ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 26, 2022) முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்..!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 26, 2022) முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 26) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பொருளாதார நிலை நன்றாக முன்னேறும். முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். இன்று சொத்து சம்மந்தப்பட்ட லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

ரிஷபம்:

இன்று சுமாரான நாள். பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் எல்லோரையும் நம்ப வேண்டாம்.

பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்:

இன்று நிதி ரீதியான ஆதரவு இருக்கும். உங்கள் பணம் உங்களுக்கு கிடைக்காமல் எங்காவது சிக்கியிருந்தால் அதை நீங்கள் பெறுவீர்கள். விவேகத்துடன் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.

பரிகாரம் - சிவபெருமானுக்கு நீர் அபிஷேகம் செய்யுங்கள்.

கடகம்:

இன்று உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாளாக அமையும், நீங்கள் எதிர்பார்த்த விதமாக நிறைய நன்மைகள் கிடைக்கும். வீட்டுக்கான பொருட்களை வாங்கிப் போடா, வசதி அதிகரிக்க செலவுகள் செய்வீர்கள். பட்ஜெட் போட்டு செலவு செய்தால் பலன் கிடைக்கும்.

பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.

சிம்மம்:

இன்று உங்கள் பழைய திட்டங்களை மீண்டும் தொடங்குவீர்கள். பண விஷயத்தில் யாரையும் நம்புவதற்கு முன் பல முறை யோசித்து செயல்படுங்கள். தடைபட்ட வேலைகள் எல்லாவற்றையுமே இன்று முடிக்கலாம்.

பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

கன்னி:

எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்கள் நிறைவேற, இன்று பணத்தைச் சேமிக்கத் தொடங்குங்கள். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களால் ஆதாயம் உண்டாகும். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, சரியான இடத்தில் முதலீடு செய்வது, நன்மைகளைத் தரும்.

பரிகாரம் - பசுவிற்கு ரொட்டி கொடுக்கவும்.

துலாம்:

வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் ஈட்டும் ஒரு ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

விருச்சிகம்:

இன்று செலவுகள் அதிகரிக்கும். உங்களின் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ள கவலைகள் உங்களை கவலைப்படுத்தும். மருத்துவ செலவுகள் ஏற்படும். இந்த நாள் சிரமமாக இருக்கும்.

பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

தனுசு:

இன்று உங்களின் அறிவாற்றலால் ஆதாயம் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும், ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கு செலவு செய்வதால் புகழ் அதிகரிக்கும்.

பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

மகரம்:

இன்று மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். உங்களிடம் கேட்கவில்லை என்றால், யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் எங்காவது சுற்றுலா சென்று வரலாம்.

பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

கும்பம்:

இன்று வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். நல்ல வருமானம் கிடைத்து, செல்வம் அதிகரிக்கும். எல்லா துறையிலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு ஆரத்தி எடுங்கள் .

மீனம்:

இன்று அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. நீண்ட காலம் கிடைக்காமல் இருந்த பணம் இன்று கிடைக்கும். இன்று அலுவலகத்தில் வாக்குவாதம் மற்றும் சர்ச்சைகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan