Home /News /spiritual /

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 4, 2022) பண லாபத்துக்கு வாய்ப்பு உண்டு

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 4, 2022) பண லாபத்துக்கு வாய்ப்பு உண்டு

செல்வ வாக்கு

செல்வ வாக்கு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 4) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மேஷம்:

    அன்புக்குரியவர்களின் வார்த்தை உங்கள் மனதை புண்படுத்தக் கூடும். உடல் ரீதியிலான தொந்தரவுகள் உண்டாகக் கூடும். தடைபட்டு நிற்கும் வேலைகளை நினைத்து கவலைப்படுவது இயற்கை. ஆனால், பொறுமை காக்கவும்.

    அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

    அதிர்ஷ்ட எண் - 8

    பரிகாரம் - 108 முறை ஓம் நமச்சிவாய மந்திரம் உச்சரிக்கவும்.

    ரிஷபம்:

    பிரச்சினைகள் ஒன்றன் பின், ஒன்றாக உருவாகக் கூடும். நிதி நிலைமை இன்னும் மோசமாகலாம். எதிர்பாராத நிதி இழப்பு ஏற்படலாம். ஆகவே கவனமாக செலவு செய்யவும். குடும்பத்தின் ஆதரவு ஆறுதல் தரும்.

    அதிர்ஷ்ட நிறம் - பச்சை

    அதிர்ஷ்ட எண் - 5

    பரிகாரம் - ராமர் கோவிலில் உட்கார்ந்து ராம மந்திரம் ஜெபிக்கவும்.

    மிதுனம்:

    எல்லோரையும் அரவணைத்துச் செல்ல முற்படுங்கள். சகோதரர்கள் இடையே ஏதோ காரணங்களால் பிரச்சினை உண்டாகலாம். நீண்ட காலமாக தேங்கி நிற்கும் பண வரவு கைக்கு கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

    அதிர்ஷ்ட எண் - 2

    பரிகாரம் - அனுமருக்கு நெய்விளக்கு ஏற்றவும்.

    கடகம்:

    பணி சார்ந்த வாழ்க்கையில் இன்று சிறப்பான நாளாக அமையும். லாபங்கள் கிடைக்கும். உங்களின் சிறப்புத் திட்டம் இறுதி வடிவம் பெறும். அன்புக்குரிய நபர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம் - பச்சை

    அதிர்ஷ்ட எண் - 6

    பரிகாரம் - பைரவர் கோவிலில் இனிப்பு வழங்கவும்.

    சிம்மம்:

    நீண்ட காலமாக தங்கள் இடத்தை மாற்ற நினைக்கும் மக்களுக்கு அது வெற்றிகரமாக நிறைவேறும். நிதி சார்ந்த பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

    அதிர்ஷ்ட எண் - 2

    பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் மந்திரம் வாசிக்கவும்.

    கன்னி:

    இன்றைக்கு உங்களுக்கு தோன்றும் புதிய திட்டங்கள் பணப்பலன் தருவதாக அமையும். அலுவலகத்தில் உங்கள் சீனியரின் ஆதரவை பெற முயற்சிக்கவும். குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

    அதிர்ஷ்ட எண் - 7

    பரிகாரம் - பிள்ளையாருக்கு அருகம்புல் படைக்கவும்.

    துலாம்:

    இன்றைக்கு நீங்கள் எந்தவொரு செயலை முழு மனதுடன் செய்தாலும் அதற்கான பலன் உடனடியாக கிடைக்கும். பணம் சார்ந்த இழப்புகள் இருக்கும். திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

    அதிர்ஷ்ட நிறம் - காவி

    அதிர்ஷ்ட எண் - 9

    பரிகாரம் - கிருஷ்ணருக்கு இனிப்பு படைக்கவும்.

    விருச்சிகம்:

    இன்றைக்கு உங்கள் மனம் சற்று தடுமாற்றம் அடையும். புத்துணர்ச்சி பெறுவதற்கு குறுகிய பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடவும்.

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் - 3

    பரிகாரம் - நாய்க்கு ரொட்டி வைக்கவும்.

    தனுசு:

    முன் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுகையில் கவனமுடன் இருக்கவும். குறிப்பாக அவர்களது அறிவுரையை கேட்டு முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும். உங்களைச் சுற்றியுள்ள நபர்களால் குழப்பங்கள் உண்டாகலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

    அதிர்ஷ்ட எண் - 9

    பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

    மகரம்:

    இன்றைய நாள் மிகவும் பலனுள்ளதாக அமையும். பணி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். சொத்து சார்ந்த விஷயத்தில் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக சிக்கல் உண்டாகலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

    அதிர்ஷ்ட எண் - 0

    பரிகாரம் - ஆலமரத்தடியில் நெய் விளக்கு ஏற்றவும்.

    கும்பம்:

    பொருளாதார ரீதியாக இன்று சிறப்பு மிகுந்த நாளாகும். பண லாபத்திற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்களும் இன்று துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

    அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

    அதிர்ஷ்ட எண் - 5

    பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

    மீனம்:

    இன்று மிகவும் கவனமாக இருக்கவும். வணிகத்தில் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கவலை நீடிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்ட எண் - 2

    பரிகாரம் - கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Money, Rasi Palan

    அடுத்த செய்தி