ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

செல்வவாக்கு: இன்று (அக்டோபர் 2 2022) இந்த ராசியினர் சிறை பறவைகளை விடுவித்தால் பண மழை வீட்டில் கொட்டுமாம்..!

செல்வவாக்கு: இன்று (அக்டோபர் 2 2022) இந்த ராசியினர் சிறை பறவைகளை விடுவித்தால் பண மழை வீட்டில் கொட்டுமாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (அக்டோபர் 2) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

வணிகத்தில் மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டாம். கடன் சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம். புத்திகூர்மையுடன் பணி செய்யவும். தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். தொழில்முறை முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.

பரிகாரம் - பைரவர் கோவிலில் இனிப்புகளை வழங்கவும்

ரிஷபம்:

பணியிடத்தில் நிதி சார்ந்த வேலைகளை துரிதப்படுத்தலாம். வணிகர்களுக்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மூத்தவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் துர்கா மந்திரம் உச்சரிக்கவும்

மிதுனம்:

பொருள் சார்ந்த செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இதனால் பணக் கஷ்டம் ஏற்படக் கூடும். கொள்கை விதிகளை கடைப்பிடிக்கவும். வணிகம் சுமூகமாக நடைபெறும். சிந்தனை எல்லாம் பெரியதாக இருக்க வேண்டும்.

பரிகாரம் - விநாயகருக்கு அருகம்புல் படைத்து, 108 முறை நாமம் உச்சரிக்கவும்

கடகம்:

பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். இருக்கின்ற வளங்கள் மீது கவனம் செலுத்துங்கள். சொத்து அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஏனென்றால் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிடும். வணிகத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பரிகாரம் - கிருஷ்ணருக்கு மிட்டாய் படைக்கவும்

சிம்மம்:

நிதி சூழலை மேம்படுத்த வேண்டும் என்றால் திறமையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே சாதுர்யமாக செயல்படவும். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை.

பரிகாரம் - நாய்க்கு ரொட்டி வழங்கவும்

கன்னி:

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் வணிகர்கள் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சவால் நிறைந்த காரியங்களை செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்படக் கூடும்.

பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்

துலாம்:

போட்டிகளின்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். பரிவர்த்தனைகளில் தெளிவான சிந்தனை தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் பணிவு தேவை. தொழிற்சாலை சார்ந்த வணிகத்தில் புதிய உத்வேகம் உண்டாகக் கூடும்.

பரிகாரம் - ஆலமரத்தடியில் நெய் விளக்கு ஏற்றவும்

விருச்சிகம்:

வேலையில் உள்ள நபர்களுக்கு சிறப்பான ஆஃபர்கள் கிடைக்கும். பணி செய்ய அதிக நேரம் ஒதுக்கவும். தொழில் செய்பவர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். வணிகத்தில் கட்டுப்பாடு தேவை. பொருளாதார நடவடிக்கைகள் பலப்படும்.

பரிகாரம் - சுந்தரகாண்டத்தை 7 முறை வாசிக்கவும்

தனுசு:

பொருளாதார பலன்கள் அதிகரிக்கும். நம்பிக்கை மிக உயர்வாக இருக்கும். வெற்றி மற்றும் அங்கீகாரம் ஆகியவை தேடி வரும். உங்களுக்கு சாதகமான சூழல் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். திட்டமிட்ட எண்ணங்கள் நடந்தேறும்.

பரிகாரம் - சிறை பறவைகளை விடுவிக்கவும்

மகரம்:

வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம். தடைகள் தானாக விலகி விடும். குழு மனப்பான்மை அதிகரிக்கும். பணிச்சூழல் மேம்படும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தலாம். வல்லுநர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

பரிகாரம் - விநாயகருக்கு லட்டு படைக்கவும்

கும்பம்:

தொழில்முறை விஷயங்களை தொடர்ந்து நிலுவையில் வைத்துக் கொள்ள வேண்டாம். பணிகள் சிறப்பாக இருக்கும். நெருங்கிய நபர்களின் ஆலோசனையின் பேரில் செயல்படுவீர்கள். அவமதிக்கும் நிர்வாகத்தை தவிர்க்கவும்.

பரிகாரம் - ஏழைகளுக்கு உணவளிக்கவும்

மீனம்:

அலுவலகத்தில் முழு பொறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில்முறை பணியாளர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வரவு, செலவு சீராக இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம் - தாய்க்கு இனிப்பு வழங்கவும்

Published by:Anupriyam K
First published:

Tags: Astrology, Rasi Palan