Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (30 மே 2022) திருமண காரியங்கள் கைகூட வாய்ப்பு உள்ளது..

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (30 மே 2022) திருமண காரியங்கள் கைகூட வாய்ப்பு உள்ளது..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

சிலர் மூலமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், அந்த நபர் மட்டுமல்லாமல், அந்த சூழலையும் எதிர்கொள்ள நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நிதானம் அவசியமானது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விதை

ரிஷபம்:

தற்காலிக பந்தங்கள் முடிவுக்கு வர இருக்கின்றன. அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. கடந்த கால பிரச்னைகளை மறந்து விட்டு, புதியவற்றில் கவனம் செலுத்தவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளைப்பூ

மிதுனம்:

அலுவலக மேலாண்மையில் உள்ள மூத்த பணியாளருடன் செய்யும் விவாதம் மூலமாக உள்ளார்ந்த அறிவு மேம்படும். உங்கள் தனி வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

கடகம்:

சவால் மிகுந்த தருணத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பது பலனை தரும். உங்களைத் தேடி வந்து காதலை சொல்லக் கூடும். அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்கம்

சிம்மம்:

போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வுக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிளாஸ்க்

கன்னி:

அடுத்த வாரத்திற்கான சிறப்பான திட்டமிடுதல்களை இன்று மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய நிகழ்வு விரைவில் நடக்க இருக்கிறது. புதிய வாய்ப்பும் தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டம்

துலாம்:

சிலர் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், இதை வைத்து அவர்களை நீங்கள் எடை போடக் கூடாது. பண வரவை எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

விருச்சிகம்:

நீங்கள் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்கிறீர்கள் என்றால் அதற்கான நிதியை நீங்கள் பெறுவீர்கள். பழைய நண்பர் மூலமாக மலரும் நினைவுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிப்பி

தனுசு:

உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய ஒருவரிடம் இருந்து ஆச்சரியம் மிகுந்த செய்தி காத்திருக்கிறது. கல்யாண வரன் தேடி வருகிறது. கோடை காலத்தில் திருமணம் நடக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிவி பழம்

மகரம்:

கூட்டு தொழில் தொடங்க உங்கள் பழைய நண்பர்கள் உங்களை அணுகுவார்கள். குறிப்பாக, சாலைப் பயணத்தின் போது இது நடைபெறும். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

கும்பம்:

சில குற்றச்சாட்டுகளை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். மற்றவர் மீது நீங்கள் நல்லெண்ணம் கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர்செடி

மீனம்:

உங்களை தற்போது பாதித்துக் கொண்டிருக்கும் சூழலை எதிர்கொள்ள நல்ல அடித்தளம் உங்களுக்கு தேவை. அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி உங்களுக்கு அறிவுரை வழங்குவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பாறை
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி