#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று நீங்கள் போட்டிகளில் பங்கேற்க உள்ளீர்கள் என்றால் உங்கள் ஆசிரியர் அல்லது பயிற்சியாளரின் ஆலோசனையை கவனமாக பின்பற்றுங்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டுமே இன்று சிக்கலானதாக இருக்கும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்குஅதிக வாய்ப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், விவசாயம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி சார்ந்த வணிகங்களில் உள்ளவர்கள் நல்ல வருமானம் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - பிச்சைக்காரர்களுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மனநிலை மாற்றங்கள் இன்று உங்களை தடுமாற செய்யும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. உங்கள் மனதை புண்படுத்தும் ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு முக்கிய முடிவுகளை குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே இன்று முழுவதும் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் - கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யுங்கள்
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களின் திறமை, அறிவை வெளிப்படுத்த சிறந்த நாள். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் குறிப்பாக இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களாக இருந்தால் மிக சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் அதிக லாபம் தரும். இன்றைய நாளைத் தொடங்கும் முன் குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் இட மறக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - வீட்டில் வேலை பார்க்கும் பெண் பணியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் எதிர்காலத்திற்காக இன்று சில செயல்களை துவங்குவீர்கள். அரசியல் மற்றும் கேளிக்கை துறையில் உள்ளவர்களுக்கு இன்று பயணம் செய்ய சாதகமற்ற நாள். மருத்துவம் மற்றும் விவசாயத் துறை சாதகமான மாற்றங்களைக் காணும். கூடுமானவரை இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - : பிச்சைக்காரருக்கு போர்வை தானம் செய்யுங்கள்
#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் வசீகர புன்னகை சுற்றியுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும். உங்கள் செயல்திறனின் அங்கீகாரம் மற்றும் பலன்களை பெறுவீர்கள். ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் வரலாம். மாணவர்கள் மற்றும் விளையாட்டுகளில் இருப்போர் இன்று தங்கள் கடின முயற்சிகளின் பலனாக சாதனைகளை அனுபவிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - தேவைப்படுவோருக்கு பச்சை இலை காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பயணம் மற்றும் வெற்றியைக் கொண்டாட ஏற்ற நாள். கட்டாயம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். இன்று நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள். புதிய தொழிற்சாலை அமைக்க சொத்து தேடுபவர்களுக்கு நல்ல இடம் அமையும். நடிகர்கள் மற்றும் ஊடகத்தில் பணியாற்றுவோர் வெற்றியை அனுபவிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு இனிப்பு வழங்க வேண்டும்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று நீங்கள் எல்லா விஷயங்களில் கொஞ்சம் விவேகமுடன் செயல்பட வேண்டும். விளையாட்டு மற்றும் கல்வியில் உங்கள் வெற்றிக்கு பெரியவர்களின் ஆசிகள் அவசியம். மறக்காமல் குரு மந்திரத்தை ஓத வேண்டும். மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகள் இன்று உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும். பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள, கட்சி மூத்தவர்களை ஈர்க்க அரசியல்வாதிகளுக்கு நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து எடுங்கள். வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், எனினும் நாள் முடிவில் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். அறிவை வளர்க்க அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. திடீர் பணம் அல்லது வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்று ஒரு அற்புதமான நாளாக இருக்கும். குறிப்பாக நடிகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - வீட்டு உதவியாளருக்கு ஒரு மாதுளைகளை தானம் செய்யுங்கள்
ஜூலை 3-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: டாம் குரூஸ், ஹர்பஜன் சிங், திக்மான்ஷு துலியா, பார்தி சிங், நினா குப்தா
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.