Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்... (ஏப்ரல் 27, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்... (ஏப்ரல் 27, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சில புதிய வேலையை தொடங்க இது ஒரு நல்ல நாள்.

மேஷம் :

வரவிருக்கும் தொந்தரவுக்கு உங்களைத் தயார்படுத்தி கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடக்கலாம். நீங்கள் உங்களை பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இன்று உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தேவையில்லாமல் யாராவது உங்களை குறை கூறினால் அதனை புறக்கணிக்கவும். தற்செயலான சோதனைகள் இன்று இருக்கக்கூடும் என்பதால், பொறுமையை கடைபிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர் செடி

ரிஷபம் :

உங்கள் மனைவியிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு பயண திட்டங்கள் இருக்கும். எனவே பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுக்கு அதிக பணிகள் இருக்கும் என்பதால் திட்டமிட்டு எடுக்க வேண்டிய நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நெல்லிக்காய்

மிதுனம் :

நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய வாக்குறுதிகளுடன் கூடிய புதிய நாள், உங்கள் பண நிலைமை நீண்ட காலத்திற்கு சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வணிக வாய்ப்பை இழக்க நேரிடும். இன்று மாலை உங்களுக்கு பிடித்த ஒருவரின் திடீர் வருகை இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர்

கடகம் :

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை சம்பந்தமாக திடீர் பயணம் வர வாய்ப்பு உண்டு. கடுமையான சூழல் இருந்தபோதிலும் உங்கள் மன ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதே நேரத்தில் வழக்கமான வேலைகளில் தடைகளை உருவாக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரிய காந்தி

சிம்மம் :

உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் உங்களின் வேலையில் சில இடையூறுகளை ஏற்படுத்தலாம். வேலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். குழுப்பணிதான் இன்றைய உங்கள் மந்திரம். எனவே மற்றவர்களுடன் சேர்த்து பணியாற்றுவது நல்லது. வேலையில் வாக்குவாதம் உங்கள் நாளை பாதிக்கலாம். எனவே நாவடக்கம் அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை

கன்னி :

நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவரை நீங்கள் சந்திக்கலாம். இன்று அதிக வேலை இருப்பதால் களைப்பாக இருப்பீர்கள். குறுகிய கால திட்டமிடல் தற்போதைய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காந்தம்

துலாம் :

வெளியூர் பயண திட்டம் விரைவில் நிறைவேறும். பெற்றோருடன் சிறிது நேரம் செலவிட இது ஒரு நல்ல நாள். எனவே நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள் . உங்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். அதிக மன அழுத்தம் உங்களை சோர்வடையச் செய்யலாம். எனவே இன்று மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த இடத்திற்கு வெளியே சென்று வாருங்கள் .

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மர பெட்டி

விருச்சிகம் :

உங்கள் பழைய ஆர்வத்தை ஒருபோதும் விட மாட்டீர்கள் என்று நீங்களே சபதம் செய்யுங்கள். நீங்கள் மீண்டும் அதனை பார்க்க வேண்டிய நேரம் இது. ஆனால் இன்று மந்தமாக இருப்பீர்கள். நீங்கள் எதை தொடங்கினாலும், அதனை மெதுவாக முடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் ரோஜா

தனுசு :

தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை சிறப்பாக மாற்றும். அதனால் இன்று ஜாலியாக இருப்பீர்கள். இன்று ஒரு குறுகிய வெளியூர் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தற்போதைய உறவுக்கு சில உடனடி பதில்கள் தேவைப்படலாம். எனவே உங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுங்கள் . இன்று தானம் செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பந்து

மகரம் :

சில புதிய வேலையை தொடங்க இது ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை வாசிக்க தொடங்குங்கள். இது உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று கிடைக்கலாம். அதனால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பால்

கும்பம் :

உங்கள் வேலைகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் திடீர் சுமையை உணரலாம். உறவினர் ஒருவர் உங்களை சந்திக்க வருவார். இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது. உங்கள் உள்ளுணர்வை பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை கண்காணிக்கவும். பொறுமையை கடைபிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பசுமையான புல்

மீனம் :

சில சமயங்களில் நீங்கள் மனரீதியாக சோர்வாகவோ அல்லது ஆர்வமின்மையாகவோ உணரலாம். தற்போதைய சூழ்நிலையைப் பற்றி நீங்கள் இன்னும் நிச்சயமற்றதாக உணரலாம். உங்கள் நண்பரின் ஒரு நல்ல ஆலோசனையானது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிக முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆலமரம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி