Home /News /spiritual /

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 4, 2022) பணம் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 4, 2022) பணம் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

இன்றைய ராசி பலன் - செப்டம்பர் 4, 2022

இன்றைய ராசி பலன் - செப்டம்பர் 4, 2022

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மேஷம்:

    சில நாட்களுக்கு முன் நீங்கள் எடுத்த சில முடிவுகள் இன்று பலன் தராமல் போகலாம். நிதி தொடர்பான ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். உங்கள் பழைய பிரச்சனைகள் இன்றோடு தீர்ந்து போகும். அக்கம்பக்கத்தில் உள்ள ஒருவரால் மற்றவர்கள் உங்களை பற்றி தவறாக நினைக்க கூடும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கூடாரம்

    ரிஷபம்:

    பணியில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உங்களின் சீனியர் உதவியை நாடலாம். இன்று நீங்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிட்டால், சரியான வழிகாட்டுதலை பெற்று அதன் பின் முடிவெடுங்கள். உறவில் இருப்பவர்கள் இன்று தற்காலிக கவலைகளை அனுபவிக்க நேரிடலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மழை துளிகள்

    மிதுனம்:

    சந்தேகங்கள் உங்கள் வேகத்தை குறைக்க கூடும். ஒரு தனி பயணத்திற்கு நீங்கள் இன்று திட்டமிடலாம். நம்பிக்கைக்குரிய தொழில்முனைவோர் ஒருவர் தனித்துவமான வாய்ப்பு அல்லது சலுகையுடன் உங்களை தேடி வரலாம். இழுத்து கொண்டே போகும் என்று நீங்கள் நினைத்து விரக்தியடைந்த ஒரு விஷயம் சட்டென்று எளிதாக இன்று முடியலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஃப்ரெஷ் பெயின்ட்

    கடகம்:

    நேற்று வரை உங்களுக்குள் இருந்து வந்த உற்சாகம் இன்று குறையலாம். எனவே உங்களை நீங்களே உற்சாகமாக வைத்து கொள்வது இன்று தேவைப்படும். மனதளவில் நீங்கள் அடைந்துள்ள வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கிரிஸ்டல் தெரபி

    சிம்மம்:

    நீங்கள் ஒரு வெற்றிகரமான வணிகத்தை பற்றி நீண்ட நாட்களாக கனவு கண்டிருந்தால் அதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான வேலையை இன்று விரைவுபடுத்த ஏற்ற நாள். இன்று குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் அமைதியின்மையை உண்டாக்கும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிட்காம்

    கன்னி:

    புதிதாக ஒன்றை தொடங்க நீங்கள் தீர்மானித்திருந்தால் அதற்கான தீவிர முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும். இதற்காக இன்று நீங்கள் அதிகமான நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் யோசனைகளை வெளி நபர்களிடம் பகிர வேண்டாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மாடர்ன் ஆர்ட் பெயின்டிங்

    துலாம்:

    வேலை பார்க்கும் இடத்தில நீங்கள் கவனமாக உங்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் அவரை புறக்கணிப்பதாக உணரலாம். முன்பு உங்களுக்கு ஆதரவாக இருந்த ஒருவர் இன்று தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்த கூடும்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ஸ்பூன்

    விருச்சிகம்:

    முக்கியமான விவகாரத்தில் கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முடிவை பற்றி நீங்கள் இன்று யோசோதிப்பதில் நேரத்தில் செலவிட நேரிடலாம். அடுத்தவர் விஷயங்களில் இன்று தலையிடாதீர்கள். நீங்கள் நீண்ட காலமாக செயலாற்றி வரும் சில திட்டங்கள் இன்று முழுவடிவம் பெறுவதற்கான நேரம். இன்று தியானம் உங்கள் மனகவலைகளை போக்கலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பாட்டில் ஓப்பனர்

    தனுசு:

    பல நாட்களுக்கு பிறகு இன்று நிம்மதியாக இருப்பதை போல உணர்வீர்கள். உங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த இன்று தயக்கம் கொள்ளாதீர்கள். இன்று சில செல்வாக்கு மிக்க நபர்களை நீங்கள் சந்திக்கலாம். ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க அழைக்கபடலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

    மகரம்:

    உங்களின் நேர்மையான மற்றும் உண்மையான அக்கறையாலும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் கவருவீர்கள். உங்கள் குடும்பத்தில் மூத்தவர் ஒருவரிடமிருந்து நல்ல செய்தியை நீங்கள் கேட்கலாம். அதிக பொறுப்புகளை இன்று ஏற்று கொள்ள வேண்டாம். ஏனென்றால் அனைத்தையும் குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாது.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்

    கும்பம்:

    உங்கள் திறன்களை மேம்படுத்த மற்றும் அறிவை விரிவுபடுத்த இன்று சிறந்த நாள். மருத்துவரிடம் செல்வதை தவிர்க்க உங்கள் ஆரோக்கியத்தில் இன்று முழு கவனம் செலுத்துங்கள். உங்களை விட வயதில் இளையவர்களுக்கு உங்கள் உதவி இன்று தேவைப்படலாம்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மனதை அமைதிபடுத்தும் இசை

    மீனம்:

    சில நேரங்களில் நீங்கள் ஒருவரின் உணர்ச்சிகளை பேச்சு அல்லது செயல் மூலம் புண்படுத்துகிறீர்கள். அது இன்று மிகவும் குறைக்கப்பட வேண்டும். உங்களை பற்றி வரும் சில ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்று கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்ள முயற்சிகளை செய்யுங்கள். உங்களிடம் இருக்கும் செல்வம் மற்றும் வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தாலும், எப்போதும் நிதானமாக நடந்து கொள்ள தவறாதீர்கள்.

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிம்பொனி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி