Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: மீன ராசியினருக்கு நீண்ட நால் கண்ட கனவு இன்று நிறைவேறும்... ( மே 11, 2022)

தெய்வீக வாக்கு: மீன ராசியினருக்கு நீண்ட நால் கண்ட கனவு இன்று நிறைவேறும்... ( மே 11, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன்...

மேஷம்

நடைமுறை சார்ந்த முடிவுகள் எடுப்பது இப்போதைக்கு உதவியாக இருக்கும். பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நண்பர் ஒருவர் முக்கியப் பங்கு வகிக்கலாம். முக்கியமானது இல்லை என்றால், எந்த விஷயத்தையும் தள்ளிப் போடலாம், இதனால் நேரம் மிச்சமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிளி

ரிஷபம்

நீங்கள் எல்லா பிரச்சனைகளையும் உணர்வு பூர்வமாக பார்க்காமல் இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு. பழைய பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கான புதிய தீர்வுகளை நீங்கள் கண்டறியலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய சைன்போர்டு

மிதுனம்

எதேனும் ஒரு பிரச்சனையில் நீங்கள் சிக்கியிருந்தால், அதற்கான தீர்வு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஒரு புதிய நபர் உங்களுக்கு ஒரு நல்ல யோசனையை பகிர்வார். மற்ற திட்டங்களை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நீங்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தந்தம்

கடகம்

சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்கள் அதிகம் கவனம் கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். அதையெல்லாம் தள்ளிவைத்து விட்டு எது முக்கியமோ அதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். உங்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த நல்ல செய்தி ஒன்று வந்து கொண்டிருக்கிறது. உங்கள் உடன்பிறப்புக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒளிரும் அடையாளம்

சிம்மம்

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பார். நீங்கள் அதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். திருட்டு போக வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விரைவில் கிடைக்கக்கூடிய வாய்ப்பை சரியான முயற்சி செய்யாததால் நீங்கள் தவறவிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிரிசம்

கன்னி

இன்று நீங்கள் ரிலாக்ஸாக ஓய்வெடுக்க வேண்டிய நாள். அதனால் இன்று உங்களுக்கு நாள் மெதுவாக செல்வது போல தோன்றும். ஒரு தொலைபேசி உரையாடல் உங்களுக்கு புதிய தொடக்கம் மற்றும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆப்பிள்

துலாம்

உங்கள் இலக்கு நீண்ட காலத்துக்கானதாக இருந்தாலும் கூட அதை நீங்கள் முயற்சி செய்யாமல் தவிர்க்க கூடாது. பாதிப்பு அடைந்த உறவை நீங்களும் சரி செய்யும் முயற்சியில் அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் புரிந்து கொள்ளும் காலகட்டம் இது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீலக் கல்

விருச்சிகம்

புதிய விஷயங்களை நீங்கள் முயற்சி செய்வது பார்ப்பதற்கு உங்களுடைய குறுகிய சிந்தனை தடையாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் சிந்தனையை விசாலமாக்க வேண்டும். அது மட்டுமின்றி ஆன்மிக ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கிளாசிக் நாவல்

தனுசு

புதிதாக உங்கள் சக்திக்கும் எல்லைக்கும் மீறிய ஏதேனும் ஒன்றை நீங்கள் செயல்படுத்த விரும்புவீர்கள். உங்களுக்கு பழைய நண்பரின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடு உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கேன்வாஸ் பெயின்ட்டிங்

மகரம்

முன்பை விட இப்பொழுது முடிவெடுப்பது உங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஆனால் உங்களுடைய பழைய பழக்கங்களை நின்று திருத்திக் கொள்ள வேண்டும். பண ரீதியாக இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – போன் சைனா குவளை

கும்பம்

முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், அதுவும் நல்ல முன்னேற்றம்தான். எனவே புதிய சூழ்நிலைகளில் நீங்கள் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால், சிறிய சிறிய பிரச்சனைகளை நீங்கள் எளிதாக கடந்து விடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – லோகோ

மீனம்

நீங்கள் நீண்ட நாட்களாக கனவு கண்ட ஒரு விஷயம் இப்பொழுது உங்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அது மட்டுமின்றி நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து உங்களுக்கான ஆதரவும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆம்பர் ஸ்டோன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி