முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 17, 2022) குட்டி ட்ரிப் செல்ல வாய்ப்பு கிடைக்கும்!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 17, 2022) குட்டி ட்ரிப் செல்ல வாய்ப்பு கிடைக்கும்!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்

ஒரு புதிய வாய்ப்பிற்கு ஓகே சொல்லும் முன்பு உள்ளுணர்வு சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்வுகளை தூண்டக்கூடிய செயல்களை கைவிடுவது நல்லது. விஷயங்களைச் சிறப்பாக செய்யவும், புதிய வாய்ப்புகளுக்கும் ஏற்ற நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நாவல்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்சத்திர பலன்கள் அனுகூலமாக இருக்கிறது. சுற்றி நடக்கும் குழப்பமான பிரச்சனைகளில் இருந்து கூடுமான வரை விலகி இருக்க வேண்டும். ஒழுக்கமைக்கப்பட்ட செயல்முறை அன்றாட பணிகளை எளிதாக்க உதவும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்கவரும் பை

மிதுனம்

தொழில் வல்லுநர்கள், பொதுச் சேவைகளில் இருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக வேலையில் பிசியாக இருக்கக்கூடும். கொடுத்த வார்த்தையின் படி சரியாக நடந்து கொள்வது பிறரிடம் மரியாதை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - இன்டோர் பிளான்ட்

கடகம்

கடந்த சில நாட்களாகவே மந்தமாக இருந்து வந்த நிலை, இன்றைய தினம் புத்துணர்ச்சி மிக்கதாக இருக்கும். உங்கள் பங்குதாரர் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். திட்டமிட்ட பணிகளை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி மேஜை

சிம்மம்

இன்று நீங்கள் தாரளமாக உதவிக்கூடிய மனப்பான்மையுடன் இருக்கலாம். பெற்றோருடன் ஆரம்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட விஷயங்கள் தற்போது சரியாக வாய்ப்புண்டு. இன்றைய தினம் உங்களுடைய படிப்படியான முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கூரை

கன்னி

சமீபத்திய முன்னேற்றங்களை பற்றி வெளிப்படையாக பேசாமல் நீங்கள் மெளனம் காப்பது, வெற்றிக்கான காரணத்தில் ஏதோ மர்மம் இருப்பது போல் பிறரை நினைக்கவைக்கலாம். எனவே இன்று ஆக்டீவாக செயல்பட வேண்டிய நாள். இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க ஏற்ற நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பெட்டிக் கடை

துலாம்

இன்று எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து, உங்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தலாம். குடும்பத்தினருடன் சந்திப்பு அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. சின்ன பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி பொருட்கள்

விருச்சிகம்

இன்று ஒரு சிறிய ஏமாற்றம் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடும், இருப்பினும் அதிலிருந்து அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறுவது நல்லது. உங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு விரைவில் கிடைக்கக்கூடும். புதிய விளையாட்டில் ஈடுபடுவது உற்சாகத்தைக் கொடுக்கக்கூடும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பூங்கொத்து

தனுசு

இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பணிகளுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் சில நல்ல ஆலோசனைகளை பரிந்துரைக்கலாம். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலையை உருவாக்க முயற்சியுங்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செய்தித்தாள்

மகரம்

இன்றைய தினம் ஒரு குட்டி ட்ரிப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மனைவியும் சிறிய பிரேக் தேவைப்படு போல் உணரலாம். முதலாளி அல்லது மேலாளரிடம் இருந்து மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படலாம், ஆனால் அதனை இப்போது மறுப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மஞ்சள் நீலக்கல்

கும்பம்

புதிய பொறுப்புகள் அல்லது பதவிகளைக் கையாள கொஞ்சம் முயற்சியும், பொறுமையும் தேவை. பிள்ளைகள் உங்களை தங்களுடைய ரோல் மாடலாக நினைக்கலாம். ஒருவரைப் பற்றிய ரகசியத்தைக் காட்டிக்காப்பது இப்போது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பாதாம் கேக்

மீனம்

நீங்கள் மிகவும் எதிர்பாராத நபரிடமிருந்து அழைப்பைப் பெறலாம். நெருங்கிய நண்பர்களின் நிறுவனத்தில் மாலை சுவாரஸ்யமாக இருக்கலாம். நிதி நிலை சீராக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நாட்குறிப்பு

First published:

Tags: Astrology, Rasi Palan