதீர்கள். தாமதிப்பதால் லாபமும் வாய்ப்பும் கை நழுவிப் போகும்.
ராசியான எண்: 10
ராசியான நிறம்: மெரூன்
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan