Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இனி இந்த ராசியினருக்கு வருமானம் அதிகரிக்குமாம்...(ஏப்ரல் 29, 2022)

தெய்வீக வாக்கு: இனி இந்த ராசியினருக்கு வருமானம் அதிகரிக்குமாம்...(ஏப்ரல் 29, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | உங்களுக்கு கூடுதலாக அல்லது புதிதாக வருமானம் வருவதற்கான வழி இன்று தொடங்க இருக்கிறது.

மேஷம்:

உங்களுக்கு கூடுதலாக அல்லது புதிதாக வருமானம் வருவதற்கான வழி இன்று தொடங்க இருக்கிறது. பணியில் புதிய செயல்முறை தொடங்க இருக்கிறது. அது உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும். உங்கள் ஆதரவில் குடும்பம் நிலைத்து நிற்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

ரிஷபம்:

எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப் போடும் எண்ணத்தை கைவிடுங்கள். வெளியிடத்தில் இருந்து கிடைக்கும் சில பயனுள்ள நுண்ணறிவு என்பது உங்களுக்கான வேலையை மிச்சப்படுத்தும். நிதி ரீதியாக உங்களை சார்ந்துள்ள ஒருவர், அதிலிருந்து விடுபட விரும்புகிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆர்சிட்

மிதுனம்:

நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்வது முதலில் மற்றவர்களது கவனத்தை பெற்றிருக்காது. ஆனால், நிச்சயமாக அதற்கு பலன் கிடைக்கும். வெளிநபர்களுடன் கிடைக்கும் தொடர்புகள் என்பது நினைத்ததைக் காட்டிலும் நல்ல பலனை கொடுக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தகப்புழு

கடகம்:

சின்ன சின்ன பிரச்சினைகள் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க கூடும். ஆனால், அதை ஒவ்வொன்றாக எதிர் கொண்டால் வாழ்க்கை எளிமையாகும். உங்கள் குழந்தைகள் சில கோரிக்கையை முன் வைப்பார்கள். ஆனால் அவை நியாயமற்றதாக இருக்கும். அதுகுறித்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல்

சிம்மம்:

திடீர் அதிர்ஷ்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், சில சமயங்களில் அது நடந்தே தீரும். இன்றைய நாள் சுலபமாக கடந்து செல்லக் கூடியதாக இருக்கும். உங்களுக்கு பரிசுகள் கிடைக்கக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமீடு

கன்னி:

இயந்திரம் போல நகர்ந்து கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைச் சூழல் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்காது. ஏதேனும் புதுமையாக ஒன்றை எதிர்பார்ப்பீர்கள். பொறுமையாக அமர்ந்து யோசித்து அதை செயல்படுத்த வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அலங்கரிக்கப்பட்ட ரிப்பன்

துலாம்:

உங்கள் வாழ்க்கையில் புதிதாக வந்துள்ள ஒருவருடன் கூட்டு சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது. வணிகத்தில் நீங்கள் காட்டும் திறன்களுக்கு பாராட்டு கிடைக்க இருக்கிறது. குறிப்பாக உங்கள் பெற்றோர் பாராட்டுவார்கள். ஏதேனும் ஒரு உறவில் நீடிக்கிறீர்கள் என்றால், அங்கிருந்து நிறைய நிபந்தனைகள் வரக்கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அலங்கரிக்கப்பட்ட விளக்கு

விருச்சிகம்:

திடீரென உங்கள் சிந்தனையில் ஏற்படும் மாற்றம் காரணமாக முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். சமூகம் சார்ந்து ஏதோவொரு பணியை செய்து வருகிறீர்கள் என்றால், அது நிறைவடைய இருக்கிறது. புதிதாக தொடங்கும் பணி ஒன்றுக்கு லேசான இடர்பாடுகள் வரக் கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செடி

தனுசு:

எந்தவொரு காரியத்தையும் இனியும் தள்ளி வைத்துக் கொண்டே சென்றீர்கள் என்றால் அது தவறான முடிவில் கொண்டு சென்று விடும். சட்ட ரீதியான விஷயங்களில் நீங்கள் தாமதத்தை எதிர்பார்க்கலாம். பிறருடன் கூட்டு சேர முயற்சி செய்தால், அது கருத்து வேறுபாடுகளில் முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரூபி சிவப்புக் கல்

மகரம்:

நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் பெற்றோர் நிராகரிக்கக் கூடும். அதற்கான காரணத்தை நீங்கள் பின்னர் உணர்ந்து கொள்வீர்கள். தற்போது அவர்கள் சொல்வதை செயல்படுத்துங்கள். உங்கள் நெருக்கமான ஒருவர் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளிப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சாலிடையர்

கும்பம்:

உங்களுடன் நெருக்கத்தில் உள்ள ஒருவர் குறித்து நீங்கள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை. கருத்து வேறுபாடுகள் காரணமாக எரிச்சல் உணர்வு ஏற்படலாம். உங்களை நீங்கள் தான் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கொட்டகை

மீனம்:

தகுந்த நேரத்தில் சரியான முடிவுகளை நீங்கள் எடுத்தாலும், அதற்குரிய பலன்கள் கிடைக்காது. நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமான ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய ஆலோசகரை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காப்பர் ஜார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி