மேஷம்:
உங்களை சுற்றியுள்ள ஆற்றல் குழப்பம் ஏற்படுத்துவதாக அமையும். ஆகவே, நீங்கள் முயற்சி செய்யும் எந்த வேலையையும் முடிக்க முடியாது. சிலரின் கவனத்தை ஈர்க்க புதிய வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஃபோட்டோ
ரிஷபம்:
நீங்கள் புதிய வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கும். உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்கள் உணர்வுகள் என்ன என்பதை பிறருக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்ட்போர்டு
மிதுனம்:
புதிய வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் அல்லது இலக்கை அடைய முயற்சி செய்கிறீர்கள் என்றால் உண்மையான முயற்சி இப்போது தேவை. உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணை சரியான யோசனையை சொல்வார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தனி செயல்பாடு
கடகம்:
தொழில்துறையைச் சேர்ந்த மூத்தவரின் அறிவுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். காதல் உறவில் உள்ளீர்கள் என்றால், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கட்டுரை
சிம்மம்:
உங்களைச் சுற்றியுள்ள சிலரால் உங்களுக்கு தொந்தரவுகள் ஏற்படக் கூடும். உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தாலும், நீங்கள் தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றம் வேண்டும். வணிகத்தில் தடைகள் நீங்கி வளர்ச்சி காணப்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோலர்
கன்னி:
உங்கள் எதிர்கால உத்திகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்புற உதவியை நீங்கள் நாடக் கூடும். உங்களுக்கான பணப் பலன்கள் மீண்டும் கிடைக்க இருக்கின்றன. வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேன்கூடு
துலாம்:
உங்கள் திறமைக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பை நீங்கள் தேடிக் கொண்டிருக்கலாம். அது உண்மை என்றால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மூலம் அதற்கான ஆலோசனை கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு மலர்
விருச்சிகம்:
கடந்த காலங்களில் எடுத்த முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது என்பதை நீங்கள் இப்போது அல்லது தாமதமாக உணருவீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற நம்பிக்கை அதிகரிக்கும். நேர் கோட்டில் பயணம் செய்வதற்கான நேரம் இது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஐஸ்க்ரீம்
தனுசு:
கடந்த கால உறவுகளில் நீங்கள் மேற்கொண்ட சின்ன, சின்ன நடவடிக்கைகள் என்பது துன்பத்தில் கை கொடுக்கும் மீட்பர்களாக அமையும். வேலைகள் கொஞ்சம் சிரமமானதாக இருந்தாலும் சமாளிக்கலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செடி
மகரம்:
வணிக முதலீடுகளில் நல்ல பலன் கிடைக்க தொடங்கும். உங்களுடைய கவலைகள் பார்ட்னர் மூலமாக பெரிய அளவுக்கு குறையும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் மனம் தெளிவானதாக இருக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாவல்பழம்
கும்பம்:
வீட்டை விட்டு வெளியூரில் வசித்து வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு வீட்டு நினைப்பாகவே இருக்கும். ஆனால், அது தற்காலிகமானதே. அன்புக்குரிய ஒருவரின் மோசமான நடத்தை காரணமாக நீங்கள் எரிச்சல் அடையக் கூடும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பானை
மீனம்:
புதிய பணியிடம் தொடர்பாக நண்பரிடம் இருந்து சரியான பரிந்துரை கிடைக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பில் எதிர்பார்த்த முடிவுகள் வர வேண்டும் என்றால், அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தவும். குறுகிய பயணம் புத்துணர்ச்சி தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டுத்துணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Rasi Palan