Home /News /spiritual /

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 29, 2022) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 29, 2022) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 29) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

உடல் நலக்குறைபாடு காரணமாக வேலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூத்தவர்கள் சொல்லும் அட்வைஸைக் காதில் வாங்க பிடிக்காது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை புளூ
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.

ரிஷபம்:

அலுவலகத்தில் கஷ்டப்பட்டு உழைப்பதற்கான பலன் உடனே தெரியாவிட்டாலும், அதற்கான பலன் எதிர்காலத்தில் புரோமோஷனாகவும், ஊதிய உயர்வாகவும் வர வாய்ப்புள்ளது. நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக வாய்ப்புள்ளது. உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் பெரிதாக்கப்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

மிதுனம்:

வேலையில் கிடைக்கும் வெற்றி மன உறுதியை மேலும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களை பணியமர்த்தவோ அல்லது டீமில் சேர்த்துக்கொள்ளவோ போட்டா போட்டி உருவாகலாம். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: பாதாமி
பரிகாரம்: சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும்.

கடகம்:

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் தற்போது கைக்கு வரும். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவதையும், ஒரே நேரத்த்தில் இரண்டு வேலையை செய்வதையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஏதோ பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதிர்ஷ்ட நிறம்: டர்க்கைஸ்-நீலம்,
அதிர்ஷ்ட எண்:2
பரிகாரம்: வீட்டை விட்டு கிளம்பும் முன்பு பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

சிம்மம்:

அன்புக்குரியவர்களின் நியாபகம் மனதை வாட்டி வதைக்கக்கூடும். உடல் பிரச்சனைகள் அதிகரிக்கும். பாதியில் நின்று போன விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். பண இழப்பு அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம்: ஓ நம சிவாய என 108 முறை ஜபிக்கவும்.

கன்னி:

ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் அதிகமாகி, நிதி நிலையை மோசமாக்கலாம். எதிர்பாராத வகையில் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் முதலீட்டிற்கு முன்னதாக தீவிரமாக யோசிப்பது நல்லது. குடும்பத்தினர் ஆதரவுடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்‌ஷ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

துலாம்:

‘மாற்றம் ஒன்றே மாறாது’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு, மாற்றம் பற்றிய கவலைகளை புறந்தள்ளுங்கள். சகோதர்களில் செய்யும் காரியத்தால் டென்ஷன் உருவாகலாம். பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் திரும்ப கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்.

விருச்சிகம்:

லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால், இன்று தொழில் ரீதியாக சிறப்பான நாள். எதிர்பார்த்து காத்திருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் பேசும் போது வார்த்தையை கவனமாக கையாளவும்.

அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
பரிகாரம்: பைரவர் கோவிலில் இனிப்புகளை தானமாக கொடுங்கள்.

தனுசு:

நீண்ட நாட்களாக இடம் மாறத் திட்டமிடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பலம் அதிகரிக்கும். பண விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
பரிகாரம்: துர்க்கை கோவிலில் மந்திரங்களை பாராயணம் செய்யவும்.

மகரம்:

பண வரவை தரக்கூடிய புதிய யோசனைகள் இன்று உதயமாகலாம். அலுவலக வேலையில் சீனியர்களின் உதவியை பெற முயற்சிக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு தர்ப்பை புல் கொண்டு அர்ச்சனை செய்து, விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

கும்பம்:

இன்று அர்ப்பணிப்புடன் செய்யும் வேலைக்கான பலன் உடனே கிடைக்கக்கூடும் என்பதை நினைவில் வைத்து வேலை செய்யுங்கள். முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். திருமணத்திற்கு வரன் பார்ப்பது போன்ற வேலைகள் தொடங்கப்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் படைத்து பூஜிக்கவும்.

மீனம்:

இன்று ஒரு ரோடு ட்ரிப் சென்று வருவது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதனால் வேலையில் கவனம் கூடும் என்பதால், பொருளாதார ரீதியாக முன்னேறவும் வாய்ப்புள்ளது. நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட திட்டமிடுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
பரிகாரம்: கடுகு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை கருப்பு நாய்க்கு உணவாக கொடுக்கவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Rasi Palan

அடுத்த செய்தி