Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் முக்கிய முடிவுகள் எடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கலாம்..! (8 ஜூன் 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் முக்கிய முடிவுகள் எடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கலாம்..! (8 ஜூன் 2022)

Deiva Vaakku

Deiva Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

மேஷம்:

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட உங்களுடைய திறமை அதிகமானது. இன்று புதிதாக ஒன்றைத் தொடங்க ஏற்ற நல்ல நாளாகும். இது ஒரு புதிய முயற்சியாக இருக்கலாம், ஒரு திட்டப்பணியாக இருக்கலாம். ஆனால் அதற்கான முன் திட்டமிடலை நன்றாக செய்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- இன்டோர் பிளான்ட்

ரிஷபம்:

முடிவுகள் எடுப்பதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கலாம். ஒரு அசத்தலான ஆஃபர் இன்றைய தினத்தையே மாற்றலாம். இன்று, அடிப்படைகளை கடைபிடிப்பது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பயிற்சி செய்து வரும் அடிப்படைகளை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- செம்பருந்தி பூ

மிதுனம்:

நீங்கள் தேவையில்லாமல் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். யாருடனாவது பார்ட்னர் ஷிப்பில் இணைய நினைத்திருந்தால், அதற்கு நல்ல நேரம், ஆனால் அதற்கு முன்பு சாதக பாதகங்களை நன்றாக பரிசோதித்து கொள்ளுங்கள். எல்லா விஷயங்களையும் குறிப்பாக, உங்கள் எதிர்கால திட்டங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- மஞ்சள் நிற படிகம்

கடகம்:

நீங்கள் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகள், இப்போது வேறு ஒருவருக்கு தெரிய வரும். உணர்ச்சி ரீதியாக நீங்கள் மற்றொருவருடன் சார்ந்துள்ளீர்கள், இது நல்லதல்ல. எனவே நீங்கள் அதனை பிரிந்து சுதந்திரமாக செல்ல வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- நீல ரத்தினக்கல்

சிம்மம்:

நீண்ட காலமாக நீங்கள் சந்திக்காமல் இருந்த ஒரு நபரிடம் இருந்து அன்பான வரவேற்பு கிடைக்கும். ஆற்றல்கள் உங்களை நோக்கிச் செல்வதால், ஆடம்பரப் பொருட்களில் ஈடுபடுவதை நீங்கள் உணரலாம். உங்களைச் சார்ந்த சில நபர்கள் வெளிநாட்டிலும் விடுமுறையைத் திட்டமிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கருப்பு டூர்மலைன்

கன்னி:

உங்களை விட்டு விலகிச் செல்ல நினைக்கும் ஒருவருடைய உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் அகற்ற முடியாமல் கஷ்டப்படலாம். ஏனென்றால் ஒருவருக்கொருவர் மீது வைத்துள்ள பாசம் மிகவும் தனித்துவமானது. நீங்கள் பணத்தை கையாள்பவர் என்றால் கனவத்துடன் செயல்படுங்கள், ஏனெனில் அது நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- கோபால்ட் நீல கல்

துலாம்:

உங்கள் தலைமைப் பண்பு அதிகரித்து வருகிறது, அதை வெளிப்படுத்தியதற்காக நீங்கள் பாராட்டுக்களையும் பெறலாம். விவரம் மற்றும் பரிபூரணத்திற்கான அதிர்ஷடம் உங்களிடம் இருப்பதால், உங்களது பதவிக்கு மதிப்பைக் கொண்டுவர நீங்கள் அதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. தூரத்தில் இருந்து யாரோ ஒருவர் உங்களை பாராட்டி வருகிறார்கள். வீட்டிலிருந்து வரும் ஒரு நல்ல செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- புதர் செடி

விருச்சிகம்:

முன்னதாக உங்களுடைய வேலை செய்யும் பாணிக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பேர் இப்போது உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அது உங்களுக்காக மாற வேண்டும். பண ஆதாயம் தொடரும். நீங்கள் விரைவில் ஒரு புதிய சொத்துக்காக பதிவு செய்யலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- விதானம் (சன் ஷேடு)

தனுசு:

இவ்வளவு குறைந்த நேரத்தில் உங்கள் மனத்திறன் மற்றும் சுறுசுறுப்பால் நீங்கள் உருவாக்கிய தாக்கம், கைதட்டலுக்கு உரியது. ஒரு கூட்டாண்மை கூட பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டில் அமைதியின்மை நிலவலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- பால் கூடை

மகரம்:

இன்றை தினம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு அலைகளும் கலந்து வீசக்கூடும். அது உங்கள் எவ்வித சவாலையும், ரகசியங்களையும் கையாளும் திறனைக் கொடுக்கும். நீங்கள் மிகவும் நம்பும் ஒரு நபர், உங்களைப் பற்றி விஷயங்களை வெளியே சொல்லலாம். எனவே நீங்கள் அவர்களைச் நம்பி இருப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரைவில் சாலைப் பயணத்திற்குச் செல்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- தீவு

கும்பம்:

இன்று, உங்கள் வேலையை முடிக்க விரிவான திட்டங்களை வகுத்து வந்தீர்கள், அது தற்போது நிலுவையில் உள்ளது, மேலும் தாமதமாகவும் வாய்ப்புள்ளது. முயற்சி செய்து ஓய்வெடுக்கவும், சரியான நேரத்திற்கு காத்திருக்கவும். குடும்பம் அல்லது மனைவியிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும் இப்போது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு புதிய சைன்போர்டு

மீனம்:

உங்கள் கடந்தகால செயல்கள் குறித்து தற்போது உங்களுக்கு நிறைய குற்ற உணர்வு உள்ளது. உங்களுடன் கூட்டாளியாக இருந்த ஒருவரும் அதை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம்- விண்கல்
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி